வியாழன், 7 மே, 2020

மே 7, வரலாற்றில் இன்று.

சோனி நிறுவனம் தொடங்கிய தினம் இன்று.

 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற SONY நிறுவனத்தை தொடங்கினார் அக்யோ மொரிட்டா. அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் துளைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தினார் மொரிட்டா.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் அந்த நிறுவனம் முதன் முதலில் தயாரித்து சந்தைப்படுத்தியது டேப் ரிகார்டர் கருவியாகும். இன்று டெலிவிஷன், DVD பிளேயர், அனைத்துவகை மொபையில் போன்கள், ஒலிபெருக்கி கருவிகள், ப்ரோஜெக்டர்கள், அனைத்துவகை ஆடியோ வீடியோ கருவிகள், ஒலிப்பதிவுக் கருவிகள், கேமராக்கள், கணிணி ஊடகக் கருவிகள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒண் நிறுவனமாகத் திகழ்கிறது.
மொரிட்டா தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதன் பெயர்: Made in japan