செப்டெம்பர் 15 , வரலாற்றில் இன்று.
இந்திய அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் துவக்கப்பட்ட தினம் இன்று (1959).
தூர்தர்ஷன் தொலை-காட்சி என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என்பதோடு இந்திய அரசாங்கத்தின் ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும். பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். அண்மையில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துள்ள காலகட்டத்தில் தூர்தர்ஷனுக்கான மக்கள் வரவேற்பு மிகவும் குறைந்துவிட்டது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக