வியாழன், 25 ஜூன், 2020

*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது.*

*💪பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 7 கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளுகிறது. கோரிக்கைகள் வெல்ல ஒன்று கூடுவோம்..வென்று காட்டுவோம்...*

Central Teachers Eligibility Test postponed

Central Teachers Eligibility Test postponed

G.O'No:280 date: 24.6.2020 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் NHIS மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் கொரானா Covid_19 சிகிக்சை சேர்ப்பு





மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள தமிழக அரசு இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது


அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்.

*அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020  ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை* *மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம்*

*🖥️ஜூன் 25,* *வரலாற்றில் இன்று:விண்டோஸ் 98 இயங்குதளம் ( operating system) மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட தினம் இன்று (1998).*

ஜூன் 25,
வரலாற்றில் இன்று.


விண்டோஸ் 98 இயங்குதளம் ( operating system) மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட தினம் இன்று (1998).



இந்த இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது.

ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டு கூறினார்.

விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 ் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.

*🌸ஜூன் 25, வரலாற்றில் இன்று:மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார்.

 ஆரம்பக்காலத்தில் 10 வருடங்கள் வீட்டிலேயே கல்வி பயின்றார். 1916இல் கப்பற்படையில் சேர்ந்தார். துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1920இல் கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடம் இளவரசர் எட்வர்டுடன் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்றார்.

கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்த இவர், கேப்டன் பதவியை பெற்றார். 1939இல் கெல்லி போர்க்கப்பலின் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹெச்.எம்.எஸ். கெல்லியின் கமாண்டராக பல துணிச்சலான வியூகங்களை வகுத்து செயல்படுத்தினார்.

 1947இல் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர். ஆனால் மவுண்ட்பேட்டன் 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார்.

1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி விடுமுறைக்காக அயர்லாந்து சென்றிருந்த போது ஐரிஷ் குடியரசின் ராணுவத்தினர் இவர் பயணம் செய்த படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.

*🏆ஜூன் 25, வரலாற்றில் இன்று:கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).

முதல் இரண்டு உலகக் கோப்பையை வென்ற அதே மகிழ்ச்சியில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கி இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்தியா விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த முறை கட்டாயம் உலககோப்பையை வென்று மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது.

1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானம் ஹாட்ரிக் வெற்றி பெரும் முனைப்பில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர் போன ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38  ரன்கள் குவித்தார்.

அவ்வளவு தான். கத்துக்குட்டி இந்திய அணி வீட்டுக்கு செல்ல வேன்டியது தான் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசை கட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை  சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட் அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

*🌐ஜூன் 25, வரலாற்றில் இன்று:இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).

 இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றியை, அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதால் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

 பல கட்சிகளையும். அமைப்புகளையும் தடை செய்தார். பல ஆயிரக்கணக்கில் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினார்.

மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு கூடுகிறது. தேர்தல் வருகிறது. ஆட்சி மாறுகிறது.

1970இன் தொடக்கத்திலேயே நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. ஒடுக்குமுறை அதிகரித்துவிட்டது. ஏழைகளது வாழ்க்கை சங்கடமாகிவிட்டது. இளைஞர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லட்சக்கணக்கான மாணவர்களைப் போராட வாருங்கள் என அழைக்கிறார். நாடெங்கும் என்றாலும், குறிப்பாக பிகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அறைகூவலை ஏற்று, கல்விச் சாலைகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். லட்சக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். அரசு ஊழியர்களையும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து போராடுங்கள் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தார். அரசுப் பணியாளர்களும்,அப்படியே செய்தனர். ஏற்கெனவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், இந்தியா முழுக்க, ரயில்வே தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ‘சக்கரங்கள் ஓடாது’ என அது புகழ்பெற்றது. கடைசியாக, ஜெயப்பிரகாஷின் அறைகூவல், ராணுவத்தில் பணியாற்றுபவர்களே, போராட வெளியே வாருங்கள் என்பதாக இருந்தது.

இனியும் பொறுக்குமா அரசு? அந்த நேரத்தில்தான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக அதுவே காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய ஆளும் வர்க்கம், தனது தொடர் அடக்குமுறைகளால் மக்களைக் கொடுமைப்படுத்தும்போது, மக்கள் மத்தியிலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்திலும், அரசியல் போராட்ட வடிவத்திலும் எழுந்துவந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஆள்வோர் தங்களது தவறான கொள்கைகளால், லாபம் ஈட்டும் திட்டங்களால், மக்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது, அது எதிர்ப்பாக உருவாவதை யாரும் தடுத்திட முடியாது என்ற படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். ஆள்வோர் நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறைகளால் தற்காலிகமாக வெல்லலாமே ஒழிய, தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்ற படிப்பினையையும்  கற்றுக்கொள்ளலாம்.

*☀ஜூன் 25, வரலாற்றில் இன்று:குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும்,* *பிற்படுத்தப்படோருக்கு* *இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும், பிற்படுத்தப்படோருக்கு
இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.

வி.பி. சிங் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அலகாபாத் நகரில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25இல் அரச குடும்பத்தில் பிறந்தார்.


இவர் தனது பள்ளிப் படிப்பை அலகாபாத்தில் முடித்தார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். 1969இல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உத்தப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். 1971இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 1974இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வி.பி.சிங்கை வர்த்தகத் துறை இணை அமைச்சராக்கினார்.

மத்தியில் 1975 ஜூன் 25இல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து 1977இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது. மீண்டும் காங்கிரஸ் கட்சி 1980இல் ஆட்சிக்கு வந்தது.

அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தை ஜனதாவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.
வி.பி.சிங் அம்மாநிலத்தின் முதலமைச்சராக்கப்
பட்டார். 1982வரை இந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் 1983இல் மீண்டும் வர்த்தகத் துறை அமைச்சரானார்.

1984இல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வி.பி. சிங் நிதியமைச்சராக்கப்
பட்டார். அப்பதவியில் இருந்தபோது வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வியாபாரக் கொள்கைகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் வி.பி. சிங் பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் 1987 ஜனவரியில் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.

அந்தத் துறையில் நடந்த ஆயுதக் கொள்முதல் தொடர்பாக அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தம் காரணமான நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

1988இல் ஜனதா தளம் என்னும் கட்சியைத் தொடங்கினார். ஜன்மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தள் கட்சியை ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினமான அக்டோபர் 11 அன்று ஆரம்பித்தார். அதன் மூலம் தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி என்னும் கூட்டணியை ஏற்படுத்தி 1989 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்.

அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றதால் அதன் தலைவரான வி.பி. சிங் இந்தியாவின் எட்டாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மத, சாதியவாதப் பிரச்சினைகளால் இவரது ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1990 நவம்பர் 7 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1991 ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங்கை நீண்ட காலமாகப் புற்றுநோய் துன்புறுத்திவந்தது. புற்றுநோயுடன் சிறுநீரகப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் டெல்லி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.பி.சிங் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.