வியாழன், 28 மே, 2020

மே 28,வரலாற்றில் இன்று:தன்பாத் சுரங்க விபத்து நிகழ்ந்த தினம்.

மே 28,
வரலாற்றில் இன்று.

மீத்தேன் வாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சப்தத்துடன் நிலக்கரிச் சுரங்கம் வெடித்து
375 பேர் உயிரிழக்க காரணமான தன்பாத்
சுரங்க விபத்து நிகழ்ந்த தினம் இன்று.




1965ஆம் ஆண்டு  இதே நாளில் கல்கத்தா
நகரத்தின் தன்பாத்திற்கு அருகே நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் வாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சப்தத்துடன் நிலக்கரிச் சுரங்கம் வெடித்து சிதறியது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த 375 பேர் உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்து பல நாட்களாகியும் தீ எரிந்து கொண்டிருந்தது. சுரங்கத்திற்கு அருகே இருந்த வீடுகள் அனைத்தும் அழிவுற்றன.

காற்றை விட லேசான மீத்தேன் வாயு
சுரங்கத்தின் ஆழமான பகுதிகளிலிருந்து வெளியேறும்.
மீத்தேன் வாயுவின் அளவினை கண்டறியும் தொழில்நுட்பம்
இருந்த போதும், மீத்தேன் வாயு நிலக்கரியின் தூசுப் பொருட்களுடன் சேரும் போது மிகவும் எளிதில் தீப்பிடிக்கும் தன்மையுடையதாக இருக்கிறது.

 தற்போது உள்ள மேம்பட்ட கண்டுபிடிப்புகள் மூலமாக
சுரங்கங்களில் தீ விபத்து முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக