வெள்ளி, 29 நவம்பர், 2019

நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.


 தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா பிறந்த தினம் இன்று.

இவர் 1869ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி குஜராத் மாநிலம் பாவ்நகரில் பிறந்தார்.

இவர் ஷோலாப்பூர், பாவ்நகர், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு இவர் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900இல் உகாண்டா நாட்டுக்கு சென்றார்.

பின்பு தாயகம் திரும்பியதும், சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலே மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது


 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்து, அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.

"தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி.

தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 82ஆவது வயதில் (1951) மறைந்தார்...