கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
--------------------------------------------
ஒன்றியத்தின் தகுதியுடைய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும்.
ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடாமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ,
ஒன்றியத்திற்குள் இடமாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைமுற்றிலுமாக கைவிட வேண்டும்.
ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உரிமையினை சட்டப்பூர்வமாக தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும். ..
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும்-கல்வித்துறையும் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பள்ளிபாளையம் ஒன்றிய கிளையின் சார்பில் 04.05.2023 அன்று மாலை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்..
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் மா.ரவிக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் ..
ஒன்றியச் செயலாளர் இளையராசா அவர்கள் கோரிக்கை உரையாற்றினார்..
திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் கார்த்திக் அவர்கள் ஆதரவுரை ஆற்றினார்..
மாவட்டப் பொருளாளர் பிரபு அவர்கள், மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் அவர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ..
மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..
மாநிலப் பொருளாளர் முருக செல்வராசன் அவர்கள் ஆர்ப்பாட்டப் பேருரையாற்றினார்
இக்கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட நிறைவில் ஒன்றியப் பொருளாளர் சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரை நவின்றார்..