திங்கள், 9 டிசம்பர், 2019

அரையாண்டு பொதுத் தேர்வு/இரண்டாம் பருவத்தேர்வு 2019 வழிகாட்டல்கள் - CEO T.malai


2019-2020ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை





NMMS தேர்வு தேதி 15.12.2019- அரசு தேர்வுகள் இயக்ககம்


🔴🔴 தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் _ எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல் அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.

சோனியா காந்தி பிறந்த தினம் இன்று.

இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள். தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்னரும், அரசியலில் சேர விரும்பாமல் இருந்த அவர், 1997 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்தார். அதன் பின்னர், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். ஒரு வெளிநாட்டவராக இருந்து, காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால ஆட்சியில் இருப்பவர் என்று வரலாறு படைத்த அவர், ‘உலகிலேயே மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணி’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். பரம்பரைப் பரம்பரையாக காங்கிரஸில் இருந்து வரும் நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினாராக மாறிய சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், சாதனைகளையும் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 09, 1946

பிறப்பிடம்: லூசியானா, வெனிடோ, இத்தாலி

பணி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சோனியா காந்தி அவர்கள், இத்தாலியில் உள்ள வெனிடோப் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் விசென்ஸாவில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாக டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

சோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே அவரது குடும்பம், இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தது. இதனால், தனது பள்ளிப்படிப்பை, ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது, தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.

இல்லற வாழ்க்கை

1965 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்தார், அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அவர்கள், சோனியா காந்தியை ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால், மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த அவர்கள், 1968 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணமானவுடன் சோனியாவை இந்தியா அழைத்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள், அவரது இல்லத்திற்கே அவரைத் துணிவாக அழைத்துச் சென்றார். அவர்களின் திருமணத்தை இந்திராகாந்தியும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர். இந்திராகாந்தியின் மறைவுக்கு முன்னரும், 1982 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி பொறுப்பை ஏற்றப் பின்னரும், எந்தவொரு பெருமிதமும் இல்லாமல் இல்லத்தரசியாகவே இருந்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

பிரதம மந்திரியின் மனைவியாக மாறிய பின்னர், தனது கணவருக்குத் துணையாக அரசியலிலும் ஈடுபட எண்ணிய அவர், 1984ல், அமேதியில் ராஜீவை எதிர்த்து போட்டியிட்ட அவரது தம்பி மனைவியான மேனகா காந்திக்கு எதிராக, தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் முதன்முதலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், அரசியலில் நுழையாத சோனியா அவர்கள், அவரது மரணத்திற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து தொய்வடைந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரின் வேண்டுதலின் பேரிலும், 1997ல் அரசியலில் இறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மாறிய சோனியா அவர்கள், அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே, அக்கட்சித் தலைவர் பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற இடத்தில் போட்டியிட்ட அவர், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ – தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்
டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.


 புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பிறந்த தினம் இன்று (1608).

இவருக்கு சிறு குழந்தையில் இருந்தே கண்கள் தெரியாது. இரண்டு கண்கள் உள்ள நாமே சில வார்த்தைகளை சரியாக எழுத முடியாமல் திக்குமுக்காடும் நிலையில் ஒரு பார்வை இல்லாத மனிதர் உலகத்தின் மிகப் பெரிய இதிகாசங்களை மொழிபெயர்த்து எழுதி இருக்கிறார்.


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால் அதற்கு பதில் ஜான் மில்டன்  என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளர்.தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.
டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.

பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினம் இன்று (1979).
டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.


 இந்தியாவின் முதல் பெண் போட்டோ கிராஃபர் ஹோமை வியாரவல்லா பிறந்த தினம் இன்று.

ஒரு நாட்டின் வரலாற்றை... ஒரு மாமனிதனின் வாழ்க்கையை வார்த்தைகளால் வர்ணிக்கலாம், ஓவியங்களால் எழுதலாம், சிலைகளால் வடிவமைக்கலாம். புகைப்படங்களாலும் பேசவைக்கலாம் என நிரூபித்தவர், இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஹோமை வியாரவல்லா.

1840இல்தான் போட்டோகிராஃபி இந்தியாவுக்கு வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்வேயராக நியமிக்கப்பட்ட மெக்கென்சி,
கேமரா தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார். அரசாங்கத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்த கேமராக்களை, 1910இம் ஆண்டுவாக்கில் ஒரு சில ஆண்கள் மட்டும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தினர்.

போட்டோகிராஃபி என்பது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கருவியின் உத்தி என்பதைத் தாண்டி, இயற்கையின் உயிர்ப்பைப் பிரதி எடுப்பது... இரண்டு நபர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது... ஒரு நிகழ்ச்சியைப் பதிவுசெய்வது...  உண்மையை நிரூபிப்பது என்ற பல அர்த்தங்களைத் தன் புகைப்படங்கள் மூலம் எடுத்துகாட்டியவர்தான், வியாரவல்லா.

ஹோமை வியாரவல்லா, குஜராத்திலுள்ள நவசாரி என்ற இடத்தில் 1913 டிசம்பர்  9இல் பிறந்தார். இவரது தந்தை உருது-பார்சி நாடகக் கம்பெனியின் நடிகர். 13 வயதிலேயே இவருக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது மேற்படிப்பை மும்பையில் முடித்தார். ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரித் தோழர் மானக்க்ஷாவை மணந்தார். புகைப்படம் எடுப்பதில் தணியாத தாகம் கொண்ட கணவர் மானக்ஷா தந்த பேராதரவு உற்சாகம் அளிக்க, தன் பணியை மேலும் சிறப்பாக்கிக்
கொண்டார். மும்பை 'பெண்கள் கிளப்' சுற்றுலாக் குழுவை, இவர் எடுத்த முதல் புகைப்படம், 'மும்பை கிரானிக்கல்' என்கிற பத்திரிகையில் 1930இல் வெளிவந்தது. அதற்காக இவர் பெற்ற தொகை, ஒரு ருபாய்.

இந்திய விடுதலைக்கான போராட்டக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் புகைப்படங்களாகத் தன் கேமராவுக்குள் பிடித்தவர் இவர்.

1947 ஆகஸ்ட் 15இல் மௌன்ட்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது எடுத்த புகைப்படம், செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் முதல் கோடியேற்றத்தை 1947 ஆகஸ்டு 15இல் புகைப்படமெடுத்ததோடு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம், மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கில் எடுத்த புகைப்படங்கள், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் ஜான் கென்னடியும் இருக்கும் புகைப்படம், முதல் குடியரசு தின அணிவகுப்புப் படங்கள் என ஹோமை எடுத்த புகைப்படங்கள் சரித்திரப் புகழ் வாய்ந்தவை.

ஹோமையின் வாழ்க்கை இன்றைய ஊடகப் பெண்களைப்போல எளிதாக வாய்த்ததல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவில், வெகு சில பெண்களே கல்விபெற வாய்ப்பிருந்த காலத்தில், தன் கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தனது சேவையைத் தொடங்கினார். "6 பவுண்டுக்கு மேல் எடைகொண்ட கேமராவைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி, பத்திரிகைகள் கேட்கும் விதங்களில் படங்களை எடுத்துக்கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல" என வியாரவல்லாவே கூறியுள்ளார். பார்சி இனப் பெண், துணிச்சலுடன் இந்தத் துறையைத் தேர்தெடுத்து சாதித்தது ஆச்சர்யம்.

தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக இவர் பதித்த புகைப்பட முத்திரைகள், இந்தியாவின் சமூக அரசியல் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் நமக்கு இன்றும் நினைவுட்டும் விதமாகத் தொடர்கிறது. மௌன்ட்பேட்டன் பிரபுவின் நினைவுகளை மௌனமாய்ப் பேசும் இவரது புகைப்படத் தொகுப்புகளோடு, 1959இல் தலாய் லாமா கால்பதித்த சுவடுகளையும் இவர் கேமரா பதிவு செய்யத் தவறவில்லை. இந்திய-பாகிஸ்தான்  பிரிவினையில் வாக்களிக்க வந்த  எலிசபெத் ராணியைப் புகைப்படமாக்கிய பெருமையும் ஹோமைக்கு உண்டு. ஆண்களின் மத்தியில் தனித்துத் தெரியும்படி நிகழ்ச்சிகளின் முகப்பில் நின்று துணிச்சலுடன் புகைப்படம் எடுத்த அந்த நாளில், எதிர்கால இந்தியாவின் ஆவணங்களாய்  அந்தப் புகைப்படங்கள் மாறப்போகிறது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை.

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனில் தனது புகைப்பட ஜர்னலிஸ்ட் பணியைத் தொடர்ந்ததோடு, வெளியிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்துள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கும் ஹோமையை, ''மிகச்சிறந்த போட்டோஜெனிக் பர்சனாலிட்டி' என்று நேரு குறிப்பிட்டுள்ளார். இவர் எடுத்த அந்த அரிய படங்கள் எல்லாம் அரசு ஆவணக் காப்பகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புகைப்படக்கலைஞராக 1938இல் தொடங்கிய பயணத்தை, 35 ஆண்டுகள் தளராமல் தன்னிறைவோடு பயணித்தார்.