செவ்வாய், 9 மார்ச், 2021

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பெப்ரவரி மாதம் ஊதியம் 08.03.2021வரையிலும் கிடைக்கப் பெறவில்லை!எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் விரைந்துக்கிடைத்திட நேரடித் தலையீடு செய்க!நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 
2021 பெப்ரவரி மாதம் ஊதியம்  08.03.2021
வரையிலும் கிடைக்கப் பெறவில்லை!

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 
மாத ஊதியம் விரைந்துக்கிடைத்திட நேரடித் தலையீடு செய்க!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!

*📮ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை - அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...*

*📮ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை - அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...*

 *ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சேமிப்புகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.*


*இந்திய தபால் நிலையங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் இனி மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். அதன் பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணமானது 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும் டெபாசிட்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.*


*நடப்பு கணக்கு:*

*சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் மாதத்துக்கு ரூ.25,000 வரையில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதைத் தாண்டி எடுக்கப்படும் பணத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதம் கட்டணம் இருக்கும். இந்தக் கணக்குகளில் 10,000 ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. அதன் பிறகு  ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்; அல்லது டெபாசிட் தொகையில் 0.50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.*


*AePS கணக்கு:*

*இந்திய அஞ்சல் கணக்கின் மூலம் ஆதார மூலமான பரிவர்த்தனைகளை (AePS) மேற்கொள்ளலாம். இதில் எந்தவொரு வங்கி வாடிக்கையாளரும் தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல், இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்ற இலவச சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் AePS கணக்கில் இதுவரையில் இலவச சேவைகளாக இருந்த நிலையில், இனி இதற்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. IPPB நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றாலும், IPPB அல்லாத பரிவர்த்தனைகளில் மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இலவசம்.*

முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?



 18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் முறை வாக்காளர்களுக்கு, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ‘இ-எபிக்’ மின்னணு வாக்காளர் அட்டை முதல் முறை இளம் வாக்காளர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.’இ-எபிக்’ தேவைப்படும் முதல் முறை இளம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் www.voterportal.eci.gov.inஇணையதளத்தில், பதிவு செய்து மொபைல் போன் எண் அல்லது இ-மெயில் ஐடி கொடுத்து உள்நுழைந்து, ‘இ-எபிக்’ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2021-ல் பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவு பெற்ற மொபைல் போன் எண்ணைத் தெரிவித்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

*🎫சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply...*

*🎫சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply...*

CLICK HERE TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW - DIRECT LINK.

CLICK HERE TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW - DIRECT LINK

திங்கள், 8 மார்ச், 2021

நாமக்கல் மாவட்டம் - எருமப்பட்டி ஒன்றியம் - ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பிப்ரவரி மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் இன்று (08/03/2021) அளிக்கப்பட்ட நிகழ்வு.

நாமக்கல் மாவட்டம் - எருமப்பட்டி ஒன்றியம் - ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பிப்ரவரி மாத ஊதியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் இன்று (08/03/2021) அளிக்கப்பட்டது.

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட அமைப்பு இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் சந்தித்த நிகழ்வு.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.00  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ( கணக்கு)   அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

பரமத்தி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதக்கால  தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. 
பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொது நிதியில் இருந்து ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகையை விடுவிக்க அறிவுறுத்தல் வழங்கியதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார். பரமத்தி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) இது குறித்து தகவல் நமக்கு அளிப்பார் என   கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று 08.03.2021 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பம்.

வணக்கம் ! 

இன்று (08.03.2021- திங்கள்) பிற்பகல் 04.30  மணியளவில்
 நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் (பொது) அவர்களை ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் தலைமையில் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.க.ஆனந்தன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.பி.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மெ.சங்கர்.
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்.

ஞாயிறு, 7 மார்ச், 2021

*🏛️Breaking News வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.*

*🏛️Breaking News வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.*

 
 *வங்கிகள் இயங்காது!*

 *சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது.*


  *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்தனர். 15, 16ம் தேதி ஸ்டிரைக் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் பேசுகையில், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற போகிறது.*

  *வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் மக்களிடம் விளக்கி கூறுவோம்.*

*பொதுத்துறை வங்கி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.*
  *மேலும், பொதுத்துறை வங்கிகளின் சிறப்பான கடன் வழங்கு அணுகுமுறையால் வேளாண்மை, சிறு மற்றும் குறு தொழில்கள், சேவை துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.*

 
 *கடன் வழங்கி உள்ளோம்.*
     *மார்ச் 2020 புள்ளிவிவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன், வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த துறைகளுக்கு ரூ.12,39,575 கோடியாகவும், தொழில் துறைக்கு ரூ.32,52,801 கோடியாகவும் இருந்தது.*
   *இதில், சிறுகுறு தொழில்களுக்கு ரூ.4,37,658 கோடியாகவும், நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,12,376 கோடியாகவும், பெரும் தொழில்களுக்கு ரூ.26,11,369 கோடியாகவும் இருந்தது.*

 
*கல்வி கடன்:*

     *கோடிக்கணக்கான இளைஞர்களின் உயர்கல்விக் கனவுகளை பொதுத்துறை வங்கிகள் நனவாக்கி உள்ளன.. கல்விக் கடனாக பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள தொகை ரூ.79,06 கோடிகளாகும்.*
       *அதேபோன்று, நலிவடைந்த பிரிவினருக்கு பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி மார்ச் 2020ம் ஆண்டில் ரூ.6,83,876 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகள் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய பெருமளவு கடன்களினால் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலதிபர் ஆனார்கள்.*
    *ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பொதுத்துறை வங்கிகள் 33.17 கோடி ஜன்தன் கணக்குகளை துவங்கின. ஆனால் தனியார் வங்கிகளின் பங்கு வெறும் 1.25 கோடி கணக்குகள் தான் துவங்கின.. எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டதால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.*
       *அவர்களுக்கு வங்கி சேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விடும். போராட்டம் நடைபெறும் எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் தெருமுனைக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கருப்புப்பட்டை அணிந்து, எதிர்ப்பு முகக்கவசங்கள், சுவரொட்டிகள் பதாகைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.*

       *எனவே வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" இவ்வாறு கூறினார்..*
         *வங்கிகள் இயங்காது வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஈடுபட உள்ளார்கள்.*
   *இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது.*

*📚1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...*

*📚1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...*