திங்கள், 1 நவம்பர், 2021

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகை கடன் பெற்றவர்களுக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி - தமிழக அரசு அரசாணை மற்றும் நிபந்தனைகள், வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு













 

ரயில்வே பள்ளிகளை மூட ஒன்றிய அரசு திட்டம்?




 


 ரயில்வே பள்ளிகளை மூட ஒன்றிய அரசு திட்டம்? 2022-ஆம் ஆண்டில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பல பள்ளிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூடப்படும் ரயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கேந்திரியா வித்யாலயா அல்லது மாநில அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் ரயில்வே செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரயில்வே சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் குறைவாக மாணவர்கள் பயிலும், பள்ளிகளை அடையாளம் காணவும், அதை வேறுபள்ளியோடு இணைக்கும் நடவடிக்கை குறித்தான விவரங்களை ரயில்வே பொதுமேலாளர்களிடம் ரயில்வே துறை கேட்டுள்ளது. ஒருவேளை பள்ளிகளை மூடக்கூடாது, குறிப்பிட்ட பள்ளிகளை தக்கவைக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விரிவான விவரங்களையும் ரயில்வே நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அலுவல் ரீதியான உத்தரவு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமேலாளர்களிடம் ரயில்வேதுறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் ரயில்வே எடுக்கும் பள்ளிகளை மூடுவது அல்லது வேறு பள்ளிகளுடன் இணைக்கும் முடிவு, பள்ளிகளில் பயிலும் மாணவர்களையோ அல்லது குடும்பத்தாரையே பாதிக்காமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இணைப்பு மற்றும் மூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்போது, அலுவலர்களுக்கு எந்தவிதமான பதவி உயர்வும் வழங்கிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய ரயில்வே துறையின் கீழ் இருக்கும் அமைப்புகளை ஒழுங்குபடுத்த மத்திய முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் அளித்த பரிந்துரையின்படி, பழமையான பல ஆண்டுகள் கொண்ட ரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன. சஞ்சீவ் சன்யால் அளித்த பரிந்துரையில் “ ரயில்வே துறை சார்பில் நாடுமுழுவதும் 94 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவிர, பிறரின் குழந்தைகளும் படிக்கிறார்கள். 2019-ம் ஆண்டில், 15,399 ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள்தான் படித்து வந்தனர், இதில் ரயில்வே ஊழியர்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் மட்டும் 34,277 பேர் படித்தனர். அதுமட்டுமல்லாமல் 87 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளை நடத்தவும் ரயில்வே சார்பில் ஆதரவும், உதவியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் ரயில்வே ஊழியர்களின் 33,212 குழந்தைகள் படிக்கிறார்கள், ரயில்வே ஊழியர்கள் அல்லாதவர்களின் 55,386 பிள்ளைகள் படிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ரயில்வே ஊழியர்களின் 8 லட்சம் குழந்தைகளில் 4 முதல் 18 வயதுவரை உள்ளவர்களில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ரயில்வே பள்ளிகளில் படித்து வருகிறார்கள். ரயில்வே சார்பில் பள்ளிகளை நடத்த ரயில்வே நிர்வாகம் அதிகமான நேரத்தை இதில் செலவிடுகிறது. ஆனால், ரயில்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பில் பிராதானமாக இருக்க வேண்டும். ஆதலால், அவசியமான இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளை நிர்வகிக்கும் நேரத்தை குறைக்க பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பொதுத்துறையாக ரயில்வே துறை உள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் சூழ்நிலையில், தற்போது ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ரயில்வே தொழிலாளர்களின் உரிமையையும், சமூக நலத்திட்டத்தையும் பறிக்கும் செயல் என ரயில்வே தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

 


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்கள் உள்ளனர். மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப். 28-ல் நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பல்வேறு சாதிகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம். 68 சமூகங்களைக் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.முரளிசங்கர் அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதனால் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். நன்றி: இந்து தமிழ் திசை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர்அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.


 

உள்ளாட்சி ‌நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்கள் தலையிடக்கூடாது.


 

05.11.2021 அன்று உள்ளூர் விடுமுறை! தமிழ்நாடு அரசு ஆணை!


 

இந்திய கிறிஸ்தவ திருமண உண்மைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு வழங்கி அரசாணை.


 

சனி, 30 அக்டோபர், 2021

01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!




 

பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இனி மனிதவள மேம்பாட்டுத்துறை என பெயர் மாற்றம் அரசாணை வெளியீடு



 

G.o.Ms.No:238 General Provident Fund - Rate of interest for financial year 2021-2022 effect from 1.10.2021 to 31.12.2021 orders issued