திங்கள், 3 ஆகஸ்ட், 2020

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை  நிறைவேற்றிட  வலியுறுத்தி 5 கட்ட தொடர்  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை   இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*




*வட்டாரக்கல்வி அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி.பெ.அமிர்தவல்லி,ஒன்றிய பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி,ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.*

*க.சேகர்.*
*ஒன்றியச் செயலாளர்.*

*📘தேசிய கல்விக் கொள்கை -தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை மட்டும் பின்பற்றப்படும் என்கின்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண் -137. மற்றும் நாள்:03.08.2020.அறிவிப்பு*

*📘மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  செய்தி வெளியீடு எண் -137.நாள்:03.08.2020.*


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*₹

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.

*🟣இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.*

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர்  திட்டவட்டம்.







மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.



புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்


மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்.

மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி
இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும்
அளிக்கிறது.

🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

*🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.*

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஆகஸ்ட் 2, வரலாற்றில் இன்று. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) பிறந்த தினம் இன்று.

ஆகஸ்ட் 2,
 வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) பிறந்த தினம் இன்று.

வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார்.

பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் ஜப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கி நாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார் மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அளவை உருவாக்க வேண்டினார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தினார்.

முதலில் கொடியின் நடுவில் ஓர் ராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை பருத்தி துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

WithdrawNEP2020 புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ? - பேராசிரியர் அ. இராமசாமி முன்னாள் துணைவேந்தர் , அழகப்பா பல்கலைக்கழகம்.

#WithdrawNEP2020
புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
 - பேராசிரியர் அ. இராமசாமி
முன்னாள் துணைவேந்தர் , அழகப்பா பல்கலைக்கழகம்.



1. மும்மொழித் திட்டம்" என்ற பெயரில் இந்தித் திணிப்பு.

2. மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான
சமஸ்கிருதம் திணிப்பு.

3.தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் தேவையற்ற
நிலையிலான தேசிய அளவிலான தேர்வு.

4. கலை, அறிவியல் பாடங்களுடன், 'தொழிற்கல்வி' என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு.

5. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். முதலியனவற்றில் சேர்ந்து படிக்க நுழைவத்தேர்வு!

6.கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் ‘நிதி உதவி' என்ற
பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிப்பு.

7. சுமார் 5000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் ஒழிப்பு.

8. நீண்ட காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் மூடப்படும்.

9. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிக்கப் பிரதமர்
தலைமையில் டில்லியில் ஒரு உயர்கல்விக் குழு அமைக்கப்படும்.

10. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உருவாக்கவும், நடத்தவும் மாநில
அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால், நிர்வகிக்க உரிமை கிடையாது.

11. மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.

12. பல்கலைக் கழகத் துணைவேந்தரை டில்லியே நியமிக்கும்; மாநிலஅரசுக்கு உரிமை கிடையாது.

13. டில்லியால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், அவர்களுக்கு வேண்டிய
வர்களையே பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற பதவிகளுக்கும் , ஆசிரியர் பணியிடங்களுக்கும் நியமிப்பர்.

14. எனவே, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பதவிகளுக்கும் வர முடியாது.

15. வகுப்புவாரி இடஒதுக்கீடு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

16. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மதிப்பெண்கள்
அடிப்படையிலேயே வழங்கப்படும். அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர் உரிமை பறிக்கப்படும்.

17. இந்தியா முழுவதற்கும் ‘ஒரே பாடத்திட்டம்' என்ற பெயரில் 'ஆரிய பாடத்
திட்டம்' கொண்டு வர முயற்சி ஆரிய நாகரீகம், வரலாறு ஆகியவற்றைத் திணித்துத் தென்னிந்திய நாகரீகம், வரலாற்றைப் புறக்கணிக்க முயற்சி.

19.பாரம்பரியக் கல்வி அறிமுகம்' என்ற பெயரில் அறிவியல் சோதனையில்
நிற்காத கல்வித் திணிப்பு.

20. ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொள்ளாமல்; நாளந்தா, தட்சசீலம் போன்ற பிற்போக்கான பாடத் திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொண்டது.

21. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு 5ஆம் வகுப்பு வரையில் மட்டுமே தரப்படும்.

22. ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும்.

23. தன்னார்வத் தொண்டர்கள்' என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்
அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்.

24. முதலாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தேசிய முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.

25) பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாடத்திட்டம் (Sylabus) உண்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்த
தனியார் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.
பெண்கள் கல்வியைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்திட தடை ! சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு! # *ஆகச்டு31*

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்திட தடை !
சென்னை காவல் ஆணையர்  அறிவிப்பு!
# *ஆகச்டு31*

பொது மக்கள் குறைகளை திங்கள் கிழமை தோறும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! */தொலைபேசி எண் 0421-2969999.

பொது மக்கள் குறைகளை
திங்கள் கிழமை தோறும்
காலை 11.00 மணி முதல்
பிற்பகல் 1.00 மணி வரை
தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

*/தொலைபேசி எண்
0421-2969999.