புதன், 10 ஜூன், 2020

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர்
எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.


சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார்.

கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.

இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.

பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல்
த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.


கௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.


 இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:குமிழ் முனைப் பேனா(Ball point pen) தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

குமிழ் முனைப் பேனா(Ball point pen) தினம் இன்று.


குமிழ்முனைப் பேனாவிற்கு காப்புரிமை வழங்கப்பட்ட தினம் இன்று(1943).

June 10, 1943 - Laszlo Biro patented his ballpoint pen.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

மாஸிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்!
(Alexander the Great)

தோற்றம் : கி.மு 20 ஜூலை 356
மறைவு : கி.மு 10 ஜூன் 323 (33 வயது)
அப்பா : பிலிப்ஸ்
ஆசிரியர் : அரிஸ்டாடில்
குதிரை : ஃபுஸிபேலஸ்

மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாஸிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர்.

பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர் தன் நாடு திரும்புகையில் கடும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்த அலெக்சாண்டர் தம் படைத் தலைவர்களை அழைத்து, "நான் இறந்தவுடன், திறந்து இருக்கும் எனது கைகள் வெளியே தெரியுமாறு சவப்பெட்டி செய்யுங்கள் என்றார். எல்லோரும் என்னை அந்தக் கோலத்தில் பார்த்தபிறகு அடக்கம் செய்யுங்கள்" என்றார். வியப்படைந்த படைத்தலைவர்களில் ஒருவர், "அரசே... எதற்காக இப்படி செய்யச் சொல்கிறீர்கள்?"என்று கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், "உலகையே வென்ற பேரரசனாகிய அலெக்சாண்டர், வெறுங்கையுடன்தான் மேலுலகம் சென்றுள்ளான் என்பதை மக்கள் உணர்வதற்காகத்தான்" என்று பதில் சொன்னார்.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று*

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

 நூலகத்துறையின் முன்னோடி
வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று.

✍ தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.

✍ இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.

✍ ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

✍ இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்" என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

✍ தமிழில் 'வேதியம் 1008" உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை.

✍ தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 87ஆவது வயதில் (2013) காலமானார்.

செவ்வாய், 9 ஜூன், 2020

பள்ளிக்கூடங்கள் திறப்பை இப்போது பேசுவதே அபத்தம்- முன்னாள் கல்வி அமைச்சர்

 நாளிதழின்   
நடுபக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்களின் குறிப்புரையோடு,
தமிழகத்தின் மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் நேர்காணல்...

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*


*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை ஏற்பு ! பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட பொதுத்தேர்வுகள் இரத்து! பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த  கோரிக்கை ஏற்பு !*

பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட
பொதுத்தேர்வுகள்  இரத்து!
பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.


இராமச்சந்திர காந்தி (ஜூன் 9, 1937—சூன் 13 2007)  ஒரு மெய்யியல் அறிஞர் ஆவார்.

 இவருடைய தந்தையார் தேவதாஸ் காந்தி (மகாத்மா காந்தியின் மகன்). தாயார் இலட்சுமி (இராஜாஜியின் மகள்)

 இராஜமோகன் காந்தி, கோபால்கிருஷ்ண காந்தி, தாரா காந்தி பட்டாசார்சி ஆகியோர் இராமச்சந்திர காந்தியின் உடன் பிறந்தவர்கள். இவரது மகள் லீலா காந்தி ஆவார்.


இராமச்சந்திர காந்தி ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மெய்யியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். விசுவ பாரதி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், கலிபோர்னியா ஒன்றிணைந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் இவருடைய முயற்சியால் தத்துவத்துறை ஏற்படுத்தப்பட்டது.


காந்தி அடிகளையும் இரமண மகரிசியையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார். பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் முயன்றபோதும் பரப்புரை செய்தபோதும் தம் இந்து மத ஆராய்ச்சி அறிவு கொண்டு அதற்கு எதிராக கருத்துகளை எழுதினார். அது போலவே 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நடந்த இனக் கலவரத்தில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தார்.

எழுதிய முக்கிய நூல்கள்

Moksha & Martyrdom: Reflections on Ramana Maharishi and Mahatma Gandhi
Sita's Kitchen: A Testimony of Faith and Inquiry
Svaraj: A Journey with Tyeb Mehta's Shantiniketan Triptych

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.


கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.


 இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார்.

 போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது.


ஆசிய விளையாட்டுப்
போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக செய்தார்.

பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,
கல்வி கற்க ,
உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார்.

டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

 தற்போது புதுவை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலில் சேர்ந்ததை தாண்டி 'நான் துணிந்தவள்' என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம்.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன(9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848) நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.

தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை, இன்றும் உலகத்தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.