செவ்வாய், 14 ஜூலை, 2020

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்



*கொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு*


சென்னை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, கொரோனா மருத்துவ செலவை திரும்ப வழங்கும்படி, கருவூல துறை கமிஷனர், அனைத்து கருவூல துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

*சூலை 13 இல் நல்வாழ்த்து வழங்கிய எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! -முருக செல்வராசன்.*

*சூலை 13 இல் நல்வாழ்த்து   வழங்கிய எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! -முருக செல்வராசன்.*

*🌐ஜூலை 14, வரலாற்றில் இன்று:இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தினம் இன்று(2015).*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன்  நினைவு தினம் இன்று(2015).

கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (ஜூன் 24, 1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

*🌐ஜூலை 14, வரலாற்றில் இன்று:கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.

பழ.பாரதி என்று தொடக்கக்காலங்களில் அழைக்கப்பட்டவர் பின்னாளில் தன் தந்தை சாமி பழனியப்பன் பெயரோடு இணைந்து “பழனிபாரதி” என்று அழைக்கப்படுகிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவரான பழனிபாரதி அவர்களின் தந்தை திரு சாமி பழனியப்பன் அவர்கள், பாரதியின் மீதிருந்த அதீத அன்பின் காரணமாய் இவருக்கு பாரதி என்று பெயர் வைத்தார். தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவர். ஆரம்பக்கால கட்டங்களில் பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரிந்தார். எம்ஜிஆர் அவர்கள் நடத்திய, வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய "தாய்" என்னும் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக தன் எழுத்துப்பணியை தொடங்கினார். பின்னாளில் சினிமாத்துறைக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பாடலாசிரியராக தன்னை வடிவமைத்துக்கொண்டார். இப்போதும் கூட "தை" மாத இதழ் ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரை உவமைக் கவிஞர் சுரதா " பழநிபாரதி வருங்காலத்தில் ஒரு மகாகவியாக வருவான்" என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவிஞர். அப்துல் ரகுமான், கவிஞர்.வாலி மற்றும் கவிஞர்.அறிவுமதி ஆகியோரின் செல்லப்பிள்ளை கவிஞர் பழனிபாரதி. இளையராஜா . ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர் களுக்கு மட்டுமல்லாமல் சக கவிஞர்களுக்கும் பிடித்தவர்.

திரைப்படத் துறையின் இரும்புக்கதவை ஒரு சாமானியனும் திறமை இருந்தால் திறக்க முடியும் என எல்லோர்க்கும் முன்னுதாரணாக இருந்தவரும் இவரே...

கிட்டத்தட்ட 2000க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் பாடல் பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் வரும் "இளம்பிறை விழிகளில் வளர்பிறை கனவுகள் பெளர்ணமி ஆகிறதே..! மரங்களின் கிளைகளில் குயில்களின் ஸ்வரங்களில் சூரியன் மலர்கிறதே..!" என்ற பாடல்.

"காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது காற்றின் கையெழுத்து புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன். இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை. இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி. சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இவரின் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்!

"உங்கள் பெயரில் பாரதி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கீழ் வரும் பதிலை அளித்துள்ளார்.

"என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." என்று சொன்னார் பழனிபாரதி.

இவர் பெற்ற சில விருதுகள்
--------------------------------------------

சிறந்த பாடலாசிரியர் விருது(சினிமா எக்ஸ்பிரஸ் ) - 1996

சிறந்த பாடலாசிரியர் விருது(தமிழ்நாடு சினிமா விருதுகள்) - 1997

கலைமாமணி - 1998

கலைவித்தகர் - 1998

இளையராஜா இலக்கிய விருது - 2007

புரட்சிக்கவிஞர் விருது

பழனிபாரதி எழுதிய சில புத்தகங்கள்

நெருப்புப் பார்வைகள்

வெளிநடப்பு

காதலின் பின்கதவு

மழைப்பெண்

முத்தங்களின் பழக்கூடை

புறாக்கள் மறைந்த இரவு

தனிமையில் விளையாடும் பொம்மை

தண்ணீரில் விழுந்த வெயில்

வனரஞ்சனி

உன் மீதமர்ந்த பறவை

*🌐ஜூலை 14,* *வரலாற்றில் இன்று:கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) பிறந்த தினம் இன்று*

ஜூலை 14,
வரலாற்றில் இன்று.

கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) பிறந்த தினம் இன்று.


கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929).

கரக்பூர் ஐஐடியில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு ‘குழந்தைசாமி மாதிரியம்’ எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராக பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர்.

நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்களாக மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது.

தனது சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்ம, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.

தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவர், தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர், சென்னை தமிழ் அகாடமி தலைவர், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

*🌐ஜூலை 14,* *வரலாற்றில் இன்று:கிருமி நாசியான மஞ்சள் தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

நம்முடைய கலாச்சாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம்  ஜூலை 14ஆம் நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது.

மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும்.

மஞ்சள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாக மஞ்சள் உள்ளது. இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக கருதுகின்றனர்.

மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப்  பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

மஞ்சளின் பயன்கள் :
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். 

மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நன்று. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக உதவுகிறது.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி  தூளை  நீரில் இட்டு ஊற வைத்து  காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் மற்றும் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
முகத்தோல் பொழிவு  பெற  மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

திங்கள், 13 ஜூலை, 2020

*✒பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது-விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 11.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள்:13.07.2020.*

*✒பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது-விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 11.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள்:13.07.2020.*

ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

#Transport | #COVID19 | #CoronaLockdown |

*🌐ஜூலை 13,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் பிறந்த தினம் இன்று (1944).*

ஜூலை 13,
வரலாற்றில் இன்று.

கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் பிறந்த தினம் இன்று (1944).

வ. ஐ. ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.

வ. ஐ. ச. ஜெயபாலன்
இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்.

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

*🌐ஜூலை 13, வரலாற்றில் இன்று:லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபெற்ற தினம் இன்று (1908).*

ஜூலை 13, வரலாற்றில் இன்று.

லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபெற்ற தினம் இன்று (1908).