அன்புடையீர்! வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக்கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில் தலையீடு செய்து உதவிட வேண்டுமாய் 21.01.2021- வியாழன் பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திப்பதற்கு மாவட்ட அமைப்பு முடிவாற்றியது.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையப் பெறாத நிலையில், நாமக்கல் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களிடம் 15அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டு கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மான்யம் காசோலை வழி செலவினங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் அதற்கு உரிய வழிகாட்டுதல் வேண்டியும் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர் கோரிக்கை குறித்தும் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச் செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), க.சேகர் ( பரமத்தி) எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் எம்.கே.ஆனந்தன்
ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
/மெ.சங்கர்/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக