புதன், 24 ஜூன், 2020

*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரான விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், 1883-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று ஸ்ட்ரியா எனும் ஊரில் பிறந்தார். பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1911 மற்றும் 1912 ஆண்டுகளில் ஒரு பலூனில் கதிர்வீச்சுக்களின் அளவை துல்லியமாக அளவிடும் கருவியைப் பொருத்தி பகல் மற்றும் இரவு என இரு நேரங்களிலும் சோதனை செய்தார். பூமியின் உயரத்திலிருந்து 5.3 கிலோ மீட்டர் வரையிலும் காஸ்மிக் கதிரின் செறிவு இருந்தது. இக்கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1936ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக