திங்கள், 20 ஜனவரி, 2020

ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கான் நினைவு தினம் இன்று.

கான் அப்துல் கப்பார் கான்(Khan Abdul Ghaffar Khan, 06 பிப்ரவரி 1890 - 20 ஜனவரி 1988)  பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.

இளம் வயதில் தனது குடும்பத்தால் பிரிட்டிஷ் போர்ப்படையில் சேர்க்கப்பட்டார்.

இவர் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர், ஒரு இந்தியன் மீது காட்டிய கொடுமையைக் கண்டு சலிப்படைந்தார். இங்கிலாந்தில் இவர் படிக்க வேண்டும் என்று இவர் குடும்பம் முடிவு செய்தததை இவரது தாய் தடுத்ததால் போகவில்லை.

குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தவுடன், "எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.

1985இல் நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், 1987இல் பாரத ரத்னாபெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.

1988இல் இவர் காலமானார்.