திங்கள், 28 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சர்வதேச அனிமேஷன் தினம் இன்று.*

*அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், தற்போது அனைத்துலக மக்களின் விருப்ப தேர்வில் ஒன்றாக திகழ்கிறது.*
*வெகு வேகமாக வளர்ந்து வரும் 3D தொழில்நுட்பமும், அனிமேஷன் துறையை சார்ந்தது தான். இந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.*

*1892இல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.*
*சமீப காலங்களாக இந்நாள் 50க்கும் மேற்பட்ட நாடுகளால் கொண்டாடப்*
*படுகின்றன. UNESCOவின் ஒரு அங்கமான சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம்(International Animated Film Association-* *ASIFA), 2002இல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.*
*இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.*

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம் இன்று.*

*கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளி ஆவார்.*
*🎇அக்டோபர் 27, வரலாற்றில் இன்று*
-------------------------------------------------
*உலக ஒலிஒளி பாரம்பரிய தினம் இன்று.*
*(World Day for Audiovisual Heritage)*

*யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.*

*🎇🍥💥💐தீபாவளி வாழ்த்துக்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*
*🎇அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*காலாட்படை தினம் இன்று.*

*இத்தினம் இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது.*

*சுதந்திரம் பெற்றபின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமானநிலையத்தை கைப்பற்ற தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றனர்.*

*இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*

தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் -& தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம்.


தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விழாக்கால இனிய வாழ்த்து.💐🙏
-முருகசெல்வராசன்.




சனி, 26 அக்டோபர், 2019

*🌷அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து.*

*அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க* *மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
*சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.* *இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும்,* *ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம்.*
*ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை.* *எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.*
*இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும்,* *வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.*
*இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது.* *இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.*
*மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும்.*
*தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால்,* *அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர்.*
*ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
------------------—------------------------------
*பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி பிறந்த தினம் இன்று.*

*இந்திய பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பதேபூரில் பிறந்தார்.*

*இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த இவர்,*
*விடுதலை போராட்ட இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.*

*இவர் புகழ்பெற்ற பிரதாப் என்ற ஹிந்தி செய்தித்தாளின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் ஆவார்.*


*பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி லாகூர் மத்திய சிறையில் ஆங்கிலேயே அரசினால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அதற்கு அடுத்து மார்ச் 24ஆம் தேதி அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் முழு கடை அடைப்பை நடத்த முயன்றனர். தொடர்ந்து இந்து மற்றும் இஸ்லாமிய கும்பல்களால் நடந்த வன்முறை மற்றும் பதில் வன்முறையால் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கான்பூரே சூறையாடப்பட்டது.*

*அதற்கடுத்த ஆறு நாட்கள் மார்ச் 30 வரை இரு மத வழிப்பாட்டு தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த வன்முறையில்தான் ஐக்கிய மாகாண காங்கிரசு அமைப்பின் (United Province Congress Committee) தலைவரும் பகத்சிங்கின் நண்பரும் தீரமிக்க விடுதலை போராட்ட வீரருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) தன்னுடைய இன்னுயிரை இழந்தார். மார்ச் 25ஆம் தேதி வன்முறையினால் பற்றிக்கொண்ட நெருப்பிலிருந்து அப்பாவி இந்து மற்றும் முஸ்லீம் மக்களை காப்பாற்றும் முயற்சியின் போது அந்த துயரம் நடந்தேறியது.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*மிர்துலா சாராபாய்*
*நினைவு தினம் இன்று.*

 *மிர்துலா சாராபாய் ( 6 மே 1911 -  26 அக்டோபர் 1974) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.*

 *அகமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.*

*அம்பாலால் சாராபாய், சரியா தேவி  அவருடைய பெற்றோர்கள்.*

*இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரி ஆவார்.*

*இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குஜராத் வித்யாபீத்தில் சேர்ந்து இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு, உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*தனி நாடாக இருந்த ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று (1947).*


*அதை ஆண்ட மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான கையெழுத்தை இட்ட தினம்இன்று.*

*மார்ச் 16, 1846ல் காஷ்மீரை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பிறகு ஜம்முவை ஆண்டு கொண்டிருந்த குலாப் சிங் என்பவருக்கு காஷ்மீரை விற்றனர். ஹரி சிங், குலாப் சிங்கின் கொள்ளு பேரனாவார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
 *பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினம் இன்று (1977).*

 *இந்த நோய் சோமாலியாவில் உள்ள ஒருவருக்கு கடைசியாக வந்ததாக அறியப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.*

*எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தபின்னர் பெரியம்மை நோயின் தாக்கம் உலகில் குறைய ஆரம்பித்தது.*