புதன், 29 ஜூலை, 2020
தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் நிகழ்வு
அன்புடையீர்! வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ வின் மாநில முடிவின்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோரின் வழியில் மாண்புமிகு.தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் நிகழ்வு
இன்று (29.07.2020-புதன்) பிற்பகல் 05.00 மணியளவில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), க.சேகர் (பரமத்தி), இரா.தேசிகன்
ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் (புதுச்சத்திரம்) ஆகியோர் பங்கேற்றனர்.
-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்
-நாமக்கல் மாவட்டம்.

பன்மொழிக்கற்றல், மும்மொழிக்கொள்கை, சமசுகிருதம் திணிப்பு போன்றவற்றை தமிழகம் ஏற்குமா? எல்லா உயர் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்பது உயர்கல்வியை எட்டாக்கனி ஆக்காதா? கல்விக்கட்டணங்கள் விலைவாசியைப்போல, பெட்ரோல்,டீசல் விலையைப்போல, அன்றாடம் உயரும் ஆபத்து கல்விகற்பதில் இருந்து குழந்தைகளை விரட்டி விடாதா? #தேசமே!எழு!
பன்மொழிக்கற்றல்,
மும்மொழிக்கொள்கை,
சமசுகிருதம் திணிப்பு
போன்றவற்றை
தமிழகம் ஏற்குமா?
எல்லா உயர் படிப்புகளுக்கும்
நுழைவுத்தேர்வு
என்பது உயர்கல்வியை எட்டாக்கனி ஆக்காதா?
கல்விக்கட்டணங்கள்
விலைவாசியைப்போல,
பெட்ரோல்,டீசல் விலையைப்போல,
அன்றாடம் உயரும் ஆபத்து
கல்விகற்பதில் இருந்து குழந்தைகளை விரட்டி விடாதா?
#தேசமே!எழு!
-------------------------------------------
புதியகல்விக்கொள்கை-2020 இல்
சில குறிப்புகள்.
*34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
*பன்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வழிவகை செய்கிறது.
*இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல் பூர்வ வார்த்தைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.
*மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்விக் கொள்கையில் பாடத் திட்டங்கள் இருக்கும்.
*மாநில மொழிகளில் கல்வி கற்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாட திட்டங்கள் அறிமுகம்.
*புதிய கல்வி கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.
*புத்தகம் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்.
*மாற்றுதிறனாளிகள் எளிதாக கல்வி கற்க புதிய மென்பொருட்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
*மாற்று திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய பாட திட்டம் அறிமுகம்.
*12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமலில் இருக்கும்.
*செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்கள் ரேங்க் கார்டு தயார் செய்யப்படும்.
*5ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம்.
*8 ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கப்படும்.
*மாணவர்கள் உள்ளூர் கைவினை தொழில்களை கற்றுக்கொள்ள நடவடிக்கை.
*இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி கற்க வைப்பது ஆசிரியர்களின் பொறுப்பாக்கப்பட்டு உள்ளது.
*குழந்தைககளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்ப கல்விதரப்படும்.
*அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்கும்.
*தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை.
* புதிய கல்விக் கொள்கையில்
கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த இந்த புதிய கல்விக்கொள்கை வழி வகைசெய்கிறது.
*முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.
*இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும்.
*தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
*இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்
*மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.
*5 + 3 + 3 + 4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
*6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் கற்பிக்கப்படும்.
*பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரவழிவகை உண்டு.
* உயர்கல்வியில் எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படும்.
*15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
*உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குப்படுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
*நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
*கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும்.
* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள். 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்.
* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை.
* நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைய செய்யப்படும்.
* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி.
* கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்.
* கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்
* அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
* தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.
* பள்ளிப்படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்திறன் இருக்கும்.
*புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம்.
*என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்.
*பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கும்.
*பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் விருப்ப மொழியாக சமஸ்கிருதம் சேர்க்கப்படும்.
*சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மையான மொழிகளும் வழங்கப்படும்.
*நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும்.
*கல்விக் கட்டணங்கள் குறித்து கல்விக் கொள்கையில் வரிகாட்டல் செய்யப்பட்டுள்ளது.
*தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும், முழுமையாகவும் வெளியிடப்படும்.
*கல்விக்கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

ஜூலை 29, வரலாற்றில் இன்று. நாசா எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு தொடங்கப்பட்ட தினம் இன்று(1958).
ஜூலை 29,
வரலாற்றில் இன்று.
நாசா எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு தொடங்கப்பட்ட தினம் இன்று(1958).
இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.
இது 1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல் என்பது நாசாவின் தாரகமந்திரமாக
உள்ளது. பரிதியியற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சூரியக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற விண்ணுளவிகள் அனுப்பி ஆராயந்தறிதல்,
பெருவெடிப்புக் கோட்பாடு போன்ற வானியற்பியல் கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது.

ஜூலை 29, வரலாற்றில் இன்று.தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.
ஜூலை 29,
வரலாற்றில் இன்று.
தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.
திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்
பட்டியில் 1890ஆம் ஆண்டு ஜூலை 29இல் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.
திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார். திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி
யிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார்,
மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் , சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நீலகண்ட சாஸ்திரி, எஸ்.குப்புசாமி போன்ற பேராசிரியர்களிடம் மாணவராக இருந்து, தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார். ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில், இதே தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் , திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார்.
தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார். குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று, பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத் தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார். புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி
மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார்.
ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை, திருவையாறில் , தொடர்ந்து திருக்குறள் வகுப்பு நடத்தினார். எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக் கடத்தினார்.
இன்றைய சூழலில் , பல இடங்களில் முனைவர் பட்டம் என்பது விலை கொடுத்து வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம் முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து, முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.
ஆம், தமிழில் ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும். இந்நாளில், பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.
மொழி- ஒருபோதும் தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் - முற்றாத இளங்கொடி போல- தழைத்தோடிக்
கொண்டே இருக்கவேண்டும். தேவை உணர்வோம்.!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)