திங்கள், 25 நவம்பர், 2019

நவம்பர் 25,
வரலாற்றில் இன்று.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்
படுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்
படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாக பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.



டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

 பாதிக்கப்படும் பெண்களுக்கு
எதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

 1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் தெரிவுசெய்யப்பட்டது.

அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

ஞாயிறு, 24 நவம்பர், 2019

நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.


கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு
“கோயம்புத்தூர்”
அதன் தலைநகரான தினம் இன்று(1804).

மைசூர் அரசிடம் இருந்த கோயம்புத்தூர், திப்பு சுல்தானின் மறைவுக்குப்பின், ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது.


 இன்றையதினம் “கோயம்புத்தூர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.

படிவளர்ச்சி தினம் இன்று (Evolution Day).

படிவளர்ச்சி  தினம் என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட   நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

1859ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார். படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பிப்ரவரி 12 டார்வின் தினம் எனக் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.

 நாவலாசியரும், பெண்ணிய
வாதியுமான அருந்ததி ராய் பிறந்த தினம் இன்று (1961).

அருந்ததி ராய்  மேகாலாயாவில் பிறந்தவர் . கேரளத்தில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு டெல்லியில் கட்டிடக் கலை பயின்றார் .

 திரைக் கதை மற்றும் சிறந்த நாவல்களை எழுதிய இவர் , பெண்ணடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் .

அரசியல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வரும் நிலையில் , அடுத்து நாவல் எழுதும் நோக்கில் உள்ளார் .

அருந்ததி ராய் முதன் முதலில் எழுதிய "த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்" என்ற நாவலுக்கு இந்தியாவின் முதல் ‘புக்கர்’ பரிசை பெற்றுள்ளார் . ஆனால் , தனக்கு வழங்கிய சாகித்ய அகாதமி பரிசை மறுத்து விட்டார்.
நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.

 சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கிய தினம் இன்று(1969).

நிலவில் விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகளை செய்யும் அமெரிக்காவின் எண்ணத்தின்படி 'அப்பல்லோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அப்பல்லோ 12 அமெரிக்காவின் ஆறாவது விண்பயணமாகும். நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வரிசையில்  இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது.

நிலவில் தரை இறங்கிய பின்பு குழுவின் தலைவர் சார்லசு பீட் கன்ராட் , விமானி ஆலன் எல். பீன் ஆகிய இருவரும் நிலவின் தரைப்பரப்பில் திட்டமிட்ட ஆய்வுகளை முடித்தனர். மற்றொரு விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார்.

நிலவுப்பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும் அதற்கு முன் ஏவப்பட்ட சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்து வருவதும் இதன் திட்டமாக இருந்தது.

குறிக்கோள்கள் அனைத்தும், வெற்றிகரமாக முடிவடைந்த பின்பு, நவம்பர் 24, 1969 அன்று அப்பலோ விண்கலமானது  பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கியது.

சனி, 23 நவம்பர், 2019

மத்திய அரசு உதவி தொகை திட்டம் - பள்ளி விவரங்களை NSP இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 15.11.2019



பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி துறை புதிய ஆணையர் தலைமையில் அனைத்து சங்க பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - அனைத்து சங்கங்களும் (26.11.19) கலந்து கொள்ள அழைப்பு - இயக்குநர் செயல்முறை


நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.

அரியலூர் மாவட்டம் மீண்டும் உருவாக்கப் பட்ட தினம் இன்று (2007).

 ஜனவரி 1, 2001 ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.

ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மீண்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.



X-கதிர்களை பயன்படுத்தி தனிமங்களின்
அணு எண்களை கண்டறிந்த ஹென்றி  மோஸ்லே பிறந்த தினம் இன்று(1887).
நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.


அரியலூர் ரயில் விபத்து நடந்த தினம் இன்று(1956).



சென்னையிலிருந்து இரவு 9.50 க்கு புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
விடியற்காலை (tiruchy) அரியலூரை நெருங்கியபோது மழையினால் சேதமடைந்திருந்த மருதையாறு பாலம் மீது செல்லுகையில் நிகழ்ந்தது இந்த விபத்து.

இவ்விபத்தில் 142 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

110 பேர் பலத்த காயமடைந்தனர்.

பலரது உடல்கள் கிடைக்கவே இல்லை.

கடைசி வரை அடையாளம் காணாத 60 உடல்கள்
ஒரே குழியில் புதைக்கப்பட்டன.

அப்போது ரயில்வே துணை அமைச்சராக இருந்தவர்
தமிழகத்தை சேர்ந்த ஒ.வி.அழகேசன்.


இவ்விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே கேபினட் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.