புதன், 28 பிப்ரவரி, 2018

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (2017-18) பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் வழங்குதல் சார்பாக ...


🌟பயிற்சியின் நோக்கங்கள்:

 ⚡அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தல்.

⚡குழந்தையின் உரிமைகள்.

⚡பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச்செய்தல்.

⚡பாலினப்பாகுபாடு.

⚡பேரிடர் மேலாண்மை.

⚡தரமான கல்வி.

⚡கற்றல் விளைவுகள்.

⚡உள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்.

⚡பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளி நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்.

⚡சமூகத் தணிக்கை.

⚡தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம்.


🌟பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் (பள்ளி வாரியாக) மற்றும் எண்ணிக்கை:

⚡பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1

⚡பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் (சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர்) - 1

⚡பெற்றோர் (நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட) - 2

⚡மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரிதிநிதி - 1

⚡ஆசிரியர் - 1


🌟பயிற்சி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கான செலவின விபரம்:

⚡உணவு - ரூ.50

⚡தேநீர் + சிற்றுண்டி - ரூ.16

⚡பயணப்படி - ரூ.20

⚡போட்டோ + பேனர் + TLM + கருத்தாளர் மதிப்பூதியம் - ரூ.14

⚡பயிற்சி கட்டகம் - ரூ.20

⚡ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மார்ச் 2018 மாதத்தில் 23 ம் தேதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கு - ரூ.180


🌟குறிப்பு:

⚡மதிய உணவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவினத்தொகையை பயிற்சியில் பங்கேற்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ரொக்க தொகையாக வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


🌟மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை:

⚡முதல் கட்டம் - 05.03.2018

⚡இரண்டாம் கட்டம் - 06.03.2018


🌟பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவிலான பயிற்சி கால அட்டவணை:

⚡முதல் கட்டம் - 12.03.2018

⚡இரண்டாம் கட்டம் - 14.03.2018

[பயிற்சி இந்த இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒரு கட்டம் (ஒரு நாள்) மட்டுமே பயிற்சி]

NCERT பாடங்கள் குறைக்கப்படும்~ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்...


கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் பாதியாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி பாடத் திட்டங்கள், பி.ஏ., பி.காம். படிப்புக்கான பாடத்திட்டங்களைவிட கூடுதலாக உள்ளது. இதைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் 2019 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம், மாணவர்கள் தங்களை அனைத்து துறையிலும் மேம்படுத்திக் கொள்வதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் மார்ச் மாதம்தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் மே மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை அடுத்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தார். 

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம் சர்.சி.வி.ராமன் விளைவு வெளியிடப்பட்ட நாள்... "ராமன் விளைவு" [Raman Effect] என்றால் என்ன?


பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர். 

இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. 

அவை:

படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி.

முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்.

முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்.

பயன்பாடுகள் :

இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் "கைரேகை" யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.

பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல், வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல், 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு "பால் ஆதார்"~மத்திய அரசு அறிவிப்பு...

சேலம்~நாமக்கல் வழியாக மேலும் 2 ரயில்கள் இயக்கம்...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுவில் நாமக்கல்மாவட்டப்பொறுப்பாளர்கள்....



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுவில் நாமக்கல்மாவட்டப்பொறுப்பாளர்கள்....

மார்ச் 2018~பள்ளி நாட்காட்டி....

தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிய முன் அனுமதி பெற்று பயிலும் மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க தற்செயல் விடுப்பு துய்க்கலாமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்...

Emis Photo Status Report as on 26-02-2018...

Aadhaar Enrollment in Emis as on 26-02-2018 ...

Emis Enrollment Status Report as on 26-02-2018...

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்...

திங்கள், 26 பிப்ரவரி, 2018

SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள் மட்டும்~ இரண்டு கட்டங்களாக 12.3.2018 மற்றும் 14.3.2018…

📰ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் மறியல் போராட்டம்.... (பிப்ரவரி 21~24) நாளிதழ் செய்திகள்...

ஜாக்டோ~ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…

தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு...


பொது தேர்வுக்கான தேர்வு அறைகளில் மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், மார்ச் 1ல்- பிளஸ் 2;
 மார்ச் 7ல்- பிளஸ் 1;
 மார்ச் 16ல்- 10ம் வகுப்புக்கும் பொது தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 

உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி  அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின் வசதி பெற வேண்டும் .

 அனைத்து தேர்வறைகளின் முன்புறமும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும்.

தேர்வின் போது மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும். 

 அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுரா மாநிலம் சேரவில்லை...(RTI- LETTER)

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்...

சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்...

செண்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500 
இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

சென்னை பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கல்வி கவுன்சில் கூட்டம், துணை வேந்தர், துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில்,  நடந்தது.இதில்,  பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான விதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் கல்வி ஆண்டில், சென்னை பல்கலையில், பி.எட்., கல்வியியல் படிப்பு அறிமுகப்படுத்தவும், கல்விக்குழு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து, துணை வேந்தர், துரைசாமி கூறியதாவது.பல்கலையால் நடத்தப்படும், 58 வகை முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு, பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
அனைத்து முதுநிலை படிப்பிலும், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும், 'சி.பி.சி.எஸ்., கிரெடிட்' மதிப்பெண் முறை செயல்படுத்தப்படும்.

தமிழ் துறையில், தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம்; தமிழ் இலக்கிய படிப்புகள் என, இரண்டு பிரிவுகளாகவும், இயற்பியலில், அணு இயற்பியல் மற்றும் கருத்தியல் இயற்பியல் என, இரண்டு பாடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின், பல்கலை மானியக் குழு அனுமதியுடன், பட்டம், சான்றிதழ் மற்றும், 'டிப்ளமா' படிப்புகள், 'ஆன்லைனில்' நடத்தப்படும். 

'மூக்' என்ற ஆன்லைன் படிப்புகள், 'ஸ்வயம்' இணையதளம் வழியாக, சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் அறிமுகம் செய்யப்படும். ஆன்லைன் படிப்புக்கான சிறப்பு மையம், சென்னை பல்கலையில் அமைக்கப்படும்.

அனைத்து முதுநிலை படிப்புகளும், மூன்று வழிகளில் நடத்தப்பட உள்ளன. நேரடியாக பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியிலும், ஆன்லைன் முறையிலும், அறிமுகம் செய்யப்படும். இதனால், ஏதாவது ஒரு பாடத்தை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும், மாணவர்கள் படிக்கலாம்.

இதுகுறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தொலைநிலை கல்வி மாணவர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.வரும் கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பி.எட்., படிப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி பெறப்பட்டு உள்ளது.  முதல் ஆண்டில், 500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பாடத்திட்டத்தில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்~ பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்…


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் "ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:- 

சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம் வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

இதில் இளஞ்செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட 68 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

குரூப் - 4 பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு...


சென்னை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப் - 4 பதவியில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் மற்றும் 

தட்டச்சர் பதவிகளுக்கு, 2016 நவ., 6ல், எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் 

வெளியிடப்பட்டுள்ளன.அதில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, 53 காலியிடங்களை நிரப்ப, 28 முதல், மார்ச், 1 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தட்டச்சர் பதவியில், 15 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 1, 2ல், சான்றிதழ் சரிபார்க்கப் படும். இதற்கான கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 24 பிப்ரவரி, 2018

ஜாக்டோ-ஜியோ மகளிர் மறியலில் (சென்னை-24.02.18) கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற பொருப்பாளர்கள்....

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோவின்
( 24.02.18-சனி)
நான்காம்நாள்
 மகளிர்மறியல் போராட்டத்தில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில் 10பெண்பொறுப்பாளர்கள் தீரமுடன் பங்கேற்று மறியலை வெற்றிப்பெறச்செய்துள்ளனர்.

நான்கு
அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட
வலியுறுத்திப்போராட்டத்தில்  பங்களிப்பை செலுத்தி உள்ளனர்.

நாமக்கல்மாவட்ட
அமைப்பு பத்து  பெண்போராளிகளுக்கும் வாழ்த்தும்-பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது.

           ~முருகசெல்வராசன்.
                      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இன்ஜினியரிங் கவுன்சிலிங்- ஆன்லைனில் நடப்பது எப்படி?

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்...


பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு...

தி இந்து தலையங்கம்~ அரசுப் பணிகள் சீரமைப்பா, பணியிடங்களைக் குறைக்கும் முயற்சியா?


அரசுத் துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. எந்தெந்தப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்யவுள்ளது. அரசுத் துறைகளில் பல்லாயிரக் கணக்கான காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

எந்தவொரு அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும், அங்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. ஓய்வுபெற்றவர்கள், பணியிட மாற்றம் பெற்றவர்களின் இடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. தலைமைச் செயலகம் முதற்கொண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் வரை காலிப் பணியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்தபடியிருக்கிறது. மாவட்டத் துணை ஆட்சியர் பணிகளுக்கான குரூப் 1 பணிகள் தொடங்கி, அலுவலக உதவியாளர்களுக்கான குரூப் 4 பணிகள் வரை அனைத்துப் பணி களுக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

சில அரசு அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்கள் இருக்கின்றன என்பதையும், மிகச் சில அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவற்றைக் கண்டறிந்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கிவிட வேண்டுமேயொழிய, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட முடிவெடுப்பது தவறானது. அரசுப் பணிகளில் உடனடியாகச் செயல்பட வேண்டியவை, நீண்ட கால நோக்கில் நன்மை பயப்பவை என்று அதன் நோக்கங்கள் வேறுபடுகின்றன. ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகளும், மாவட்ட அருங்காட்சியகத் தின் பணிகளும் வெவ்வேறானவை. ஆனால், இரண்டையுமே அரசு தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். எந்தெந்தப் பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுக்கும்போது, இந்தக் காரணங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் குழுவை நியமித்துள்ள தமிழக அரசின் நோக்கம், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதுதான். அதில் கொஞ்சம் உண்மையிருக்கிறது. ஆனால், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் செலவுகளைக் குறைத்துவிடலாம் என்று வெறுமனே வரவு - செலவுப் பிரச்சினையாக மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகக் கூடாது.

2001 முதல் 2005 வரையில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பணி நியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. அப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான வாய்ப்பை இழந்தார்கள். மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டபோது, வயது வரம்புகள் தளர்த்தப்பட்டபோதும்கூடத் தகுதியான மாணவர்கள் பலரும் அந்த வாய்ப்பைப் பெற முடியாமல் போனது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்துள்ள ஆட்சிப் பணித் துறைக்கான தேர்விலும் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணிகளுக்குப் போட்டியிடும் மாணவர் களுக்கு, அது கிடைக்காமல் போகும்பட்சத்தில், தமிழக அரசுப் பணியாவது கிடைத்துவந்தது. இப்போது அதற்கும் முட்டுக்கட்டை போடும் செயலைத் தமிழக அரசே செய்வது நியாயமாகாது!

    நன்றி: தி இந்து தமிழ்.

24.02.18 (சனி)அன்று சென்னையில் ஜாக்டோ-ஜியோ மகளிர்மறியல்...

அன்பானவர்களே!வணக்கம்.

24.02.18 (சனி)அன்று  சென்னையில் ஜாக்டோ-ஜியோ  மகளிர்மறியல் .

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற
மகளிர் பொறுப்பாளர்கள் தனி வாகனத்தில் பயணிக்கின்றனர்.

நாமக்கல் ஒன்றியச்செயலாளர் திரு.அ.செயக்குமார்,மாவட்டத்துணைச்
செயலாளர் திரு.வெ.
வடிவேல் ஆகியோருடன் வழித்துணையாய் மாவட்டச்செயலாளர் திரு.முருகசெல்வராசன்  செல்கிறேன்.

சென்னையில் அன்றாடம் கைதாகி சிறை செல்லும் நிலையில் நாமக்கல் மாவட்ட மன்றப்பொறுப்பாளர்கள்  இராணுவம்போன்றுஆய்த்தநிலையில் களத்தில் முனையிலே முகந்து நில்லுங்கள்.
 நாம் வெல்வோம்
                 நன்றி
         ~முருகசெல்வராசன்

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-மூன்றாம் நாள் (23-2-18) நிகழ்வுகள்...