சனி, 30 மே, 2020
*🌸வாடிக்கையாளரிடமிருந்து வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு.புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்:*

*வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு, புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.*
*நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தினக் கூலி தொழிலாளர்கள், மாத சம்பளதாரர்கள் என, அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பலர், அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.வங்கிகளில், வீடு, வாகனம், கல்வி ஆகியவற்றுக்காக கடன் வாங்கியவர்கள், இந்த மாத, இ.எம்.ஐ., எப்படி செலுத்துவது என கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்தத் தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.*
*இந்த விஷயத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்குவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையை வாடிக்கையாளர்கள் எப்படி பெறுவது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கும், எந்த வங்கியும் ஆர்வம் காட்டவில்லை.*
*இந்நிலையில், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில், வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து, இந்த மாத, இ.எம்.ஐ., பிடித்தம் செய்யப்பட உள்ளது. எனவே, போதிய அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்' என, நினைவூட்டல், எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. இது, கடன் வாங்கியவர்களிடையே, குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.*
*இது குறித்து வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, 6 மாதங்களுக்கான கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள், 'இ.எம்.ஐ., பிடித்தத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என, கடன் வாங்கிய வங்கிகளுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில், கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து, அதற்கான தொகை, தானாகவே பிடித்தம் செய்யப்படும்.ஒத்திவைப்பு இந்த 6 மாத, இ.எம்.ஐ., தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என கூறப்பட்டது.*
*இந்நிலையில் வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.*

*☀பல்வேறு முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தை 0.40 சதவீதம் வரை குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது*

*பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பல்வேறு முதிா்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.*
*எஸ்பிஐ சென்ற மே 12-ஆம் தேதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித குறைப்பை அறிவித்தது.*
*இந்த நிலையில், ஒரே மாதத்தில் தற்போது இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 7-45 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி 3.30 சதவீதத்திலிருந்து 2.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*
*அதேபோன்று, 180-210 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியும் 4.80 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்கும் குறைவான நிரந்த வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.50 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 5-10 ஆண்டு முதிா்வு கால டெபாசிட்டுகளுக்கும் வட்டி விகிதம் 5.70 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் புதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.*

*☀WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் வாட்சாப் கணக்கை ஹேக் செய்ய ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்.ஹேக் செய்வதைத் தவிர்க்கும் வழிமுறைகள்.*
*☀WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் வாட்சாப் கணக்கை ஹேக் செய்ய ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்.*
*வெரிஃபிகேஷன் என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*

*வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யும் மோசடி தொழில்நுட்ப குழுக்களுக்கு, அந்த கணக்குகளின் சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படுகிறது. எனவே இந்த சரிபார்ப்பு குறிகளை பெறுவதற்கு மோசடி குழுக்கள் பல சதி திட்டங்களுடன் உங்களை நெருங்குகிறது. சரி., இதை எவ்வாறு தவிர்க்கலாம்?*
*வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும். கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இதனால்தான் ஏராளமான மோசடி செய்பவர்களும் ஹேக்கர்களும் வாட்ஸ்அப் செயலியால் ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது வாட்ஸ்அப் மூலமக ஒரு புதிய வகை மோசடி தொடங்கி உள்ளது. வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவினர் போல நடிக்கும் சிலர், ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கின் சரிபார்ப்புக் குறியீட்டை அதாவது வெரிஃபிகேஷன் கோட் - ஐ பகிருமாறு கேட்கிறார்கள்.*
*பயனர்கள் தங்கள் வலையில் விழுவதை எளிதாக்குவதற்காக,* *மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் லோகோவை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்துகின்றனர்.* *இருப்பினும், பேஸ்புக்கிற்கு சொந்தமான ஏஜென்ட் ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலம் பயனர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறுகிறது.* *மேலும், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில் மூலமாகவே அனைத்து பொது அறிவிப்புகளையும் செய்து வருகிறது.*
*ஒரு ட்விட்டர் பயனர் வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர் என சொல்லிக் கொண்டு புதிய எண்ணிலிருந்து செய்தி வந்தபோது, இந்த மோசடி தொடர்பாக ஒருவர் புகாரளித்தார். உலகெங்கிலும் உள்ள அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டுவருவதற்காக இந்த ட்வீட்டை WABetaInfo பகிரங்கப்படுத்தியுள்ளது.*
*மோசடி செய்ய முயன்றவர் ஸ்பானிஷ் மொழியில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக டேரியோ நவரோவின் ட்வீட்டர் செய்தி கூறுகிறது. பயனர்கள் தங்கள் ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டு எண்ணை வழங்குவதன் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்குமாறு எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவார்கள்.*
*இந்த சரிபார்ப்புக் குறியீடு என்பது புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்யும்போது, பயனர்களின் தொலைபேசிக்கு வரும் OTP தான். பயனர் இந்த OTP ஐ வேறொருவருக்குக் கொடுத்தால், அவர்கள் அதை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்து உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்யக்கூடும்.*
*இதன் மூலம் உங்கள் சமீபத்திய அரட்டைகள் மற்றும் நட்பில் உள்ளவர்களுடன் அவர்கள் அணுக முடியாது என்றாலும், ஹேக் செய்த பிறகு நமது மொபைலுக்கு வரும் அல்லது பெறப்படும் எந்த செய்தியும் அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டு விடும். அதுமட்டுமல்ல, உங்கள் சுயவிவரப் படம், நிலை மற்றும் நீங்கள் இணைந்துள்ள குழுக்கள் தொடர்பான அனைத்தும் மோசடியாளர்களுக்கு கிடைத்துவிடும். அதிலிருந்து பல எண்களை மோசடி செய்பவர் எடுத்து பயன்படுத்த முடியும்.*
*இத்தகைய மோசடிகளிலிருந்து விலகி இருங்கள். எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் நிறுவனம் ஒருபோதும் கேட்பதில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, ஒருபோதும் OTP ஐ வேறு யாரிடமும் பகிரவேண்டாம்.*

*🌸பள்ளிக்கல்வித்துறையில் பள்ளிப் பாடங்களை குறைக்கலாமா?அல்லது பாடத்திட்டங்களை குறைக்கலாமா?என ஆலோசனையில் பள்ளிக்கல்வி கமிஷனர் தலைமையில் ஆய்வுக்குழு..*
*🌸பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு..*
*சென்னை : பள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர்.*
*அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம் நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர்.*
*பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.*

*🌐மே 30, வரலாற்றில் இன்று:புகழ்பெற்ற தமிழ்த்துறவி,* *பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்* *நினைவு தினம் இன்று*
மே 30, வரலாற்றில் இன்று.
முருகனை வழிபட்டுவந்த
புகழ்பெற்ற தமிழ்த்துறவி,
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
நினைவு தினம் இன்று
( 1929 ).
இவர் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய “சண்முக கவசம்” பெரும் புகழ்பெற்றது.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சமாதி மற்றும் கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)