சனி, 23 நவம்பர், 2019
நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.
அரியலூர் மாவட்டம் மீண்டும் உருவாக்கப் பட்ட தினம் இன்று (2007).
ஜனவரி 1, 2001 ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
மீண்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.

அரியலூர் ரயில் விபத்து நடந்த தினம் இன்று(1956).
சென்னையிலிருந்து இரவு 9.50 க்கு புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
விடியற்காலை (tiruchy) அரியலூரை நெருங்கியபோது மழையினால் சேதமடைந்திருந்த மருதையாறு பாலம் மீது செல்லுகையில் நிகழ்ந்தது இந்த விபத்து.
இவ்விபத்தில் 142 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
110 பேர் பலத்த காயமடைந்தனர்.
பலரது உடல்கள் கிடைக்கவே இல்லை.
கடைசி வரை அடையாளம் காணாத 60 உடல்கள்
ஒரே குழியில் புதைக்கப்பட்டன.
அப்போது ரயில்வே துணை அமைச்சராக இருந்தவர்
தமிழகத்தை சேர்ந்த ஒ.வி.அழகேசன்.
இவ்விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே கேபினட் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம் இன்று.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.
லண்டனில் இருக்கும்போது லோர் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.
இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார்.
இவர் இயற்றிய நூல்கள் உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு.
மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகளுக்கு உறைவிடமாய் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்த இவர் தன்னுடைய 78ஆவது வயதில் (1937) மறைந்தார்.

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம் இன்று.
மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல, பாரதிதாசன் மீதுள்ள பற்றினால் ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது.
சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.
அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955இல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் 1971இல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக மாற்றினார்.
இவர், மாநிறத்தை, ‘கறுப்பின் இளமை’ என்றார்; பல்லியை, ‘போலி உடும்பு’ என்றார்; அழுகையை, ‘கண் மீனின் பிரசவம்’ என்றார். நீர்க்குமிழிகளை, ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றார்; வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றார். இப்படி அவருடைய கவிதைகள் அனைத்திலும் உவமைகள் வாரி இறைக்கப்பட்டிருக்கும்.
‘நாணல்’ என்ற திரைப்படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ என்று தொடங்கும் பாடலில்... ‘மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல்’ என்று கதாநாயகன் பாடுவார். அதற்கு, ‘மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு’ என்று கதாநாயகி பதிலளிப்பார். காரணம், நிழலுக்கும்... இருட்டுக்கும் கவிஞர் இங்கே வேறுபாடு கண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆம், நிழல் என்பது இடம் மாறக் கூடியது. இருட்டு என்பது மண்ணில் நிரந்தரமாக தொடரக்கூடியது. இப்படி இடம் மாறக்கூடிய நிழல் எப்படி மண்ணின் மேலாடையாக இருக்க முடியும் என்பதே கவிஞர் சொல்லும் பதில் ஆகும். இதுபோன்ற உவமைகளைக் கற்பனையுடன் கலந்து தந்தவர் சுரதா என்றால் மிகையாகாது. இதே பாடலில், பதினொன்றைக்கூட... பத்துக்கான மேலாடை என்றே வர்ணிக்கிறார்.
‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஆரம்பிக்கும் பாடலில்... வாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்லியிருப்பார்.
‘பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்!’
ஒவ்வொரு கட்டுரைகளிலும் முகவுரையும், முடிவுரையும் இருப்பதுபோல... வாழ்க்கையிலும் இதுபோன்ற உவமைகளைப் புகுத்திப் பாடல்கள் எழுதியவர் சுரதா. அந்தப் பாடலின் இறுதியில்,
‘வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை!’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியிருப்பார்.
உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.
1942ஆம் ஆண்டு சுய மரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசன் இயற்றிய நாடகம் ஒன்று தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்து அசத்தினாராம். ‘முதன்முதலில்’ என்னும் வார்த்தைக்குச் சொந்தக்காரராக விளங்குபவரும் உவமைக் கவிஞர் சுரதாதான். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம் என விதவிதமாக கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாயவைத்தவர் சுரதா.
முதன்முதலில் கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியவரும், அதிக கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞரும் இவரே. 1944இல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
வெள்ளி, 22 நவம்பர், 2019
பொதுத்தேர்வு மையம் தேர்வு செய்வதில் பாரபட்சமான செயல்பாடுகள் காணப்படுவதால் இப்பணியிலிருந்து வட்டாரக்கல்வி அலுவலர்களை முற்றிலுமாக விடுவித்திடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!
அன்பானவர்களே! வணக்கம் .
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் முடிவினை கைவிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது. கல்விபயில்வதிலிருந்துமாணாக்கர்களை விரட்டிவிடும் ஆபத்து நிறைந்த பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்களை அமைத்தல்
மற்றும் தேர்வு செய்தலில் கூட வட்டாரக்கல்வி அலுவலர்கள் தில்லுமுல்லு வேலை செய்வார்கள் என்பதை கண்டும்,கேட்டும் ,அறிந்தும் அதிர்ச்சி ஏற்படுகிறது. பொதுத்தேர்வு மையங்கள் அமைத்தலில் வட்டாரக்கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. இம்மாதிரியான, ஒருமாதிரியான அலுவலர்களிடம் மாட்டிக்கொண்டு தொடக்கக்கல்வி படும்பாடும் நினைத்து பெருத்தக் கவலை ஏற்படுகிறது. இம்மாதிரியான அலுவலர்களிடமிருந்து
கல்வியைக் காப்பாற்ற யாராவது
ஒரு தேவதூதன் வந்துதிக்க மாட்டாரா?!என்று ஆதங்கமும்,
ஏக்கமும் எழுகிறது.
பள்ளியின் மொத்த மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தனக்கு விசுவாசமான தலைமையாசிரியர்களின் பள்ளி எனில் தேர்வு மையம் என்று அறிவித்து தேர்வினை, தேர்வுமையத்
தகுதியை பாழ்படுத்துவது வேதனையளிக்கிறது.
பெரும் எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் கல்வி பயிலும் பள்ளியை தேர்வு மையம் இல்லை என்று அறிவிப்பதும், விரல்விட்டு எண்ணும் சொற்ப அளவிலான எண்ணிக்கையில் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளியை
சுயஆதாயத்தினை மனதில் கொண்டு தேர்வு மையம் என்று அறிவிப்பதும் வேடிக்கையானதாகும்.
1)தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து வெளிப்படையாக நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் .நெறிமுறைகள் அனைத்துத்தலைமையாசிரியர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
2)குறுவளமையத்தின் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பள்ளிகளை பார்வையிட்டு அப்பள்ளியின் புறவய,அகவயக் கட்டமைப்புகளை கணக்கில்,கவனத்தில் கொள்ளச்செய்து இதனடிப்படையில் குறுவளமையப் பள்ளிகளின்
அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதனடிப்படையில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
3)பத்து மாணாக்கர்களுக்கு மேல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் கல்விபயிலும் பள்ளிகளை மட்டுமே தேர்வு மையமாக அறிவிப்பதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
4)வட்டாரக்கல்வி அலுவலர்களை தேர்வு மையத்தேர்வுக் குழுவில் இருந்து வெளியேற்றிட வேண்டும். ஏனெனில் இவ்வலுவலர்கள் சங்கம் சார்ந்தும், சுய ஆதாயம் சார்ந்தும் அதிகார துச்பிரயோகத்தில் ஈடுபடும் வாடிக்கையும் , வழக்கமும் உடையவர்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வள்ளல்களைப்போன்று தேர்வு மையப்பரிசுகளை வாரி வழங்கக்கூடியவர்கள்.ஆகையால் ,
இம்மாதிரியான அலுவலர்களை தேர்வு மையப்பணிகளிலிருந்து விலக்கிட வேண்டும்.
4)தேர்வுமையத் தேர்வு பிரச்னைகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நேரடித்தலையீடு செய்திட வேண்டும்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பிலான மேற்கண்ட கோரிக்கைகளின் மீது நேரடிக்கவனம் செலுத்துமாறு கல்வித்துறை உயர்அலுவலர் பெருமக்களிடம் வேண்டுகிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)