திங்கள், 20 ஜனவரி, 2020

ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் பிறந்த தினம் இன்று.

இவர் 1873ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் பிறந்தார்.

பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவ படிப்பு படிக்கும்போது, இவருக்கு படைப்புக் களத்தில் ஆர்வம் அதிகமானதால் இறுதியில், எழுத்தாளராக வேண்டும் என தீர்மானித்தார்.

1898 முதல் 1910 வரை வெளிவந்த "ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்" (Himmerland stories) என்ற கதைத்தொடர் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுதிய கொன்ஜென்ஸ் ஃபால்ட் (தி ஃபால் ஆஃப் தி கிங்) என்ற வரலாற்று நாவல்கள் டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது.

பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் "டென் லாங்கெ ரெஜ்சி" என்ற தலைப்பில் 6 நூல்களை எழுதியுள்ளார்.

1944இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். கவிதைக் களத்தில் சிறப்பாக பங்காற்றிய ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 77ஆவது வயதில் (1950) காலமானார்