வியாழன், 6 டிசம்பர், 2018
தமிழ் வளர்ச்சியும் அதற்கான முயற்சியும்...சிறப்பு கட்டுரை
தமிழ் வளர்ச்சி குறித்து நாமும் பேசுகிறோம். தொடர்ந்து குரல் கொடுத்து, கொடிபிடித்து, ஊர் கூடித் தேரிழுக்கும் உன்னத லட்சியத்தை மறந்து எப்போதாவது மட்டுமே இடைவரும் ‘பேசு பொருளாக’ அல்லது கொஞ்சிக் குலவுவதற்கென்றே வளர்க்கப்படும் ‘செல்ல பிராணியாக அவ்வப்போது தமிழ் வளர்ச்சி குறித்து ஆதங்கப்படும் ஒரு பாசாங்கு சமூகமாகவே உள்ளது தமிழ் சமூகம். குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது சிலருக்கு தமிழ் முழுமையாகவே மறந்து போகிறது.
லோகேஷ், விகேஷ், பிரனேஷ் இப்படிப் போகிறது, நம் தமிழ்க் குழந்தைகளின் திருநாமங்கள். கம்பன் காலத்திலிருந்து இன்று வரை தமிழறிஞர்கள் ஒருவரை யொருவர் கசப்புடனும் காழ்ப்புணர்வோடும் பார்ப்பதை கைவிடவில்லை. வீதிக்கு வீதி தமிழ் அமைப்புகள், பேரியக்கம், சோலை, பட்டறை எனும் பெயர்களில் மிளிர்கின்றன. ‘தனி மரமே தோப்பாகும்’ எனும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வரும் விகார குழுக்கள் இவை.
பரப்பளவில் சென்னையை விட சிறியதான சிங்கப்பூரில் ஆங்கிலம், மலாய், மாண்டரின்(சீனம்), தமிழ் நான்கும் ஆட்சி மொழிகள். ஐரோப்பாவின் குட்டி நாடான பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் மூன்றும் ஆட்சி மொழிகள். 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரொமானிஷ் என நான்கும் ஆட்சி மொழிகள். 120 கோடி இந்தியர்களுக்கு இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் திணிக்கும் முயற்சி தொடர்கிறது. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது? 1950-ல் ராஜஸ்தான் மாநில அரசு ஓர் அவசரச்சட்டம் இயற்றி ராஜஸ்தானியை நீதி மன்ற ஆட்சி மொழியாக்கிட குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது. 18 நாள்களில் ஒப்புதல் கிடைக்கப் பெற்று ராஜஸ்தானி அம்மாநிலத்தின் ஆட்சி மொழியாயிற்று . இதே போன்று. 1969-ல் உத்தரப்பிரதேசம், 1971-ல் மத்தியப்பிரதேசம் 1972-ல் பீகார் தங்கள் தங்கள் மாநில மொழிகளை உயர் நீதிமன்ற ஆட்சி மொழிகளாக்கி விட்டன.
தமிழர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தமிழ் எப்போது உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாகும்? 43 மொழிகளுக்கு தாயாக இருக்கிறது தமிழ்மொழி! செனகல் மொழியில் 21 சதவீத தமிழ் சொற்கள். இந்த மாபெரும் பெருமைகள் நிலைத்திட நாம் என்ன செய்யவேண்டும்? நவீன தேவைகளுக்குரிய கலைச் சொற்களைக் கொண்டு தமிழில் புதிய அகராதிகள் வெளிவரவேண்டும். பிற மொழி சொற்களை குறிப்பாக ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்ப்பதை விடுத்து சொல்லின் பொருள் பயன் சார்ந்த புது சொற்களை உருவாக்கிடல் வேண்டும். அச் சொற்கள் எளிமையானவையாக இருத்தல் வேண்டும். ஒரு பொருளை அடையவேண்டுமெனில் முதலில் அதை விரும்ப வேண்டும்.
நல்ல உணவை ரசித்து, ருசித்து உண்பது போல் தாய் மொழியின் செழுமையை, மாண்பினை, பேச்சில், எழுத்தில் கையாளவும் வேண்டும். முடிந்தவரையில் பிறமொழிச் சொற்களை பேச்சிலும், எழுத்திலும் தவிர்த்தல் வேண்டும். குழந்தைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை அன்பாக உணர்த்திப் புரிய வைக்கவேண்டும்.
எந்த அந்நிய மொழியைப் படித்தாலும் ஒவ்வொரு சொல்லையும் தாய்மொழியில் உள்வாங்கி மொழி பெயர்த்து தானே புரிந்து கொள்கிறோம். இதனை மனதில் இருத்தல் வேண்டும்.யுனெஸ்கோவின் ஆய்வுகள் கூறுவது, இன்று உலகில் உள்ள பயன்பாட்டு மொழிகள்: 7105 இந்தியாவில் உள்ள மொழிகள் 880. உலகஅளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்து போக வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் 8-வது இடத்தில் உள்ளது.
தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பவை, சொந்த மக்களால் புறக்கணிக்கப் படுதல். ஆதிக்க மொழிகளால் (அவை சிறுபான்மை மக்களால் பேசப் பட்டாலும்) நசுக்கப்படுதல், பயன்பாடின்றி ஒதுக்குதல் மற்றும் தாய்மொழியை தாழ்த்திப் பேசுதல் என்பதாம்.குறைகளைக் களைந்து, நிறைவை நோக்கிப் பயணப்படுவோம். சிந்தனை செம்மைப்பட்டால், செயல் அதன் அடி தொடரும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
- பேராசிரியர் க.குருநாதன், செம்பனார்கோயில்
அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்மாதிரி பயிற்சி வகுப்பு - கலெக்டர் ஆசியா மரியம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்மாதிரி பயிற்சி மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 3-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை முன்மாதிரி பயிற்சி மற்றும் குறுகிய காலப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
முன்மாதிரி பயிற்சியானது அனைத்து துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் தாசில்தார்கள் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள்.
அதேபோல் 5 முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் குறுகியகாலப் பயிற்சியானது கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் மற்றும் தேர்வுநிலை உதவியாளர் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படும். இதில் அலுவலக நடைமுறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
நடைமுறைகளை தெரிந்து கொள்ள உதவும். இது அரசு அலுவலர்கள் அலுவலக நிர்வாகத்தில் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், அலுவலக நடைமுறைகளை திறம்பட தெரிந்து கொள்ளவும் உதவும். இப்பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை உங்களுடன் பணிபுரியும் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களையும் நல்ல திறமையான ஆளுமை பெற்றவர்களாக்கி மாவட்ட நிர்வாகத்தினை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.
இதில் ஆய்வுக்குழு அலுவலர் துரைராஜ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் தரமான சத்துணவு வழங்கப்படவில்லை பெற்றோர் புகார் - அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 137 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் வண்டுகள் கிடப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றோர் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி மாணவ-மாணவிகளுக்கு தரமான சத்துணவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி பள்ளிக்கூடத்தில் தரமான சத்துணவு வழங்குவது இல்லை என பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ் தலைமையில் சுமார் 50 பேர் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் மகேந்திரன், நியூகோப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் தாசில்தார் மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தரமான சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சத்துணவு அறைக்கு சென்ற தாசில்தார் மகேந்திரன் அங்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து கணக்கிட்டார். பின்னர் இனி வரும் காலங்களில் தரமான சத்துணவு வழங்கப்படும். அவ்வாறு இல்லை எனில் சம்பந்தப்பட்ட சத்துணவு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று பெற்றோர் கலைந்து சென்றனர். இது குறித்து தாசில்தார் மகேந்திரன் கூறியதாவது:-
சமைத்து வைத்திருந்த சத்துணவு பரிசோதிக்கப்பட்டது. மேலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்து இனி வரும் காலங்களில் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி விடுமுறைக்கு புதிய கட்டுபாடுகள் - கல்வித்துறை செயலாளர் உத்தரவு
சாதாரண மழை மற்றும் தூறல் போன்றவற்றிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. மேலும் மாவட்டம் முழுவதும் விடுமுறை விடாமல் கடுமையாக பாதிக்கப்படும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் கனமழை பெய்யும் நாட்களில் கலெக்டர்கள் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர்.
மழையை காரணம் காட்டி அதிகளவில் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களுக்கான உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கலெக்டர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மழையின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் விடுமுறை அறிவிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: சாதாரண மழை நேரத்திலும்கூட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதை உணராமல் உள்ளனர். புயல் எச்சரிக்கையின்போது புயலின் வலுவின் தன்மை அறியாமல், வழக்கமான அறிவிப்புகள்போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். புயலின் முதல்நாள் நிலையை கருத்தில் கொள்வதில்லை. மழை வரும் என்று எதிர்பார்த்து இதுபோல விடுமுறை அறிவிக்கும் போது, அந்த நாளில் வெயில் நிலவுவதாக தகவல் வருகிறது.
புயல் நிவாரணப் பணிகளின் போதும், சமுதாயக் கூடங்கள், சேவை மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இருந்தும் அரசுப் பள்ளிகளே முதல் இலக்காக வைக்கப்பட்டு புயல் நிவாரண மையங்களாக அறிவிக்கப்படுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட தேர்வுகள், அதிக நாள் விடுமுறைகளால் வேறு நாட்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால், விடுமுறை அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய விழகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.
* மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே மழை காரணமாக விடுமுறை விடவேண்டும். தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை விடக்கூடாது.
* பள்ளியை திறப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மழைக்காலத்தில் நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது சுற்றியுள்ள எந்த பகுதியில் விடுமுறை அறிவிப்பது என்பது பற்றியும் கலெக்டருக்கு தெரிவிக்கலாம்.
* மழைக்கான விடுமுறை அறிவிக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி மாவட்ட அளவில் உள்ளாட்சி பகுதி அளவில்கூட விடுமுறை அறிவிக்கலாம்.
* கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் வேலை நாட்களையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
* விடுமுறை அறிவிக்கப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடுசெய்ய வேண்டும். பாடத்திட்டம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு எவ்வளவு விரைவாக பள்ளிகளை திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து காலதாமதம் இன்றி திறக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் & டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும்
வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும்போது தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது அவர்கள் செய்யும் தவறுகளில் போக்குவரத்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது.
மூன்று முறைக்கு மேல் ஒரே தவறை செய்யும் பட்சத்தில் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற விதிகள் இருந்தும் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பாக நவம்பர் 19ம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது என்றார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

பான் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்...
பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது.
பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் கொண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.
🌷புதிய 5 விதிகள்...
1 )குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.
2) நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
3) மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.
4 )கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.
5 )வங்கி கணக்கு துவக்கவோ,வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.
சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு...
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் மீதான ஆட்சேபனைகளை தேர்வர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு...
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும்10- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)