வியாழன், 12 டிசம்பர், 2019

டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

👉 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

👉 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிக பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தினம் இன்று(1911).

1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

18,19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.

1911ஆம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

1920களில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.

1947இல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.

On Dec 12, 1911, Delhi replaced Calcutta as the capital of India

  • டிசம்பர் 12,

வரலாற்றில் இன்று.

முதன்முதலில் கம்பியில்லாச் செய்தி அனுப்பப்பட்ட தினம் இன்று (1901).

இத்தாலியைச் சேர்ந்த  மார்க்கோனி அட்லாண்டிக் கடல் பரப்பில், இன்றைய கனடாவின் நியூ
ஃபவுண்ட்லேண்டுக்கும்,இங்கிலாந்தின் கான்வெல்லுக்கும் இடையில் 1901 டிசம்பர் 12இல் கம்பியில்லாச் செய்தியை அனுப்பி, தொலைத் தொடர்புத் துறையில் இமாலயச் சாதனை செய்தார். இன்றைக்குள்ள எல்லாத் தொலைதொடர்புக்கும் இந்தக் கண்டுபிடிப்பு முன்னோடியானது.

அறிவியலின் மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

 ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கான மூலவர், ஒரு இந்தியர். இன்னும் சொன்னால், அவர் மார்க்கோனிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு உரித்தானவரும்கூட. அவர்தான் சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.

தாவரவியல், இயற்பியல் ஆகிய இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பைக் கண்டுபிடித்தவர் இவர்தான். அதற்கு ஐந்தாண்டுளுக்குப் பிறகுதான் மார்க்கோனி தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார். ஜெகதீஸ் சந்திர போஸின் கண்டுபிடிப்பு அப்போதிருந்த ஆங்கிலேய அரசால் பரிந்துரை செய்யப்பட வில்லை

ஆசிரியர்களின் செய்திறன் முன்னேற்றத்திற்கு வழிகாட்டல் pindics முறை மற்றும்emis இணையத்தில்பதிவேற்றம் செய்தல் முறைமைகள்







புதன், 11 டிசம்பர், 2019

குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு ~ நேர்முக தேர்வு 23ம் தேதி தொடக்கம்…


சிபிஎஸ்இ உள்ளிட்டவற்றில் படித்தவர்கள் பிளஸ்2 தேர்வு எழுதலாம் ~ அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு...


ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது~மெ.சங்கர்






அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பஞ்சாப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு  வழங்கப்பட்ட விருதுகளும் சான்றுகளும் அவரின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது.
_மெ.சங்கர்
டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.

 முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று.

பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம்.(சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).

டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர்.

இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான்.

என்றாவது ஒருநாள்  பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு  ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.

அதுமட்டுமல்லாமல்  காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும்
 பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?
டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF ) நிறுவப்பட்ட தினம் இன்று.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
வகை :- உதவிவழங்கும் அமைப்பு
சுருக்கப்பெயர் :- UNICEF
தலைமை:- ஆன் வெனீமன் Ann Veneman
நிறுவப்பட்டது:- 1946
இணையதளம்:- http://www.unicef.org
மேல் அமைப்பு:- ECOSOC

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிரந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர்                  நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.

முக்கிய இலக்குகள்

யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.

1. பெண் பிள்ளைகளின் கல்வி
2. ஏற்பூசி ஏற்றல் (Immunisation )
3. எச்.ஐ.வி/எய்ட்ஸ்
4. சிறுவரின் பாதுகாப்பு
5. சிறார் பருவம் (Early childhood)
இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.


சர்வதேச மலைகள் தினம்
(World Mountain Day)

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபையால் 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.