திங்கள், 15 ஜூன், 2020

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:கலைமாமணி மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

*கலைமாமணி மணவை முஸ்தபா* பிறந்த தினம் இன்று.
                                                                      மணவை முஸ்தபா (15.6.1935 -  7.2.2017)
 அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

தமிழைச் செம்மொழியாக்க அரும்பாடாற்றியவர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி என எட்டு துறைகளைச் சார்ந்த 8 லட்சம் கலைச்சொற்களைக் கொண்ட அகராதிகளை உருவாக்கியவர்.

இவர் எழுதிய நூல்களில் ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசினையும், ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் நூல், 1996 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள்’ எனும் வகைப்பாட்டில் முதல் பரிசினையும் பெற்றிருக்கிறது.

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குனர், ‘புத்தக நண்பன்’ மாத இதழ் ஆசிரியர், யுனெஸ்கோ கூரியர் பன்னாட்டு மாத இதழின் ஆசிரியர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் தலைமைப் பொறுப்பாசிரியர்.

1985ஆம் ஆண்டு இவருக்குத் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.

மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபணம் செய்வதற்காக 1752ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃபிலடோல்பியாவில் இதே தினத்தில் பெஞ்சமின் பிராங்ளின் மின்னல் ஏற்படும்போது பட்டத்தை பறக்கவிட்டு அதன் மறுமுனையில் ஒரு சாவியை கட்டினார். சாவியை Leydan Jar (Capacitor) பொருத்தினார். மின்சாரம் தாக்காதவாறு பட்டத்தில் உள்ள கயிற்றில் ஈரமற்ற பகுதியை கையில் பிடித்திருந்தார். மின்னல் தோன்றிய போது பட்டத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சாவியின் வழியாக Capacitor-இல் மின்சாரம் சேமிப்பாவதை கண்டார். இச்சோதனையில் மின்னல் வேறு எங்கோ கண்ணிற்கு புலனாகாத இடத்தில் தோன்றியிருந்தது. மின்னல் அருகில் தோன்றியிருந்தால் பிராங்ளின் மின்சாரத்தால் தாக்கப்பட்டிருப்பார். இருந்தபோதும் சாவியின் அருகே ஏற்பட்ட மின்சக்தியை உணர்ந்தார். இதன்மூலமாக மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபித்தார். மேலும் அவர் முன் எச்சரிக்கையாக இரும்பு கம்பிக்கு(lightning rod) மாற்றாக பட்டத்தை பயன்படுத்தினார். இரும்புக் கம்பியைப் பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை கணித்திருந்தார். பெஞ்சமின் பிராங்ளினின் இந்தக் கண்டுபிடிப்பு இடிதாங்கி கண்டுபிடிக்க வழிசெய்தது. மேலும் இதன்மூலமாக மின்சாரத்தில் நேர்மறை மின்னோட்டம்(Positive Charge) மற்றும் எதிர்மறை மின்னோட்டம்(Negative Charge) இருப்பதை முதன் முதலாக உறுதி செய்தார். அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், எழுத்தாளர், அரசியல் தத்துவவியலாளர், அரசியல்வாதி, அயல்நாட்டுக்கான தூதர் போன்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

*🌐ஜூன் 15,வரலாற்றில் இன்று:உலக காற்று தினம்.*

ஜூன் 15 ,
வரலாற்றில் இன்று.


உலக காற்று தினம் இன்று


காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும்.

ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது

பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள், சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.

இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!!

காற்று மாசடைவதை தடுப்போம் !!

ஞாயிறு, 14 ஜூன், 2020

*☀திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச்செயலாளர்கூட்டம் பாவலர்.திரு.க.மீ.,அவர்களுக்கு அஞ்சலி*

திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச்செயலாளர்கூட்டம் பாவலர்.திரு.க.மீ.,அவர்களுக்கு அஞ்சலி


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  காணொளி காட்சி மூலம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி, பாவலர் க. மீனாட்சிசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அம்பலவாணன், இனமான பேராசிரியரின் மகள் மணமல்லி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

DSE Proceedings_ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி 12.6.2020



*🌟கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் மதிப்புமிகு.* *ஆர்.ஜெயந்தி அவர்கள் விடுமுறையில் சென்றிருக்கிறார்.*

கொரோனாவுக்கான  சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் மதிப்புமிகு.
ஆர்.ஜெயந்தி அவர்கள்  விடுமுறையில் சென்றிருக்கிறார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், பரமத்தி ஒன்றியம்(கிளை). -------------------------------- *ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு* --------------------------------

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி ஒன்றியம்(கிளை).
--------------------------------
*ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு*
--------------------------------
இடம்:பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் அருகில்.

நாள்:15.06.2020-திங்கள்.
நேரம்: மாலை 04.30மணி

*தலைமை:*
திரு.ந.ரங்கசாமி

ஒன்றியத்தலைவர்.
*முன்னிலை:*
திருமதி.கு.பத்மாவதி.

ஒன்றியப்பொருளாளர்,

திரு.ப.சதீசு

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.

*தொடக்க உரை:*
திரு.மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

*பொருள்:*
1)பொதுச்செயலாளர்-பாவலர் திரு.க.மீ.,அவர்களுக்கு
புகழ் அஞ்சலி செலுத்துதல்.
2)வட்டாரக்கல்வி அலுவலகச் செயல்பாடுகள்.
3) ஒன்றிய  ஆசிரியர் கோரிக்கைகள் .
4)எதிர்கால நடவடிக்கைகள்.
5)பிற.

*இயக்க உரை:*
முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்.

*அனைவரும் தவறாது வாரீர்!*

க.சேகர்,
ஒன்றியச்
செயலாளர்.

Math App for Kids...

click here for download...

*🎤பேச்சுரிமை,* *எழுத்துரிமை,* *கருத்துரிமையை மறுக்கலாமா?* *நடத்தை விதி என்ற பெயரில் தடுக்கலாமா?* *உள்நோக்கம் உடைய செயல்முறை பிறப்பிக்கலாமா?* -------------------------------- *வாய்ப்பூட்டு சிறந்த செயலாகாது !*


பேச்சுரிமை,
எழுத்துரிமை,
கருத்துரிமையை மறுக்கலாமா?

 நடத்தை விதி என்ற பெயரில் தடுக்கலாமா?

உள்நோக்கம் உடைய செயல்முறை பிறப்பிக்கலாமா?
--------------------------------
வாய்ப்பூட்டு  சிறந்த செயலாகாது !
--------------------------------

ஆங்கிலேயே அரசாங்கம் இந்தியாவை ஆண்ட பொழுது இந்தியமக்கள் ஆங்கிலேய அரசின் முறையற்ற சட்டங்களால் ,
நடவடிக்கைகளால்,
செயல்பாடுகளால்
வரி-வசூல்களால், பல்வேறு வகை சுரண்டல்களால்  சொல்லொண்ணாத்  துன்ப-துயரங்களை அன்றாடம் அனுபவித்தனர்.

ஆங்கிலேய அரசால் அடைந்த இன்னல்களை கண்டித்தும்,
ஆட்சேபித்தும்,
எதிர்த்தும்,
முறையற்றச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்
 இந்திய விடுதலைப்்போராட்ட  வீரர்களும் -
தீரர்களும் கூடியும்,பேசியும், எழுதியும்
,கூத்து நடத்தியும்
,நாடகம் போட்டும்,
பாடல்கள் பாடியும்,
வீரமிகு கதைகள் சொல்லியும்
 இந்திய மக்களை
 அணி திரட்டி  அறவழியிலும் ,
ஆயுதம் ஏந்தியும்  தொடர்ந்து போராடினர்.
ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்ச்சித்து வந்தனர்.
மக்களை விழிப்படையச் செய்தனர்.

அத்தகைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய அரசு போராட்டங்களை நசுக்குவதற்காகவும்,
பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவும்,
அரசுக்கு எதிரான கருத்துகள் பரவலை தடுப்பதற்காகவும் பல்வேறு கடுமையான சட்டங்களை பிறப்பித்தது;
கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

" இம் "என்றால் சிறைவாசம்,
" ஏன் "என்றால் வனவாசம் என்று காட்டாட்சி நடத்திய ஆங்கிலேயர் அரசு ,
தனது அரசின் கொள்கைகளை எவரும் எதிர்த்து பேசக்கூடாது,
எழுதக்கூடாது என்பதற்காக பல்வேறு கொடுஞ்சட்டங்களை கொண்டு வந்து மக்களை  வாட்டி வதைத்தது.

அத்தகு கொடும் நடவடிக்கைகளின் நீட்சி - தொடர்ச்சி  இன்றளவும் காணப்படுகிறது என்று  சொல்லப்படுகின்றது.
இப்பணியாளர் நடத்தை விதிகளின் ஒருசில பிரிவுகள் அத்தகு கறுப்புச்சட்டங்களுக்கு
ஒத்ததாகும் - இணையானதாகும்  என்று சொன்னால் அதொன்றும் மிகையாகாது;
தவறாகாது.

இத்தகு  பணியாளர் நடத்தை விதிகள் காலத்தின் தேவைக்கேற்ப
திருத்தம் செய்யப்பட
வேண்டும்!
ஆசிரியர்-அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப் படுவது கைவிடப்பட வேண்டும்!
தந்தைபெரியார் பூமியில்  இருந்து இச்செயல்முறை வெளியாவது வேதனையளிக்கிறது!இச்செயல்முறை கவலைத்தருகிறது!
இச்செயல்முறை உள்நோக்கம் உடையதாகும்!

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்சான்று வழங்குதல் கூடாது! தமிழக அரசு ஆணை!

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்சான்று வழங்குதல் கூடாது!
தமிழக அரசு ஆணை!