திங்கள், 2 டிசம்பர், 2019

டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று


 மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் பிறந்த தினம் இன்று.

இவர் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தசோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். உணவுப் பழக்கங்களே இதற்குக் காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ந்தார்.

குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தசோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதற்காக வில்லியம் மர்பி, ஜார்ஜ் விப்பிள் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1934இல் பெற்றார்.

வாழ்நாள் முழுவதும் ரத்தசோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கியவருமான ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார்...
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

Email சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று.


வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ் நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும், தொழில் முனைவோரும் ஆவார்.

 இவர் மின்னஞ்சல் ("EMAIL") என்று பெயரிட்டு பெயருக்கு காப்புரிமை எடுத்த மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள் (Email Management System) உருவாக்கியதற்காக அறியப்படுகிறார்.


இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார்.
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் இன்று.
(International Day for the Abolition of Slavery)


அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.
 ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

உலக கணினி கல்வி தினம் இன்று.
(World Computer Literacy Day)


கணினியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.


தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் இன்று.
(National Pollution Control Day)

போபால் விஷவாயு கசிவு டிசம்பர்
2ஆம் நாள் இரவு , 1984 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது . இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இடம் பெற்ற நச்சு வாயுக்கசிவில் (Bhopal gas tragedy)
3800 பொதுமக்கள் உடனடியாக இறந்தனர் . 1,50,000 முதல் 6,00,000 பேர் வரையில் காயமடைந்தனர் . இது உலகின் மிக மோசமான விசவாயு கசிவாகக் கருதப்படுகிறது .
இதனால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இன்றைக்கும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் . பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர் . இந்த போபால் விஷவாயு பேரிடரால் தங்கள் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் இழப்பை நினைவு கூறும்பொருட்டு, மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 2ஆம் தேதி தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம் அனுசரிக்கப்படுகிறது .

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

💪ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து டிச. ஆம் தேதி ஆா்ப்பாட்டம்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பணி நீக்கம் செய்வதை கண்டித்து டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.எத்தனை போராட்டங்கள் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து, அரசு பேசவில்லை. மாறாக போராட்டங்களில் ஈடுபட்டதிலிருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

பணி நீக்கம் செய்வது, பதவி உயா்வை பறிப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இன்னமும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டிசம்பா் 4ஆம் தேதி மாவட்ட ஒன்றியத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோவு என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வேண்டுகோளாகும் என்றாா்.

TN EMIS செயலி மூலம் TNTP -ல் உள்நுழைவது...

இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்...

```TN-EMIS APP```
⬇️
```INPUT- USERNAME ->```
(Aadhar last 8 digit)

```PASSWORD ->```
(Aadhar last 4 digit@birth of year)

⬇️
```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

Kindly Follow this steps and use TNTP...

TN-EMIS APP (0.0.7 UPDATE )...

Respected Sir/Madam, Sync issue faced in new TN-EMIS app is fixed. Kindly update your app through the below link or play store to get the latest fixed version. 

Please check TN-EMIS message section for official updates from EMIS team Thanks, EMIS Team.

Click here for update...
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

மக்கள் எழுத்தாளர் இன்குலாப் நினைவு தினம் இன்று.


இன்குலாப்  தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.


சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


'உலக எய்ட்ஸ் தினம் இன்று.

ஒரு தினத்தை நினைவுப்படுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும்.

 மருத்துவம், தொழில்நுட்பம் என பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு.


 முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.