வியாழன், 28 மே, 2020

மே 28,வரலாற்றில் இன்று:சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம்

மே 28, வரலாற்றில் இன்று.

சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் இன்று.

மே 28-ஆம் நாள் சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினமாக (International Women’s Health Day) அனுசரிப்பது என்று 1987-ல் அறிவிக்கப்பட்டது.


அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் மற்றும் சுகாதாரக் குழுக்களால் இந்த சிறப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் பெண்கள் நல ஒருங்கிணைப்புக் குழுக்களும், இனப்பெருக்க உரிமைகளுக்கான உலகப் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் ஒன்றிணைந்து இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

பாலியல், இனப்பெருக்க நல உரிமைகள் போன்ற பெண்களின் நல்வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். பெண்களின் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி ஒவ்வொருவருக்கும், குறிப்பாக அரசு சார்ந்த தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்டுகிற ஒரு சிறப்பு தினமாக இந்த நாள் திகழ்கிறது.

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள், எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல், கருத்தடை பற்றி அறிந்து கொள்ளுதல், பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்பு வசதி, சுகாதாரத் துறையிலும் பெண்கள் ஆரோக்கியத்திலும் மேம்பாடு, பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க நல உரிமை என்று பெண்களின் நிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக