அன்புடையீர்! வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு கடந்த 09.01.2021 அன்று நடைபெற்றது. இக்கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில் தலையீடு செய்து உதவிட வேண்டுமாய் இன்று (20.01.2021-புதன்) பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்திப்பதற்கு மாவட்ட அமைப்பு முடிவாற்றியது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையப் பெறாத நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் 15 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டு கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ,பரமத்தி ஒன்றியம் சார்ந்த திருமதி.மு.செயந்தி இடைநிலை ஆசிரியருக்கும் 2020 மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்படவேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.
கூட்டுறவு துறைச்சார்ந்த
05 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.
மேலும், நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகக் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப்பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் எதிர் வரும் 22.01.2021க்குள் பரமத்தி ஒன்றியத்தின் 12 பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் விடுவிக்கப்படும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கணக்கு அலுவலரும், நிர்வாக அலுவலரும் நம்பிக்கைத்தந்து உள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), கா.சுந்தரம் (சேந்தமங்கலம்), கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்)
ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக