வியாழன், 12 டிசம்பர், 2019
புதன், 11 டிசம்பர், 2019
ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது~மெ.சங்கர்
அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளும் சான்றுகளும் அவரின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது.
_மெ.சங்கர்
டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று.
பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம்.(சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).
டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர்.
இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான்.
என்றாவது ஒருநாள் பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும்
பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF ) நிறுவப்பட்ட தினம் இன்று.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
வகை :- உதவிவழங்கும் அமைப்பு
சுருக்கப்பெயர் :- UNICEF
தலைமை:- ஆன் வெனீமன் Ann Veneman
நிறுவப்பட்டது:- 1946
இணையதளம்:- http://www.unicef.org
மேல் அமைப்பு:- ECOSOC
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிரந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
முக்கிய இலக்குகள்
யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
1. பெண் பிள்ளைகளின் கல்வி
2. ஏற்பூசி ஏற்றல் (Immunisation )
3. எச்.ஐ.வி/எய்ட்ஸ்
4. சிறுவரின் பாதுகாப்பு
5. சிறார் பருவம் (Early childhood)
இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

சர்வதேச மலைகள் தினம்
(World Mountain Day)
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபையால் 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.
தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.
இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது.
இவர் 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ் பெற்ற பாடல்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.
'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்திய மானுடம் பாடவந்த மகாகவி தன்னுடைய 39 வது வயதில் (1921) இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்...

EMIS ONE APP NEW UPDATE VERSION 0.0.12...
1. When a user logs out, the User ID used to login in previously will be retained for easier login.
2. Teachers can login using the newly provided Teacher ID to access TNTP.
3. Performance improvements to enhance speed of the application.
4. Maternity Leave option added to Staff Attendance.
Student and Staff Attendance should be marked through UDISE Login only.
5. This version will check for latest updates and prompt the user to update to the latest version, when connected to the internet.
Click here for update...
யார் எந்த user I'd & Password பயன்படுத்த வேண்டும்?
TNTP ல் உள்ள கற்றல் வளங்களை TN - EMIS செயலியில் பார்வையிட ஆசிரியர்கள் தங்களது புதிய user I'd & Password பயன்படுத்துங்கள்.
மாணவர்கள் வருகைப்பதிவை TN-EMIS செயலியில் பதிவிட வகுப்பாசிரியர்களின்
EMIS user I'd& password ஐ பயன்படுத்தவும்.
ஆசிரியர்கள் வருகைப்பதிவை TN-EMIS செயலியில் பதிவிட தலைமையாசிரியர்களின்
EMIS user I'd& password ஐ பயன்படுத்தவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)