செவ்வாய், 23 ஜூன், 2020

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் இன்று.*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் இன்று.

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம் இன்று (1900).*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம் இன்று (1900).

பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர் இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.

“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம்.

*🌐ஜூன் 23, வரலாற்றில் இன்று:ஒலிம்பிக் தினம் இன்று.*

ஜூன் 23, வரலாற்றில் இன்று.

ஒலிம்பிக் தினம் இன்று.

விளையாட்டு போட்டிகளின் சிகரம். பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதன்சில் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி, 1894 ஜூன் 23ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்ட பின்னர் தான் நவீன ஒலிம்பிக்காக பரிணாம வளர்ச்சி பெற்றது.

 பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்வியாளரும் வரலாற்று ஆர்வலருமான பியரி டி கூபர்டின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவிய தினமே தற்போது உலக ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1948ல் தான் முதலாவது ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் இணைந்து உலக ஒலிம்பிக் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான  நாடுகளில் இந்த தினத்தையொட்டி ஒலிம்பிக் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டி பற்றி இளைஞர்களிடம் விழிப்புனர்வு உண்டாக்குவதே இதன் நோக்கம். விளையாட்டு மட்டுமல்லாது இசை, நடனம் இணைந்த கலாசார திருவிழாவாகவும் ஒலிம்பிக் தினம் அமைந்துள்ளது.
இதில் பங்கேற்கும் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சிறுவர், சிறுமியரை சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன் தக்க ஆலோசனைகள் வழங்கி விளையாட்டுத் துறையில் உற்சாகமாக ஈடுபட ஊக்குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

🌐ஜூன் 23,வரலாற்றில் இன்று:கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) நினைவுதினம் இன்று.

ஜூன் 23,
வரலாற்றில் இன்று.

கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) நினைவுதினம் இன்று.

  சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை  அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923இல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

திங்கள், 22 ஜூன், 2020

*☀நாமக்கல் மாவட்டம் -பரமத்தி, எலச்சிபாளையம் மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதித்திடல் வேண்டும்...*

நாமக்கல் மாவட்டம் -பரமத்தி, எலச்சிபாளையம் மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதித்திடல் வேண்டும்...

*✳நாமக்கல் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம்- பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகள் -முதன்மை கல்வி அலுவலர் நேரடி தலையீடும் , விரைவு தீர்வும் வேண்டுதல் ...*

நாமக்கல் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம்- பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகள் -முதன்மை கல்வி அலுவலர் நேரடி தலையீடும் , விரைவு  தீர்வும் வேண்டுதல் ...

EMIS.Portal-Trainning attended Details of the Teachers 2019-20 to entry in web portal


*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் டான் பிரவுன் பிறந்ததினம்.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் டான் பிரவுன் பிறந்த தினம் இன்று.

பரபரப்பான புனைவு புதின எழுத்தாளரான டான் பிரவுன் 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்சைரில் பிறந்தவர். டாவின்சி கோட் என்ற பிரபலமான புத்தகத்தை 2003ஆம் ஆண்டு டான் பிரவுன் வெளியிட்டார். இப்புத்தகம் உலகம் முழுவதும் பல மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இவரது புதினங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சாதாரண நிலையிலிருந்து ஒரு புதிய வாழ்க்கையில் நுழைவது, அற்புதங்கள் நிறைந்த இடங்களுக்கு பயணம் செய்வது, கதையின் 24 மணி நேர கால அளவு ஆகியன டான் பிரவுன் புதினத்தில் பிரத்யேகமாக இடம்பெறுபவை.  இவரது நாவல்களில் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் மற்றும் டெமன்ஸ் ஆகியவை திரைப்படமாக வெளிவந்தன.

*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:வாச்சாத்தி வன்முறைக் கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

வாச்சாத்தி வன்முறைக்  கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.


இது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம
மக்கள் மீது நடத்திய கொடிய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே  வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது.

 வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர்.

 பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறை யினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

 அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.

இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளரும் அடக்கம். மற்றும் வருவாய்த்துறையினர் 6 பேர்.

வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .

வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

*🌐ஜூன் 22,* *வரலாற்றில் இன்று:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).*

ஜூன் 22,
வரலாற்றில் இன்று.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).