திங்கள், 23 செப்டம்பர், 2019

தொடக்கக் கல்வி_TRB மூலம் 2008ல் ஆங்கில பாடப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



பருவமழை காலங்களில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை எவை?- இயக்குநர் செயல்முறை, நாள் 23:09:2019





How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*

*🌷How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*


*இந்த வார (23.09.2019 முதல் 29.09.2019 வரை) கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*

*Login செய்தவுடன், Assign Holidays என்பதில் Full School என்பதை தேர்வு செய்து, 24 முதல் 29 வரை Term 1 Exam Holidays என ஒவ்வொரு நாளுக்கும் உள்ளீடு செய்து Save தரவும்.*

*Copy time table ல் முதல் Option ஆக உள்ள Master time table ஐ ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.*

*Create weekly time table க்கு சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து, வலது புற ம் கீழே உள்ள Save தரவும். ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save தரவும்.*

*view teacher time table க்கு சென்று, time table சரியாக உள்ளதா? என சரிபார்த்து Logout செய்யவும்.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயற்குழுக் கூட்டம் (22.09.19)...

தமிழ்நாடு 
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின்
நாமக்கல் மாவட்டச்
செயற்குழுக்
கூட்டம் 22.09.19 (ஞாயிறு)பிற்பகல் 04.45 மணிக்கு திருச்செங்கோட்டில் மாவட்டத்துணைச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையிலும்,மாநிலத்தலைமைநிலையச் செயலாளர் திரு.பெ.பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது .
மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசன் தீர்மானங்களை முன்மொழிந்து விளக்க உரையாற்றினார். ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை களை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்) அன்று நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில் முழுமையாகப்பங்கேற்பதென இக்கூட்டம் முடிவாற்றியது.
தகவல்: இர.மணிகண்டன்,
கபிலர்மலை.

"எமிசு" இணையதளத்தில் அதை ஏற்று, இதை ஏற்று என்று அவ்வப்போது கொடுக்கும் 'டார்ச்சர்ச்சு", நெருக்கடிகள் , இதனால் உருவாகும் மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள், மனக்கொந்தளிப்புகள் பதட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

அன்பானவர்களே!வணக்கம்.
"எமிசு" இணையதளத்தில்  அதை ஏற்று,இதை ஏற்று என்று  அவ்வப்போது  கொடுக்கும் 'டார்ச்சர்ச்சு", நெருக்கடிகள் , இதனால் உருவாகும் மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள், மனக்கொந்தளிப்புகள்
பதட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

கணினி இயக்குவதில் சிரமம் உள்ளோர்,
இணைய வசதி இணைப்புகள் இல்லாத சிக்கலில் உள்ளோர்  என பள்ளித்தலைமையாசிரியர்களின் நடைமுறை பிரச்னைகளை நன்கு அறிந்துள்ள கல்வித்துறை அலுவலர்கள் குறுவளமையத்திற்கு, 
வட்டார வளமையத்திற்கு ,வட்டாரக்கல்வி அலுவலகத்திற்கு அழைத்து அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், அலுவல எழுத்தர்கள், கணினி இயக்குபவர்கள் ,
எமிசு பணிக்கு என்று பொறுப்பாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாசிரியர்கள்  ஆகியோரை இப்பணியில் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஈடுபடுத்தி, அலுவலர்களின் மேற்பார்வையில்,வழிகாட்டுதலில்  இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்திடுவதே சிறப்பானதாகும் .எமிசு பணியை இவ்வாறே நடைமுறைப்படுத்திட  வேண்டுமென்றே கல்வித்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வேண்டுகிறது. வட்டாரக்கல்வி அலுவலரின் வாட்ச்அப் குழுக்களில் , வளமைய வாட்ச்அப் குழுக்களில், சிஆர்சி மைய வாட்ச்அப் குழுக்களில் மணிக்கொருமுறை ஒட்டுமொத்த மாவட்ட நிலவரங்களை வானிலை அறிவிப்புகள் , தேர்தல்கால வெளியீடுகள் போன்று மேலிருந்து வருவதை கடமையே என்று பார்வேர்ட்  தகவலைப் பதிவிட்டு  முன்னணி, பின்னணி நிலவரங்களை பரப்பி பீதி கிளப்புவதை கைவிடுவது அல்லது நிறுத்திக்கொள்வது கெளரவமானதாகும்;
நாகரீகமானதாகும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கருதுகிறது. 
ஒரு சிஆர்சியில் உள்ள ஒரு பத்து தலைமையாசிரியர்களை  அலைபேசியில் அழைத்து ஓரிடத்திற்கு வரவழைத்து அல்லது பள்ளிதோறும் கைத்தேர்ந்த நிபுணர்களை அனுப்பிவைத்து  இன்றைய,அன்றாடப்  பணிகளைக் கூறி, 
தகவல்கள் தந்து பதிவேற்றிட வேண்டிய விபரங்களைத் தெரிவித்து ,இதன் அவசிய,
அவசரங்களைத் விளக்கி,
பள்ளித்தலைமையாசிரியர்களின்  சிரமங்களைக் கேட்டறிந்து , அதற்கேற்றவாறு சமயோசிதமாக முடிவெடுத்து , ஆலோசனைகள் வழங்கி  எமிசு பணிகளை நிறைவாக்குவதற்கு, இணையதளப்பணிகளை நிறைவு செய்வதற்கு  முயற்சிக்காமல், யோசிக்காமல் மாவட்ட அளவிலான பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை மட்டும் மணிக்கொரு முறை பார்வேர்ட் செய்து கடமையை தட்டிக்கழிப்பது, தலைமையாசிரி்யர்களை மட்டும் பொறுப்பாக்குவது  சிறந்த செயலாகாது. தலைமையாசிரியர்களிடம் வேலை வாங்கி விட வேண்டும் என்று அதிகார மனநிலையில் , தலைமையாசிரியர்களை பதட்டத்தில் வைத்திருப்பதாக , அச்சமூட்டுவதாக கருதிக் கொண்டு கல்வித்துறை அலுவலர்கள் வெறும் பார்வேர்ட மெசேசு மட்டும் பகிர்ந்து கொண்டிருத்தால் ,ஒரு காலத்தில்  இவர்களையும் மேற்சொன்ன இந்த தொற்றுகள் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள ளது; ஆபத்துள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
நாமக்கல் மாவட்ட அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.
கல்வித்துறையின் நிர்வாக அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள், பார்வை அலுவலர்கள் பதட்டத்தில் இருப்பது துறைக்கு நல்லதல்ல. காலமறித்து கூவும் சேவலைப் போன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கூறுகிறது. எல்லோரும் இணைந்து  பணியாற்றுவதே ,கடமையாற்றுவதே கல்வித்துறைக்கு நல்லதாகும். இதைச்செய்தாது பதட்டச்சூழ்நிலையை உருவாக் குவது,  
மன அமைதியை சீரழிப்பது பொருத்தமான செயலாகாது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,நாமக்கல் மாவட்ட அமைப்பு தெரிவிக்கிறது.

தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக! ~ தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம்…

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக!

 தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம். 

தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசூழியர்கள், பணியாளர்கள் தங்களது வாழ்வாதரமான கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகளின் வழியில் , 
அகிம்சை நெறியில்  தங்களை வருத்திக்கொள்கிறார்கள். 
தங்களது வாழ்வாதாரத்திற்காக தங்களை தாங்களே வருத்திக்கொள்ளும் பட்டினிப்போராட்டத்தின் கோரிக்கைகளை தமிழகரசு விரைந்து நிறைவேற்றிடும் வகையில் பட்டினிப்போர் பெருந்திரள் பங்கேற்பும்,
பங்களிப்பும் நிறைந்ததாக, சக்தி்மிக்கதாய் இருக்க வேண்டுமல்லவா?!இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?!என்கிறீர்களா?!
தாங்கள், வேறொன்றும் செய்திட வேண்டியதில்லை.

 தங்களுக்கு இருக்கும் எல்லாவிதமான ,
முக்கியமான வேலைகளையும்,
பணிகளையும், அலுவல்களையும் 
சற்று தள்ளிவைத்து விட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு,
ஒத்திவைத்துவிட்டு  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வியின் நலன்களையும்,
ஆசிரியர் ,அரசூழியர்,
பணியாளர்கள்  
இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமைகளை பாதுகாத்திடுவதற்கும்,
பறிபோகும்  உரிமைகளை தடுத்து நிறுத்தி காத்திடுவதற்கும் 
எதிர்வரும் 22.09.19 (செவ்வாய்) அன்று  நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில்  ஒருநாள் பங்கேற்றிடுங்கள்.  தற்போதைக்கு 
இப் பங்கேற்பும், பங்களிப்புமே போதுமானதாகும்.
   
தற்போது நம்முன்னுள்ள முதற் பெரும் பணியும்,
கடமையும் இதுவே என்று மனதில் நிறுத்தி நாமக்கல்  பட்டினிப்போராட்டத்தில்  பங்கேற்று பங்களிப்புச் செய்து சக்திமிக்கத்தாக்குங்கள் !
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர், 
ஜாக்டோ-ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்,
முன்னாள் சட்டமேலவை உறுப்பினர்,
ஆசிரியரினக்காவலர்,
பாவலர்.திரு.க.மீ்.,அவர்களின் அறைகூவலை ஏற்று நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள் , ஆற்றல்மிகு மன்ற மறவர்கள், மறத்தியர்கள் பெருந்திரளாக பங்கேற்று 
நாமக்கல் பட்டினிப் போராட்டத்தை வலுப்படுத்துங்கள்!வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லுங்கள்! என்றே அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்.