புதன், 27 மே, 2020

மே 27, வரலாற்றில் இன்று.

மேஜர் சர் தாமஸ் மன்றோவின் பிறந்த நாள் இன்று.



மன்றோ சென்னையில் கவர்னராக இருந்தார். அவர்தான் திப்புசுல்தான், ஆற்காட்டு நவாப் ஆகியோர்களை போரில் வென்றவர். இவர் சிலை சென்னை அண்ணாசாலையில் இருக்கிறது. ஜமீன்தார் குடிமுறையை ஒழித்தவர். மாவட்டம்தோறும் கலெக்டர்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் முறையை ஏற்படுத்தியவர்.

இவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். திருவேங்கடமுடையானுக்கு தினமும் தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியக் கட்டளை செய்வதற்குத் தன் சொந்த பணத்தில் ஏற்பாடு செய்தார்.
இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோயில் மணி அடிக்கப்படுகிறது. சர்.தாமஸ் மன்றோ பெயர் படிக்கப்பட்டு முதல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

தாமஸ் மன்றோ இறந்து 200 வருடங்கள் மேலாகிறது. ஆங்கிலேயர் ஆட்சி போய் 70 வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றும் மன்றோ அறக்கட்டளை திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்கு தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக