திங்கள், 23 நவம்பர், 2020

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?அறிக்கை தாக்கல் செய்க!இந்திய உச்சநீதிமன்றம் கவலை!

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! 

பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?

அறிக்கை தாக்கல் செய்க!

இந்திய உச்சநீதிமன்றம்  கவலை!
####################
வரும் திசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலங்கள் தயாராக உள்ளதா ?என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. 
ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது. 

குஜராத் சமீபத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிகரித்துள்ளது, அகமதாபாத், ரa    ாஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது. 

முதல்வர் விஜய் ரூபானி பள்ளிகளையும், கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். 

தில்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குஜராத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நவம்பர் மாதத்தில், தில்லியில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. 

எனவே, கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை மற்றும் கொரோனாவால் பலியானோரின் உடலை மரியாதையான முறையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

*🔖புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியீடு*

*🔖புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியீடு*
பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க.
click here.

நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-11-2020 மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும்!-தமிழக அரசு செய்தி வெளியீடு.

*நிவார் புயல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-11-2020 மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும்!-தமிழக அரசு செய்தி வெளியீடு.

நவம்பர் 26 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்!வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஊதியமில்லை!தமிழகரசின் தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!பொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை.

நவம்பர் 26 
அகில இந்திய பொது வேலை நிறுத்தம்!
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஊதியமில்லை!
தமிழகரசின் தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!
"""""""""""""'''''"''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""
பொது வேலை நிறுத்த அறிவிப்பு: 
அரசு ஊழியா்களுக்கு 
26-இல் விடுப்பு இல்லை
”"""""”""""""""""""""""""""""""""""""""""""
மத்திய அரசு ஊழியா் சங்கங்கள் உள்ளிட்ட இதர சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியா்களுக்கு வரும் 26-இல் விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது என தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அனைத்துத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய உத்தரவு விவரம்:

மத்திய ஊழியா் சங்கங்கள் மற்றும் பணியாளா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.
 இப் போராட்டத்தில் பங்கேற்பதோ அல்லது பங்கேற்பதாக அச்சுறுத்துவதோ தமிழ்நாடு அரசு ஊழியா்கள் நடத்தை விதிகளின் பிரிவுகளுக்கு எதிரானதாகும்.

இந்த விதிகளை மீறுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வரும் 26-ஆம் தேதி, அரசு ஊழியா் எவரேனும் அலுவலகத்துக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவா்களுக்கு அன்றைய தினம் ஊதியம் அளிக்கப்படாது. 

மேலும், அன்றைய தினத்தில் மருத்துவ விடுப்பைத் தவிா்த்து, பிற விடுப்புகள் எதற்கும் அனுமதியில்லை.

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தன்று, ஊழியா்களின் வருகைப் பதிவேடு தொடா்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை துறைத் தலைவா்கள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைச் செயலகத்தைச் சோ்ந்த ஊழியா்களது பதிவேட்டை தனியாக அனுப்பிட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

*☀️ 2019-2020 மற்றும் 2020--2021 கல்வியாண்டு 14 வகை விலையில்லா நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டவை-நலத்திட்டங்கள் ஆய்வு மேற்கொள்ள முகாம் நடைபெறுதல் சார்பான காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.*

*☀️ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy*

*☀️ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy*

தணிக்கை ஆட்சேபனையை மறுத்த ஓய்வூதியர் உரிய ஆதாரங்களுடன் கருவூலக கணக்குத் துறைக்கு கடிதம்அனுப்பிய சூழ்நிலையில்கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்கடிதம் எழுதி தனது தணிக்கைத்தடை சார்பான திரும்பபெற்றுள்ள ஆணை.

தணிக்கை ஆட்சேபணை உஷார் !
***********************************
சென்னை பூந்தமல்லி சார்நிலை கருவூலத்தில்
தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில் டி.வடி
வேலு, R.T.O.(Retd) அவர்களின் ஓய்வூதியத்திலி
ருந்து ( சி226793)எவ்வித முன்னறிவிப்பும்
இன்றி 10 மாதங்களுக்கு தலா ரூ 12417/-வீதம்
பிடித்தம் ஏப்ரல் 2020 மாதத்திலிருந்து துவக்கப்
பட்டது.தணிக்கை ஆட்சேபணையினை மறுத்து
ஓய்வூதியர் கொடுத்த கடிதங்கள் பேரில் ஒரு
நடவடிக்கையும் இல்லை.எனவே நமது சங்கத்தை அணுகினார்.
    ஓய்வூதியர்களுக்கு தவறாக Over payment செ
ய்தால்,அவற்றை எவ்வாறு அணுக வேண்டும்
என உச்சநீதிமன்றம் State of Punjab and others
-Vs -Rafiz Mash (2014-8 SCC883) and (2015-4CC
334)ல் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.இம்மா
திரி பிடித்தங்களை செய்யுமுன் நோட்டீஸ் வழங்கி விளக்கம் பெறவேண்டும் எனவும்
உச்சநீதிமன்றம் கடுமையாக வலியுறுத்தி
யுள்ளது.இவற்றை சுட்டிக்காட்டி நமது சங்கம்
12-10-20 ல் கடிதம் அனுப்பியது.
      மேலும் தணிக்கை ஆட்சேபணையினை
ஓய்வூதியர் மறுத்து ஆதாரங்களுடன் கடிதம்
அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில்
கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்
கடிதம் எழுதி தனது ஆணையினை திரும்ப
பெற்றுள்ளார்.
       தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில்
இம்மாதிரி பல விதிமீறல்களை செய்து ஓய்வூ
திய பிடித்தங்களை உத்திரவிடும் போக்கை
முறியடிக்க தயாராவோம் !
நன்றி:
திரு.கிருஷ்ணன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம்.

💥BLO DUTY- யில் இருக்கும் ஆசிரியர்கள் சட்டமன்ற தேர்தல்-2021 பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் விண்ணப்பம்.

💥 BLO DUTY- யில் இருக்கும் ஆசிரியர்கள் சட்டமன்ற தேர்தல்-2021 பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் விண்ணப்பம்.