ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஜனவரி 19,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று(1966).

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்து வந்த
லால் பகதூர் சாஸ்திரி மரணமுற்றதைத் தொடர்ந்து சாஸ்திரி அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த  ஜவஹர்லால் நேருவின் மகள்  இந்திராகாந்தி பிரதம மந்திரியாக பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவர் பிரதமராக குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது ஜனவரி 24ஆம் தேதி ஆகும். அந்த இடைக்காலத்தில் குல்ஜாரிலால் நந்தா தற்காலிக பிரதமராக பதவி வகித்தார்.