புதன், 24 ஜூன், 2020

*☀திறந்தமடல்* ************** *அடாவடியான - அரசாகமான வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!*

திறந்தமடல்
**************
அடாவடியான - அரசாகமான  வட்டாரக்கல்வி அலுவலர்களை  என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!
::::::::::::::::::::::::::::::::::::
அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 இல்  கூறப்பட்டுள்ள  அட்வான்ச் இன்கிரிமெண்ட்டுக்கும்,
அரசாணை எண் :42(கல்வி)
10.01.1969இல்  சொல்லப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கும் உள்ள *அடிப்படை உண்மையும், அடிப்படை வேறுபாடும் மாறுபாடும்- குறைந்த பட்ச வித்தியாசமும் கூட அறிந்திடாத, மேல் அலுவலர்களை அணுகி புரிந்துக்கொள்ளவும் கூட முயற்சிக்காத* வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல ?என்ன செய்ய?

கருவூலக நிர்வாகத்தின் மறுப்பை *ஒரு நொண்டிச் சாக்காக்கிக் கொண்டு* ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கானஊக்க ஊதிய உயர்வினை மிகுந்த ஆர்வத்தோடும்,
குரூரமான மனத்தின் ஆசையோடும் , வன்மம் நிறைந்த உள்நோக்கத்தோடும்,
அவசரம் அவசரமாக,
மின்னல் வேகத்தில்
இரத்து செய்து கொரோனாக்காலத்தில் ஊதியக்குறைப்பினை செய்தும், ஊதிய வெட்டினை ஏற்படுத்தியும்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை வேதனைக்குள்ளாக்கி
யுள்ள ,
மன உளைச்சலுக்கு
ஆளாக்கியுள்ள, ஒன்றியத்தின் ஒட்டுமொத்த  ஆசிரியர்களை பதட்டம் அடையச்செய்து கல்விக்களத்தில் கொந்தளிப்பினையும்,பெருத்த பதட்டத்தினையும் உருவாக்கி உள்ள, ஆசிரியர்களின் வேதனையில் மனம்மகிழ்வுக்கொள்ளும் அற்பத்தனமான புத்திக்கொண்ட  வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல?என்னசெய்ய!

காலம் காலமாக பெற்றுவரும் ஊக்க ஊதிய  உயர்வினை போகிறப்போக்கில் இல்லை என்று சொல்லி விட்டு கடந்துச்செல்ல
,ஊக்க  ஊதிய உயர்வு ஒன்றும் *வட்டாரக்கல்வி அலுவலர்களின் விருப்பமும் - ஆசையும் சார்ந்த பொம்மைப் பொருள் அல்ல- விற்பனைப் பொருளும் அல்ல* என்று சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழ்நாடு
தொடக்கக்கல்வி இயக்குனரே!
மாநிலந்தழுவிய அளவில் ஆசிரியர்கள் அணிதிரண்டு தான் தங்களது ஊக்க ஊதிய ஊதிய உயர்வினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று வட்டாரக்கல்வி அலுவலர்கள் நினைக்கின்றார்களா?என்பதை விசாரியுங்கள்!

தமிழ்நாடு
அரசுக்கும்,
தமிழ்நாட்டுக்
கல்வித்துறைக்கும்
அவப்பெயர் தேடித் தரத் தான்-
களங்கம்
விளைவித்திடத்தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  பணியாற்றுகின்றார்களா?என்பதை ஆராயுங்கள்! 

கல்வித்துறையின் நற்பெயருக்கும்,பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்குடன் பணியாற்றும் *கல்வித்துறையின்   கறுப்பு ஆடுகளா*?வட்டாரக்கல்வி அலுவலர்கள் என்பதை சோதியுங்கள்!

-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக