திங்கள், 26 நவம்பர், 2018

அரசியலமைப்பு சட்ட தினம் ~26.11.2018~ உறுதி மொழி…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக் குழுக் கூட்டம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக்குழுக் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் 25.11.18 (ஞாயிறு)பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு 
மன்ற இணையக்குழு அமைப்பாளரும்,
மாவட்டத்துணைச்
செயலாளருமான மெ.சங்கர் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் நிறைவுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்
பங்கேற்ற ஆசிரியர் மன்ற 
சமூகவலைதள
செயற்பாட்டாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் தொழில் நுட்பங்களைக் கையாண்டு ஆசிரியருக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது,தகவல்களை
பரிமாற்றம் செய்துகொள்வது  என்று முடிவாற்றப்பட்டது. மேலும்
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு  
கல்வி சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள் மேற்கொள்வது என்றும் , ஆசிரியர்மன்றப் பணிகள் 
மேற்கொள்வது என்றும் முடிவாற்றப்பட்டது. கூட்ட முடிவில் சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் கா.செல்வம் நன்றி கூறினார்.

🌷🌷🌷Prevention and control of Diphtheria -certain instructions issued by the Director of published health and preventive medicine, Chennai -regarding


ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.



அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக் தினமும் கொண்டு செல்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர். இதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்தும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மேலும் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் இந்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதன்படி  ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

என்சிஆர்டி தெரிவித்துள்ளபடி மொழிப்பாடங்களை தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒரு போதும் நடத்துதல் கூடாது. அதேபோன்று கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்துதல் கூடாது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருத்தல் கூடாது. 3,5 வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ வரையிலும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல் கூடாது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிகளை ஏற்று லட்சத்தீவுகள் அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கு கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

பள்ளி மாணவர்களிடம் அதிகம் பேசுங்கள் -- அவர்கள் அறிவுதிறன் கூடும்

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் ஆசிரியரா? பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

குட்டித் தூக்கத்தால் மூளை ஸ்மார்ட்
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.

தாய்மொழியில் குழந்தைகளை படிக்க வைப்பதால்  கற்பனைதிறன், கலைநயம்,சிந்தனைவளம் போன்றவை கிடைக்கின்றன.

தாத்தா பாட்டிகள் கதைகளை கூறக்கேட்ட குழந்தைகள் தனிதிறனுடன் இருப்பதை காணலாம். இதில் தாய்மொழியும்,குழந்தைகளுடன் கலந்துபேசுதல்களும் ஏற்படுவதால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

📱தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்டம்~Mobile App...

முதுநிலை படிப்பு படிக்கும் பெண்ணுக்கு மத்திய அரசு கல்விஉதவிதொகை விண்ணப்ப தேதி 30-11-2018


பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு




 பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்கள் விவரங்களை ஏற்கனவே அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019ம் தேர்வு எழுத்தவுள்ள பிளஸ்2 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வுஅறைகள் தொடர்பான விவரங்கள் அதற்கான உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்தத்தக்க செயலாகும். 
இனி காலம் தாழ்த்தாமல் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மெத்தனபோக்கை தவிர்க்க வேண்டும். உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக பெறப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள்


ஈரோடு:  கணினி அறிவியல் பாடத்தில் தமிழக அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  பாடங்கள் உள்ளன. இதே பாடப்பிரிவுகள்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் உள்ளது. மேல்நிலை பள்ளிகளில் அதாவது பிளஸ் 1 வகுப்பு சேரும்போது மட்டுமே கம்ப்யூட்டர் தொடர்பாக படிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ்  என்ற தனி குரூப் உள்ளது. 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்த அறிமுகம் இணைப்பு பாடமாக மட்டுமே உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி பயன்பாடு இல்லாத இடங்களே  இல்லை. ஆனாலும், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா மாணவர்களும் கணினி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, கணினி அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அரசியல்  காரணங்களுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து கணினி அறிவியல் பாடத்தை எவ்வித காரணமும் இன்றி நீக்கிவிட்டது. இதனால் பல லட்சம் செலவிட்டு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் குப்பையில்  வீசப்பட்டன. அதேசமயம், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஒரு தனிப்பாடமாக உள்ளது. அண்டை மாநிலம் மற்றும் தனியார்  பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணினி அறிவு இல்லாமலேயே தங்களது பள்ளிக்கல்வியை தொடர்கின்றனர். கணினி குறித்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு  புகட்டப்படவில்லை. கணினி பற்றிய தகவல் தெரியவேண்டுமானால், மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்க செய்யும் செயலாகவே உள்ளது  என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


அலுவலக உபகரணங்களை பெறுவதற்கு - தனியார் பள்ளிகளை நாடும் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அரசு நிதி ஒதுக்காததால் அவலம்