செவ்வாய், 3 நவம்பர், 2020

தமிழக அரசே!கோவிட்-19 காலக்கட்டத்தில் வயதுவந்தோர்கல்வித்திட்டப்பணிகளை ஒத்திவைத்திடுக!பள்ளி ஆசிரியர்களை பாதுகாத்திடுக!

தமிழக அரசே!
கோவிட்-19 காலக்கட்டத்தில் 
வயதுவந்தோர்
கல்வித்திட்டப்பணிகளை 
ஒத்திவைத்திடுக!
பள்ளி ஆசிரியர்களை பாதுகாத்திடுக!
---------------------------------------------------------------------------
அன்பானவர்களே!வணக்கம்!

எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதிலோ, கல்லாமையை இல்லாமையை ஆக்குவோம் என்பதிலோ எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இத்தகு நோக்கங்கள் அரசியல் உறுதிப்பாட்டோடு,
சரியான திட்டமிடுதலோடு இடையறாது நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நோக்கம் முழுமையாக  நிறைவேறவேண்டும் என்றே ஆசைக்கொள்கிறேன்.

ஆனால்,நடைமுறையில் என்னவோ,வேறுமாதிரியாகவோ அல்லது ஓரு மாதிரியாகவோ அமைந்து விடுகிறது.

இருப்பினும் ,
கீழ்க்கண்டவற்றை தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறேன்.

1)கல்வித்துறைச் சார்ந்தவரே இயக்குநராக இருப்பதாலேயே,
வயது வந்தோர் கல்வித்திட்டத்தை கல்வித்துறையினரே தான் செயல்படுத்தித்தான் ஆக வேண்டுமா? 
பள்ளி ஆசிரியர்களை வைத்துத்தான் செய்தாக வேண்டுமா?என்ற  வினா ஆசிரியர்களிடம் பரவலாக எழவே செய்கிறது.
2)நூலகத்துறை இயக்குநர் கூட கல்வித்துறையை சார்ந்தவரே எனினும்,நூலகத்துறை பணிகளை கல்வித்துறை ஆசிரியர்களை வைத்துக்கொண்டா செய்கின்றனர் என்று பரவலாக ஆசிரியர்கள் பேசவே செய்கின்றனர்.
3)முறையான பள்ளிக்கல்விக்குள் அரசுசாரா நிறுவனங்களை,
தன்னார்வலர்களை  நுழைய அனுமதிக்கும் மாநிலத்தில் முறைசாராக்கல்விக்குள் மேற்கண்டோரை அனுமதிக்க முடியும் தானே?உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் பள்ளி ஆசிரியர்களை அவசரம் அவசரமாக இறக்கிவிடுவதன் நோக்கம்தான் என்ன?என்ற வினா ஆசிரியர்களிடையே எழவே செய்கிறது.
4)இலவசகட்டாயகல்விச்சட்டத்தின் சரத்துகளையே முழுமையாக நடைமுறைப்படுத்திட இயலாமல் திணறும் கல்வித்துறை ,15 வயதுக்கும் மேற்பட்டோருக்கு குறைந்தபட்ச கல்வியை தருவதற்கு உரிய தனிசிறப்பு ஏற்பாடுகளை செய்யாமல் ,
குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது எனும் முதுமொழியை நினைவுப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏனோ? என்ற கேள்வி ஆசிரியர்களிடம் மேலெழும்பியே வருகிறது.
5)உள்ளாட்சித்துறை,
நகராட்சித்துறை,
பெருநகராட்சித்துறை,
சமூகநலத்துறை, வருவாய்த்துறை போன்ற அரசு துறைகளின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ள வேண்டிய பெரும்பணியை கல்வித்துறை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திட முயற்சிப்பது பொருத்தமான செயலாகாது என்றே ஆசிரியர்கள் வேதனைக்கொள்கின்றனர்.
6)கோவிட்-19 காலக்கட்டத்தில்  கல்லாதவர் எவர்?எவர்?என்று கண்டறியும்  கணக்கெடுப்புகள் நடத்திடப்பணிப்பதும், கண்டறியப்பட்டோரின் ஆதார் எண்களை கோருவதும்,
கண்டறியப்பட்ட இருபதுநாடுநர்களுக்கு ஒரு  கற்கும் மையம் எனும் கணக்கில் கற்கும் மையங்கள்  ஏற்படுத்திட நிர்பந்திப்பதும், இம்மையங்களுக்கு ஊதியம் பெறா தன்னார்வலர்களை கண்டறிந்து நியமித்திடுமாறு நிர்பந்திப்பதும் பள்ளிஆசிரியர்களை துன்ப-துயர நிலைக்கு தள்ளிவிடும் ஆபத்தானபோக்காகும் என்று ஆசிரியர்கள் மனவேதனை-
மனப்பதட்டம் அடைகின்றனர். இத்தகு பணிவரையறையால்  ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
7)பள்ளிதகவல்மேலாண்மை (EMIS)கொடுமையை விடவும்  வயது வந்தோர் திட்டக் கொடுமை மிகப்பெரிய கொடுமையாகும்.
கொடுமையிலும் பெருங்கொடுமையானதாகும். அதிகாரம் ஏதுமற்ற அப்பாவித்தனம் நிறைந்த ஆசிரியப்பெருமக்களை தமிழ்நாட்டுகல்வித் துறையின் உயர் அலுவலர்களும்,
கள அலுவலர்களும் வாட்ச்அப் மூலமாகவே கசக்கிப்பிழிகின்றனர்.அதட்டி -உருட்டி பணியவைத்து வருகின்றனர் என்றே ஆசிரியர்கள் மனம் வெதும்புகின்றனர்.
8)கல்வித்துறை அலுவலர்களின் வரைமுறையற்ற  இத்தகுப்போக்கும், நிலையும்  தொடர்ந்து நீடிப்பது என்பது தங்களது உடலுக்கும்,மனதுக்கும் ,ஆரோக்கியத்திற்கும், குடும்பத்திற்கும்  ஆபத்து நிறைந்ததாகிவிடும் என்று ஆசிரியர்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும்,தமிழக அரசுக்கும்,தமிழ்நாட்டு ஆசிரியர்சமுதாயத்திற்கும் இடையிலான நல்லுறவும்,இணக்கமும் கெட்டுவிடும் ஆபத்தினை உருவாக்கிவிடுமோ?என்றும் ஆசிரியர்கள் கவலை அடைகின்றனர்.
9)தமிழக அரசு கொரோனாக்காலத்தில் வயது வந்தோர்களை  எவ்வாறு பாதுகாப்பது என்று பல்வேறுவகையில் திட்டமிட்டு  செயலாற்றி வரும் நிலையில் ,வயது வந்தோர்கல்வி திட்டப்பணிகளை சிறிது காலம் ஒத்தி வைத்து ,அரசுசாரா நிறுவனங்களின் வழியில்,அனைத்து அரசுதுறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான் மிகச்
சிறந்த செயலாகும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வேண்டுகோள் படைக்கின்றனர்.

தமிழக அரசும் ,
கல்வித்துறையும் மனம் இரங்கிடுமாறு வேண்டுகிறேன்.
-கரிகாலன்.

திங்கள், 2 நவம்பர், 2020

தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு பாடநூலில்இந்தி மொழிக்கு ஆதரவு!தமிழ்நாட்டில் இந்திமொழிக்கு ஆதரவான வினாவினால் சர்ச்சை எழுந்து உள்ளது!தமிழ்நாட்டின் கல்வித்துறை வழக்கம்போல இந்தி திணிப்பு இல்லை !என்று விளக்கம் தந்துஉள்ளது!

தமிழ்நாட்டின் 
பத்தாம் வகுப்பு பாடநூலில்
இந்தி மொழிக்கு ஆதரவு!

தமிழ்நாட்டில் இந்திமொழிக்கு ஆதரவான வினாவினால் சர்ச்சை எழுந்து உள்ளது!

தமிழ்நாட்டின் கல்வித்துறை வழக்கம்போல 
இந்தி திணிப்பு இல்லை !என்று விளக்கம் தந்துஉள்ளது!
####################

தமிழ் புத்தகத்தில் இந்திக்கு ஆதரவான கேள்வி?

“இந்தி கற்க விரும்பும் காரணம்” என்ன 
என பத்தாம் வகுப்பு
 பாட புத்தகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவான கேள்வி இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை.

 “பாட புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை; தனியார் பதிப்பகங்கள் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில், இந்தி மொழி குறித்து விடைகளை எழுதியிருக்கலாம்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.
நன்றி: 
கலைஞர் தொலைக்காட்சி.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நாள்:02.11.2020 நிகழ்வுகள்.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்*   
*நாமக்கல் மாவட்ட  ஒன்றியச் செயலாளர்கள்* *கூட்டம் ப.வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் 02.11.2020 ( திங்கட்கிழமை) பிற்பகல் 05.30 மணியளவில் நடைபெற்றது.* 

*இக்கூட்டம் திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பரமத்தி ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர் பொறுப்பாளர்களை இனிதே வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்*

*மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் கூட்டப்பொருள்களை  விளக்கி தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்.*

*மாநிலச் செயலாளர் திரு.முருக செல்வராசன் இயக்கப் பேருரையாற்றினார்.*

*இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,      மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, ஒன்றியச் செயலாளர்கள் திரு.அ.ஜெயக்குமார் (நாமக்கல்), திரு.கா.சுந்தரம் (சேந்தமங்கலம்),  சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் திரு.கா.செல்வம், திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் திரு.சிவக்குமார், புதுச்சத்திரம் ஒன்றிய கொள்கை விளக்கக் செயலாளர் திரு.இரா.தேசிகன், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு.இர.மணிகண்டன், திருமதி.த.செந்தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர்.*

ஞாயிறு, 1 நவம்பர், 2020

*கற்போம் எழுதுவோம் இயக்கம் SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS.*

*கற்போம் எழுதுவோம் இயக்கம்  SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS*

 *✏️Form 1- படிக்காதவர்கள் பெயர் பட்டியல்*

 *✏️Form 2 கல்வி தன்னார்வலர்களின் விவரங்கள்*

 *✏️Form 3 கிராமம் வார்டு பற்றிய தகவல் தொகுப்பு*
 
*✏️Form 4  மாதவாரியான வருகை, முன்னேற்ற நிலை மற்றும் அடைவு நிலை படிவம்*

*படிவங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

நவம்பர் 1, வரலாற்றில் இன்று. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956).

நவம்பர் 1, 
வரலாற்றில் இன்று. 

 கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956). 

1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.

 கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.

 மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நவம்பர் 1,வரலாற்றில் இன்று.தமிழ்நாடு தினம் இன்று.

நவம்பர் 1,
வரலாற்றில் இன்று.

தமிழ்நாடு தினம் இன்று.

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என்று கொண்டாட தமிழக அரசு அரசாணையை 2019இல்
வெளியிட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி 1956ஆம் ஆண்டு, 63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சென்ற ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாட தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

10.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றும், இதுவரை ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களுக்கு ஒருவரும் விடுபடுதலின்றி உடனடியாக ஊக்க ஊதிய உயர்வினை அனுமதித்திடல் வேண்டும் - ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

10.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றும், இதுவரை ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களுக்கு ஒருவரும் விடுபடுதலின்றி உடனடியாக ஊக்க ஊதிய உயர்வினை அனுமதித்திடல் வேண்டும் -  ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளின் மீது மண்டல இணைப்பதிவாளர் விரைவு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளின் மீது மண்டல இணைப்பதிவாளர்
விரைவு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

🌟உடற்கல்விஆசிரியர் ஆசிரியா் அனைத்து மாவட்ட காலிப்பணியிடம் விபரம்.

🌟உடற்கல்விஆசிரியர் ஆசிரியா் அனைத்து மாவட்ட காலிப்பணியிடம்
விபரம்.
படிக்க இங்கே கிளிக் செய்க.
click here.

உயர்கல்வித்தகுதிக்கு Provisional certificate இருந்தாலே இரண்டாண்டுகளுக்குள் பட்டச்சான்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் எனும் அரசாணை.

உயர்கல்வித்தகுதிக்கு Provisional certificate இருந்தாலே இரண்டாண்டுகளுக்குள் பட்டச்சான்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் எனும் அரசாணை.