புதன், 24 ஜூன், 2020

☀ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்யறான்! திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு? ஆசிரியர்களை வதைக்கவா?! ஊக்க ஊதியத்தை சிதைக்கவா?! :::::::::::::::::::::::::::::::::::: எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கருவூலகம் நிர்வாகம் தலைமைப் பீடமானது?! :::::::::::::::::::::::::::::::::::: வினாக்களும், விளக்கங்களும், வேண்டுகோளும்!திறந்தமடலில்...*

ஆண்டவன் சொல்றான்;
அருணாச்சலம் செய்யறான்!
திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு?
ஆசிரியர்களை வதைக்கவா?!
ஊக்க ஊதியத்தை  சிதைக்கவா?!
::::::::::::::::::::::::::::::::::::
எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு  கருவூலகம் நிர்வாகம் தலைமைப்
பீடமானது?!
::::::::::::::::::::::::::::::::::::
வினாக்களும்,
விளக்கங்களும்,
வேண்டுகோளும்!திறந்தமடலில்...
::::::::::::::::::::::::::::::::::::
 *அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 ஐ காரணம் காட்டி உயர்கல்விக் கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்க முடியாது* என்று சார்நிலைக் கருவூலக நிர்வாகங்கள் தணிக்கைத் தடைகள் எழுப்பினால் ,
மறுப்புக்
குறிப்புரைகள் எழுதினால்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் விரைந்து செய்ய வேண்டியது என்ன!?

 அரசாணை எண்:42(கல்வி)நாள்:10.01.1969 மற்றும் அரசாணை எண்;1024(கல்வி)நாள்:09.12.1993 ஆகியவற்றின் அடிப்படையில்  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்களை அனுமதித்து  செயல்முறை பிறப்பிப்பவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள்.
*தான்பிறப்பித்த
செயல்முறையை செல்லாது என்றும், தவறானதுஎன்றும்*  வேறொருவர் சொன்னால் *திருவிளையாடல் திரைப்படத்தின்                    தருமி  கேரக்டருக்கு வந்த  நியாயமான கோபம்* இந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் கடுகளவும்  வரலை என்பதே நம் கவலை.

இந்த நேரத்தில் ஏனோ எனக்கு, நம்முன்னோர் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்றுச்சொன்ன மூதுரை நினைவில் வந்து செல்கிறது.

சரி ,
பொருளுக்குள் செல்வோம்.

கோபம் தான் வராது போனால் போகிறது.
குறைந்த பட்சமாக கருவூலக நிர்வாகத்தின் தவறான தடையை, மறுப்பையாவது விலக்கிக் கொள்ளச் சொல்லி *கல்வித்துறையின் அரசாணைகளை     குறிப்பிட்டு விளக்கக்கடிதம் எழுதலாம் ;எதிர் வழக்காடலாம்*.

சரி,இதையாவது செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள் அருகாமை உயர்அலுவலர் என்ற முறையில் குறைந்த பட்சமாக மாவட்டக்கல்வி அலுவலர்களுக்காவது  *தெளிவுரை கோரியோ, வழிகாட்டுதல் வேண்டியோ கடிதம் எழுதி இருக்கலாம்*.இவ்வலுவலர்கள் இவர்களின் உயர்அலுவலர்களின் வழிகாட்டுதலை பெற்றுதந்திருப்பர்.

சரி,இதையாவது செய்யாது போன வட்டாரக்கல்வி அலுவலர்கள் இன்னொன்றையாவது செய்து இருக்கலாம்.

அது என்னவென்று கேட்கிறீர்களா!?
வேறொன்றும் இல்லை!
இந்த அரசாணை எண்:37/10.03.2020 ஐ தமது கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் தமது அலுவலக  மின்னஞ்சலுக்கு
(இ-மெயில்) அரசாணையை பார்வேர்ட் செய்து  எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து மேல்நடவடிக்கைவழிகாட்டுதல்கள் செய்திருக்கிறார் களா!?என்றாவது *மெயிலாவது  செக்* செய்திருக்கலாம்.

சரி,இதையும் செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள், இதையாவது செய்யாது சும்மாவாவது, கம்மென்று இருந்திருக்கலாம்.

அது !என்னவென்று கேட்கிறீர்களா?!வேறொன்றும் இல்லை!

ஆண்டவன் சொல்றான்;
அருணாசலம் செய்யறான் !எனும் திரைப்பட வசனத்தினை ஒத்த வகையில்  *கருவூலகம் சொல்லுது; கல்வித்துறை செய்யுது!?*
என்கிற  வேடிக்கையான பதில்களை கிளிப்பிள்ளை களைப் போல திரும்ப ...திரும்ப... உரைப்பதை யாவது செய்யாது இருந்து இருக்கலாம்.

இவ்வாறு சொல்வதையும்,செய்வதையும் கைவிட்டால் தான் *தமிழக கல்வித் துறையின் மாண்பும், மாட்சிமையும்*
காக்கப்படும்;
பாதுகாக்கப்படும்!
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக