திங்கள், 12 நவம்பர், 2018
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: பணியாளர் நலத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் 471 அரசுப்பள்ளிகளில் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம்- அமைச்சர் செங்கோட்டையன்
வேலூர்: தமிழகம் முழுவதும் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
10வது மாநில மாநாட்டிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க முடிவு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க இருப்பதாக மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமையில், பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சண்முகநாதன், மதனா எழிலரசன், வரதராசன் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து சென்று செயல்பட்டு வந்த ஜாக்டோ-ஜியோ கடந்த 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்துள்ளதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழுவினரையும் ஆசிரியர் மன்றம் பாராட்டுகிறது.
மேலும் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், பழைய ஒய்வூதியத் திட்டத்தையே அமுல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்ட அநீதியை நீக்குதல், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 50க்கும் மேற்ப்பட்ட அமைச்சுப் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்குதல் பள்ளிகளிலும், 5000 அரசு பள்ளிகளை மூடுவதை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் டிசம்பர் 12ம் தேதி முதல் ஈடுபடுவது என ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ எடுத்துள்ள முடிவை ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் 3 வகையான ஊதியம் வழங்குவதால் மத்திய அரசு ஊதியத்தைவிட மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்படும் வகையில் அநீதியை இழைத்துள்ளது. அக்கோரிக்கையை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர நியமிக்கப்பட்ட ஒரு நபர்க்குழுவின் பதவிகாலம் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை அறிக்கை தராத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யமுடியாது என அறிவித்திருப்பது விதிமுறைகளுக்கும் மரபுக்கும் மாறானது மட்டுமல்ல அக்குழுவை அச்சுறுத்தி தன் கருத்தை அறிக்கையாக தருமாறு வற்புறுத்தும் அதிகார வரம்பு மீறுதலாகும். அவ்வாறு வரம்பு மீறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கஜா புயல்~ தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட்...
சென்னை: கஜா புயலால் வரும் 15-ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கு கஜா என்ற பெயரை தாய்லாந்து வைத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலசந்திரன் கூறுகையில் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
நவ.15-ஆம் தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே முற்பகலில் புயல் கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வரை பலமான காற்று வீசும்.14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் மழை பெய்யும் அதுபோல் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-ஆம் தேதி முதல் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே நவம்பர் 12-ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பவர்களும் 12-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.
சென்னைக்கு கிழக்கே 930 கி.மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது. வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக் கூடும்.
தீவிர புயலாக மாறினாலும் கரையை கடக்கும் போது தீவிரம் குறைந்த புயலாக மாறும். வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பான மழை அளவு 26 செமீ. தற்போது வரை 20 செ.மீ. பெய்துள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
ஞாயிறு, 11 நவம்பர், 2018
டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர்
கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் இனி ஆஃப்லைனிலும் யூஸ் பண்ணலாம்.
செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல்
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின்போது, சில நேரங்களில் விரல் ரேகை பதியவில்லை, புகைப்படம் சரியாக விழவில்லை என்று சிறு காரணங்களை கூறி பத்திரம் பதியாமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. மேலும், சார்பதிவாளர்கள் விரல் ரேகை பதிவை கேட்கும் போது பொதுமக்களுக்கும் பல நேரங்களில் சந்தேகங்கள் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கவும் பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மை இருக்கும் வகையில், பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும், ஆவண பதிவை தெரி ந்து கொள்ளும் வகையில் இரட்டை திரை சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னையில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த இரட்டை திரை சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சிஸ்டம் நவம்பர் 30ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும், கூறுகையில், வங்கிகளை போல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் முன்பதிவு ெசய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 51 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த டோக்கன் சிஸ்டம் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.