வெள்ளி, 25 அக்டோபர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் வேண்டுகோளின் மீது விரைவு நடவடிக்கைகள் மேற்கொண்ட நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!



அன்பானவர்களே!வணக்கம். பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு பிழைப்பூதியம்  இன்று வரை (25.10.19)
வழங்கப்பட வில்லை; விரைந்து  வழங்கப்பட வேண்டும் என்று என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பு  வேண்டுகோள் விடுத்தது. இவ்வேண்டுகோள் கிடைக்கப்பெற்றதும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் விரைந்து தலையீடு செய்வதாக தெரிவித்தார். இத்தகு நிலையில்   எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் நேற்றைய (24.10.19)தேதியிட்டு,அதாவது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணையை (தப்பித்துக்கொள்ளும் உள்ளுணர்வில்) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு அளித்துள்ளார். பிழைப்பூதிய ஆணையை மட்டும்  வைத்துக்கொண்டு  தீபாவளியை கடத்திட ; நகர்த்திட இயலாது என்பதை அனைவரும் நன்கறிவர்.
வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை எனும் வார்த்தையை மட்டும்  வைத்துக கொண்டு மிகச்சிறந்த  பில்டர் காபியை  சுவைக்கவே இயலாது என்பதை அனைவரும்  உணர்ந்திருந்தாலும், தற்போதைக்கு இவ்வளவே இயலும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள ளது என்பது தெளிவாகவே தெரியவருகிறது. பிழைப்பூதியமே தராமல் அலையடித்து, காயடித்து
தன்வழிக்கு கொண்டுவந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த  எருமப்பட்டிவட்டாரக் கல்விஅலுவலர் தற்போது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணை வழங்கிஉள்ளார் எனில் யோசிக்க வேண்டியது நிறையவே உள்ளது. ஏனெனில் , நேற்றைக்கு(24.10.19) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரை அழைத்துப்பேசிய எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலகப் பிரிவெழுத்தர் தனக்கும்,தங்களது அலுவலகத்திற் கும்  பிழைப்பூதியம் வழங்க விதிகளில் இடமில்லை என்றும்,எங்களுக்கு அதிகாரமில்லை  என்றும் ,தற்காலிக பணிநீக்கம் செய்த மாவட்டக்கல்வி அலுவலரிடமே சென்று கேளுங கள். நீங்கள் மாவட்டக்கல்வி அலுவலருக்கு 50℅பிழைப்பூதியம் வேண்டி கடிதம் கொடுத்து நாமக் கல் மாவட்டக்கல்வி அலுவலரிடம் பிழைப்பூதியம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று  தலைமையாசிரியருக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் செய்துள்ளார் என்பதே யெதார்த்தமான உண்மைநிலையாகும்.
இத்தகு மனநிலையில், மமதைநிலையில் நேற்றைக்குச் சொன்ன பிரிவெழுத்தர் இன்றைக்கு ஆணை வழங்குவது என்பது ?!
எவ்வாறு?!எப்படி!?.
இதற்கெல்லாம் காரணம் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரின் சட்டப்படியான, விதிப்படியான  தலையீடே ஆகும். எது எவ்வகையாயினும் இத்தகு பணிமுன்னேற்றத்தை,இவ்வாறான பிழைப்பூதிய ஆணையை வரவேற்போம்!பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரின் வங்கிக்கணக்கில் விரைந்து பிழைப்பூதியம் அனுமதிக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்போம்! பிழைப்பூதிய ஆணை வெளியாகிட  காரணமான நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!
மிக்கநன்றி! -முருகசெல்வராசன்.,மாசெ., தநாதொப ஆசிரியர் மன்றம்.,
நாமக்கல்மாவட்டம்.

Go No:334 date of:24.10.2019 GPF Rate of interest for the financial year 2019-2020


சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை- என்றுரைப்பார் பாவேந்தர் பாரதிதாசன். நீதிக்கான நீண்ட நெடிய பயணத்தில் தீரமுடன் பயணிப்போம்!குரல் கொடுப்போம்!



அன்பானவர்களே! வணக்கம்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் ,பொட்டிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளியில் எதிர்பாராத விதமாக கழிப்பறைச்சுவர் இடிந்து விழுந்தது.இரண்டு குழந்தைகள் காயமுற்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விரைவு நடவடிக்கைகளின் காரணமாக , தலையீடுகளின் காரணமாக,நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் முன் முயற்சிகளின் மூலமாக  குழந்தைகளுக்கு உயர்மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்று நலமுடன் உள்ளனர். பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில்கின்றனர்.மேற்கண்ட எதிர்பாராத சம்பவத்திற்கு இதர அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், கல்வித்துறைத் அலுவலர்களும் பள்ளித் தலைமையாசிரியரை மட்டும் பொறுப்பாக்கி கைகழுவிக் கொண்டு விட்டு, தற்காலிகபணி நீக்கம் செய்துவிட்டு  இப்பிரச்னையில் தங்களை எல்லாம் பரிசுத்தமாக்கிக் கொண்டுவிட்டனர். ஆனாலும் ஒரு குழந்தையின் பெற்றோர் பெருந்தொகையை குழந்தைக்கு உதவித்தொகையாக வழங்கிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.தமிழக கல்வித்துறை ரூ 50,000/உதவித்தொகையை காசோலையாக குழந்தைகளின் பெற்றோரிடம் அளித்துள்ளது. மேற்கண்ட விபத்துக்குள்ளான  பெற்றோர்  தொடுத்துள்ள வழக்கிற்கு எதிர்உரை அளிப்பதற்குக்கூட தற்காலிக பணிநீக்கத்தில்  வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை நீதிமன்றத்தில் ஆசராக வேண்டுமென்றுச்சொல்லி சென்னையில் வைத்து வழக்குச்செலவுக்கென சற்றொப்ப ரூ12,000/ வரை எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் ஈவு இரக்கமற்ற வகையில் பணம் பறித்துள்ளார். இத்தகுவழிப்பறிக்கொள்ளைக்கு ஒப்பான செயலை எரும்ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் துணிச்சலுடன் செய்திட பக்கபலமாக இருப்பது எது?எவர்?என்பது ஆராயப்படவேண்டும .
இத்தோடு இவ்வலுவலுரின் திருப்பணிகள் முடிந்திடவில்லை. தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை அலைபேசியில் பேசிடும் நேரங்களில் , வரவழைத்து நேரில் சந்திக்கும் பொழுதில் எல்லாம் ,ரூ30,000/கொடு என்று நச்சரிக்கும் காரியங்களை செய்யத்தவறுவதே இல்லை. இம்மாதிரியாக   அப்பள்ளி ஆசிரியர்களிடமும்  பணம் திரட்டி பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் தந்து வழக்கை முடித்துக்கொள்ளலாம்(!?) என்று அரியபெரிய காரியம் ஆற்றுகிறார்.
ஒரு நீதிமன்ற
வழக்கை ஒரு அரசு அலுவலர் சட்டப்படியாக அணுகிடல் வேண்டும் எனும் பாலபாடம் கூடாது அறியாது  பள்ளியில் பெரியமனிதர்கள் என சிலரை  அழைத்துவைத்தும்,ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க ஆசிரியர்கள் என சிலரை அடையாளம் கண்டறிந்து அழைத்துவைத்துக்கொண்டு பள்ளியை,கல்வியை கட்டபஞ்சாயத்து செய்திடும் இடமாக மாற்றிடுவதற்கு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து? வழிகாட்டல்  செய்யப்படுகிறது என்பதும் ஆராயப்பட வேண்டும்.
இத்தோடு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் திறன்மிகு நிர்வாகப்பணிகள் நின்றபாடில்லை. மேற்கண்ட பொட்டிரெட்டிப்பள்ளிக்கு  எங்குமே கேட்டிறாத வகையில், கண்டிறாத வகையில் பள்ளியின் ஆசிரியர்கள் அறுவருக்கும் மாதத்திற்கு ஒருவராக பள்ளித்தலைமையாசிரியர் பொறுப்பேற்று பள்ளியை நடத்திட வேண்டுமென்று சுழற்சிமுறையில் தலைமையாசிரியர் பொறுப்பு வழங் கி எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மகாகவி பாரதியின் கனவை நனவாக்கியும் (?!)உள்ளார்.
மேற் கண்டவாறு சுழற்சிமுறை தலைமையாசிரியர் நியமனத்திற்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து ?ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
 மேலும் ,எரும ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர்  பள்ளித்தலைமையாசிரியர் தற்காலிகபணி நீக்கத்தில் வைக்கப்பட்டுள் ளதால் பக்கத்து ஈராசிரியர் பள்ளியில் இருந்து மாற்றுப்பணி நியமனம் வேறு ஒன்று செய்துள்ளார்.
தற்காலிக பணிநீக்கப்பணியிடத்திற்கு தேவையற்ற வகையில்  மாற்றுப்பணி நியமனம் செய்து ஈராசிரியர் பள்ளியை ஓராசிரியர் பள்ளியாக்கி ஈராசிரியர் பள்ளியை,
இப்பள் ளி மாணாக்கர்களின் கல்வியை சீரழிப்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர்
இம்மாதிரியாக, ஒருமாதிரியாக சட்டத்திற்கு,
விதிகளுக்கு,
செயல்முறைகளுக்கு, நடைமுறை மரபுகளுக்கு
ஒவ்வாதவைகளை , எதிரானவைகளை சுய ஆதாயம் தேடிக்கொள்ளும் பெருவிருப்பத்தோடு நிறைவேற்றிக்கொள்கிறார். ஆனால் சட்டப்படி வழங்கிட வேண்டிய வாழ்வூதியத்தை,பிழைப்பூதியத்தை மட்டும் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியருக்கு பிடிவாதமாக அனுமதிக்காது  இத்தலைமையாசிரியரை கொடுமைப்படுத்துகிறார். இத்தலைமையாசிரியரின் குடும்பத்தை நிர்கதியாக தெருவில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து இரசித்து வருகிறார்.  இத்தலைமையாசிரியரின் குடும்பத்தின் தீபாவளியை கறுப்புத்தீபாவளியாக,துக்க தீபாவளியாக்கி வருகிறார். மாதச்சம்பளமே இல்லாது ,வீட்டோடு முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்தலைமையாசிரியரிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குக்கு  செலவுத்தொகை வாங்கிடத் தெரிகிறது.
வழக்கை முடிவுக்கு கொண்டுவர இலட்சத்தில் பணம் கொடு என்று அச்சுறுத்திடத் தெரிகிறது. சட்டவிரோதமான காரியமெல்லாம் மிகச்சரியாக திட்டமிட்டுச் செய்திட தெரியும் எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு சட்டப்படியாக பிழைப்பூதியம் வழங்கிடத்தெரியாது;தெரியவில்லை (!?)என்று  எவராவது உரைத்தால் ,அது தான் இக்கல்வியாண்டின்(2019-20) ஆகப்பெரிய நகைச்சுவைகளில் ஒன்றாக இருக்கும்(!?). பொட்டிரெட்டிப்பட்டி பள்ளி தலைமையாசிரியருக்கு  பிழைப்பூதியம் கோரியும்,அநியாயமாக பழிவாங்கப்படுவோருக்கு
நீதி கோரியும் , எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்களின் முகாந்திரங்களைகணக்கில் கொண்டு,கல்வித்துறைக்கு அவப்பெயரைத்தேடித்தரும் , தவறிழைக்கும் அலுவலரை  பாதுகாக்காது ஒழுங்குநடவடிக்கைகள்  வலியுறுத்தியும் நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலரிடம் இன்று(25.10.19) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,நாமக்கல் மாவட்ட அமைப்பு கோரிக்கை விண்ணப்பம்  அளிக்கிறது. பொதுநன்மைக்கான,
அறத்திற்கான,
நீதிக்கான பெருவிருப்பம் கொண்ட நல்லோர்களின் ஆதரவினை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்டமைப்பு வேண்டுகிறது. -முருகசெல்வராசன் .
*நிதி உதவிப் பள்ளிகளது  - பள்ளிக்குழு புதுப்பித்தல் - அங்கிகாரம் புதுப்பித்தல் காலதாமதம் காரணமாக - ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தப்படக்கூடாது.*

*தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரை.*
👇👇👇👇👇👇👇👇
*🌷அக்டோபர் 25, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer)பிறந்த தினம் இன்று(1343).*

 *இவர் ஒரு ஆங்கில*
*நூலாசிரியரும், கவிஞரும்,*
*மெய்யியலாளரும்,*
*இராஜதந்திரியும் ஆவார்.* *இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு* *செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும்* *ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார்.*  *ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர்*
*ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார்.*
*🌷அக்டோபர் 25, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
 *இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட தினம் இன்று (1924).*

 *தமது   வாழ்நாளில்  இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவதாக 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் அவரது* *ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார். அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர்.*
 *பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து   “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது.  வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய்  இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.*
*🌷அக்டோபர் 25, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்த தினம் இன்று(1881).*

 *இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார்.*
*20ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறையில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர்.*


*பாரம்பரிய ( Conventional) ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.*

*‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை* *அறிமுகப்படுத்தினார்.*
*5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.*

*சிற்பம் வடிப்பதிலும் செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.*

*அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.*

*தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.*

வியாழன், 24 அக்டோபர், 2019

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கடிதம்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'இந்து இளைஞர் முன்னணி' மற்றும் 'இந்து மாணவர் முன்னணி' முதலிய மதவாத அமைப்புகள்  உறுப்பினர் சேர்க்கை செய்வது மற்றும் 'லவ் ஜிகாத்' துக்கு  எதிராக மாணவிகளைத் திரட்டுவது முதலிய நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்கிறது.
இப்பொருள் தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கேட்கிறது.
*🚀🚀FLASH NEWS:-ஆசிரியர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட வேண்டும்!! என்பது சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள்*
*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*🌷மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.*


*மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.*

 *ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.*


*ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.*

 *இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது*
*வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.*

 *இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.*

*1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு.*

 *இவர்களோடு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.*