தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள் கொண்டதாக அமைத்திடுமாறு மாநில,மாவட்ட அமைப் புகள் முடிவாற்றியது. இம்முடிவுகளுக்கு ஏற்ப இன்று(15.08.2020) காலை 07.45 மணி அளவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் முன் மாநிலசொத்துப்பாதுகாப்புக்குழுஉறுப்பினர் திரு.பெ.பழனிசாமி அவர்கள் ஆசிரியர் மன்றக் கொடியை உயர்த்தினார்.
பாவலர் அவர்களின் திருஉருவப்படம்திறந்து வைத்து
பாவலர் அய்யா அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.