நாமக்கல் மாவட்டம் - அனைத்துவகை துவக்கப்பள்ளி நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள இலைதழைகள் மற்றும் சருகுகள் அகற்றிட தெரிவித்தல் - தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
👇👇👇👇
நாமக்கல் மாவட்டம் - அனைத்துவகை துவக்கப்பள்ளி நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள இலைதழைகள் மற்றும் சருகுகள் அகற்றிட தெரிவித்தல் - தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
👇👇👇👇
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)
----------------------------------------
சமூக ஊடகக் குழுக்கூட்டம்
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டசமூக ஊடகக் குழு கூட்டம் (01.05.2023 ) பிற்பகல் 12.30 மணிக்குபரமத்தி-வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வலைத்தளத்தின் (blogspot) பொறுப்பாளர்களாக மாவட்டத் துணைச்செயலாளர் திரு. வெ.வடிவேல், ஒன்றியச் செயலாளர்கள் திரு.இர.மணிகண்டன் (கபிலர்மலை),திரு.க.சேகர்(பரமத்தி) ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது .
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த புலனக்குழுக்களின்(Whatsup groups) பொறுப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.கோ.தியாகராசன் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
3.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த முகநூல் (Facebook) பக்கங்களின் பொறுப்பாளர்களாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் திரு.த.தண்டபாணி ,தகவல் தொழில் நுட்ப அணியின் துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
4.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வலையொளி தளத்தின் (YouTube)பொறுப்பாளராக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.தண்டபாணி ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார், மாவட்டத் துணைச்செயலாளர் திரு.சி.செயவேலு ,நாமக்கல் ஒன்றியப் பொருளாளர் திரு.மு.சசிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றுகிறது.
5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்தின் கீச்சகம் (Twitter)பொறுப்பாளராக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
6.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் பள்ளி மற்றும் கல்வித்தகவல் வலைத்தளம் மற்றும் மின்னணு செயலி சார் பயிலரங்கு 14.05.2023 அன்று நடத்துவது என்று இக்குழு முடிவாற்றியது.
//உண்மை நகல்//
-மெ.சங்கர்
மாவட்டச்செயலாளர்
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியேற்றப்பட்டது .
இந்நிகழ்வில் மாவட்டத் துணை தலைவர் ப ராஜேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொ சுதாகர் சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் சி பெரியசாமி , ஒன்றியச் செயலாளர் கா சுந்தரம் , ஒன்றியப் பொருளாளர் மு தனசேகரன், துணைத் தலைவர் கா முருகன், மூத்தோர் அணி அமைப்பாளர் செ சுப்பிரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு!!!
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
---------------------------------------------
ஒன்றியத்தின் தகுதியுடைய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும்.
ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பரமத்தியில் மே தின கொடியேற்று விழா 01.05.2023 காலை 10 மணிக்கு பரமத்தி வட்டாரக்கல்வி கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நீட் தேர்வு 2023 - மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் நகரங்களின் (Examination City) விவரம் வெளியீடு.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் எருமப்பட்டியில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றியத் தலைவர் ரெ.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் மன்றக் கொடி ஏற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர்நீ.கனகலிங்கம், ஒன்றியச் செயலாளர் இரா.செல்வராசு, ஒன்றிய துணைச் செயலாளர் பா.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று மேதின வணக்கம் செலுத்தினர்.
#எருமப்பட்டி