புதன், 21 நவம்பர், 2018

பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை - வருமான வரித் துறை


பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை என்று வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பான் அட்டை கோரி விண்ணப்பிப்பவர் தாயால் மட்டும் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் இது தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி பான் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவர் என்றால், அவர் தனது தாயின் பெயரை மட்டும் பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம். தந்தையின் பெயரைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் புதிய விதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே இருந்த விதிகளின்படி பான் அட்டை பெற தந்தையின் பெயரைத் தெரிவிப்பது கட்டாயமாக இருந்தது.

நாட்டில் பெண்களின் உரிமையைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. முன்னதாக, பான் அட்டையில் தங்கள் தந்தை பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்டு தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு, தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தனர்.



செவ்வாய், 20 நவம்பர், 2018

தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் -உடல்நல மருத்துவம்

தண்ணீர் உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, நீர்  பசியை குறைக்கிறது,கொழுப்பை குறைக்க தண்ணீர் பயன்படுகிறது


நீரை குடிப்பது உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்படுத்த உதவுகிறது, தசை பிடிப்புகள் மற்றும் சுளுக்குகள் குறைகிறது.



சிறுநீரக கற்கள் மற்றும் மாரடைப்பு மற்றும் பிற
வியாதிகளுக்கு எதிராக தண்ணீர் உதவுகிறது.

உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை
வெளியேற்றுவதற்கு நீர் உதவுகிறது.

தண்ணீரில் தலைவலி முதுகு வலியை கட்டுப்படுத்தும்
தன்மை உள்ளது.



தினசரி குடல் இயக்கத்தை நீங்கள் பெற முடியும்.

உங்கள் மூளை பெரும்பாலும் தண்ணீரால் தயாரிக்கப்படுகிறது,
இதனால் குடிநீர் நீங்கள் நன்றாக யோசிக்க உதவுகிறது,

நீர் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது என்று அறிவியல்
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


முட்டை அதிகம் சாப்பிடுவது நல்லதா

இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. குறைந்த விலையில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது பயன் தரும்.

 


வைட்டமின் A: 6% of the RDA

Folate: 5% of the RDA

வைட்டமின் B5: 7% of the RDA

வைட்டமின் B12: 9% of the RDA

வைட்டமின்B2: 15% of the RDA

பாஸ்பரஸ்: 9% of the RDA

Selenium: 22% of the RDA

வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின்K, வைட்டமின்B6, மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கியுள்ளது

கொழுப்பு அதிகமாக உள்ளது,

முட்டையை உண்ணும்போது கண்புரை நோய்,  கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பக்கவாதம் ஆபத்தை குறைகிறது.



ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டைஉண்பதால் டைப் 2 சர்க்கரை நோயை  அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

நீங்கள் எடை குறைக்க உதவுகிறது

முட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு 12முட்டை வரை உண்ணலாம்.

முட்டையை வாங்கும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது  மிதந்தால் அது கெட்டது.


கறிவேப்பிலையின் மிகச்சிறந்த பயன்கள் பத்து…

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு  கருமையாகவும் இருக்கும்.



ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருந்த சளியை வெளிக்கொணரும்



கறிவேப்பிலை உண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.

காலையில்  வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரையும்.



பச்சையாக கறிவேப்பிலை தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன பார்ப்போம்:

கறிவேப்பிலையில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் B2, வைட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைய நிறைந்துள்ளது.

இரத்தத்தில் உள்ள  சர்க்கரையின் அளவு சீராக தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் நன்மை தரும்.

இதய நோய் பிரச்சனையில் இருந்து  பாதுகாப்பு தரும்.

வெறும் வயிற்றில் அதிகாலையில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் தீரும்.

காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.


பள்ளி கல்விதுறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு "இளம் படைப்பாளர்' விருதுகள்









பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் 19 பேருக்கு "இளம் படைப்பாளர்' விருதுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, "பள்ளி மாணவ, மாணவிகளின் சிந்தனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தவும்,  ஊக்குவிக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு "இளம் படைப்பாளர்' விருது வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்த விருதுகளுக்கு முதல்முறையாக பொது நூலக இயக்ககம் சார்பில்  "வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பே' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி,  "வாசித்தேன் வளர்ந்தேன்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,  "என் எதிர்காலம் என் கையில்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. 
சென்னை மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவில், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு,  தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு இளம் படைப்பாளர் விருதையும்,  சிறந்த எழுத்தாளர்கள்,  பதிப்பாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார். 
முன்னதாக, தேசிய நூலக வார விழாவையொட்டி, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். 
விழாவில், பொது நூலகத் துறை இணை இயக்குநர் ச.நாகராஜமுருகன், சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.திருவளர்செல்வி,  மாவட்ட நூலக அலுவலர் ச.இளங்கோ சந்திரகுமார்,  மாவட்ட மைய நூலகர் வே.தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி கல்வி- ஆங்கில வழி மாணவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்பறை அமைக்க திட்டம்

அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த, மத்திய அரசுநிதி ஒதுக்கியதை தொடர்ந்து, ஆங்கில வழி மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது.அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆங்கில வழி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில், தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து,வகுப்பு கையாளப்படுகிறது
ஆனால்,மேல்நிலை வகுப்புகளில், இம்முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது.

இதனால், சில பள்ளிகள், பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழி துவங்காமல் உள்ளன. சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால், ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடிக்கிறது.இதுசார்ந்து, சென்னையில் நடந்த கல்வி அதிகாரிகளுக்கான கூட்டத்தில், சமீபத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த, விபரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன
கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,' எட்டாம் வகுப்பு முதல், இருபது மாணவர்களுக்கு மேல் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு, பிரத்யேக வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும், தகவல் அடிப்படையில், நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, மாணவர் விபரங்களை விரைவில் அனுப்புமாறு, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்' என்றனர்

காலாப்பட்டு அருகே கடலில் மிதந்த மர்ம பொருள்


காலாப்பட்டு,
புதுச்சேரியை அடுத்த சின்ன காலாப்பட்டு மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடற்கரையில் இருந்து அவர்கள் படகில் சிறிது தூரம் சென்றதும், அங்கு பெரிய இரும்பு தொட்டி போன்ற ஒரு மர்ம பொருள் கடலில் மிதந்து வருவதை பார்த்தனர்.

அதனை அவர்கள் தங்கள் படகில் கட்டி கரைக்கு இழுத்து வர முயன்றனர். சிறிது தூரம் கரையை நோக்கி இழுத்து வந்தனர். அதன் பின்னர் அந்த பொருளை இழுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அந்த மர்ம பொருள் குறித்து காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அதுகுறித்து புதுச்சேரி கடலோர காவல் போலீசாருக்கும், உழவர்கரை தாசில்தாருக்கும் தெரிவிக்கப்பட்டது. 

கடலோர காவல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக் குமார், தாசில்தார் சுரேஷ்ராஜன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, மர்மபொருளை பார்வையிட்டனர்.
கடலில் மிதந்து வந்த பெரிய இரும்பு தொட்டி போன்ற பொருள் கப்பல்களில் பொருத்தப்படும் பொருளா? என போலீசாரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த மர்ம பொருளில் கயிறு கட்டி அதனை 3 டிராக்டர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த மர்ம பொருள் குறித்து புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த மர்ம பொருள் துறைமுகத்துக்கு கப்பல்கள் வரும்போது, ஏற்கனவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்புக்காகவும், சிறிய படகுகளுக்கு கப்பல்கள் நிற்பது குறித்து எச்சரிப்பதற்காகவும் கடலில் மிதக்கவிடப்படும் பெரிய மிதவை என்பது தெரிய வந்தது.

அந்த மிதவை காலாப்பட்டு கடல் பகுதிக்கு எப்படி வந்தது, கஜா புயல் காரணமாக எழுந்த கடல் சீற்றத்தால் ஏதேனும் துறைமுகத்தில் இருந்து அடித்து வரப்பட்டதா? என்பது தொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இயற்கை உணவு -உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்


கொய்யா பழத்தில் வைட்டமின் 'ஏ' இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது. கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. 




கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது. கொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் 'சி' நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது.
எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.
குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.

அரசு ஊழியர் விடுப்பு (special leave )~ புதிய சலுகைகள் அறிவிப்பு...

அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க சில சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம்: 
சின்னம்மை, தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால் அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் கூடுதல் நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு ஏழு நாட்கள் ,
பன்றிக்காய்ச்சலுக்கு ஏழு முதல் 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுப்பை பெற, நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

குழந்தையை தத்தெடுக்க அளிக்கப்படும் விடுப்பு, 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

 அரசு பணியில் உள்ள பெண்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் அவர்கள் இரண்டாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு எடுத்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கான அரசாணையை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் பிறப்பித்துள்ளார்.

செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் உதவியுடன் வகுப்பெடுத்து அசத்தும் பார்வையற்ற போராசிரியர்

செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் உதவியுடன் சட்டக்கல்லூரி மாணவர்களுடன்  நீதிபதிகளுக்கும் வகுப்பெடுத்து அசத்தும் பார்வையற்ற பேராசிரியர்

செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் என தொழில்நுட்ப உதவி யுடன் சட்டக்கல்லூரி மாணவர் களுக்கு மட்டுமின்றி நீதிபதிகளுக் கும் பல்வேறு சட்டங்கள் குறித்து வகுப்புகளை எடுத்து அசத்தி வரு கிறார் பார்வையற்ற பேராசிரியரான முனைவர் எஸ்.ஏழுமலை.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக்கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணிபுரியும் முனை வர் எஸ்.ஏழுமலை, பார்வையற்ற வர். ஆனால் இவரது பேச்சு, நடை, உடை ஆகியவை இவர் பார்வையற்றவர்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வகுப்பறைக்குள் நடந்து கொண்டே பாடம் நடத்துவது, கவனத்தை சிதறவிடும் மாணவர் களின் பெயர்களை சரியாக உச்ச ரித்து அவர்களை வழிநடத்துவது, மாணவர்கள் கேட்கும் கேள்வி களுக்கு துல்லியமாக பதிலளிப்பது என பிரமிக்க வைக்கிறார் பேராசிரியர் ஏழுமலை.

“பார்வையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்குள் எப்போதுமே இருந்ததில்லை. 10-க் கும் மேற்பட்ட சட்ட விழிப்புணர்வு புத்தகங்களை எழுதியுள்ளேன். அதில் 7 புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளேன். உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணிபுரிந்த எனக்கு நீதிபதி எஸ்.விமலா, நீதி பதிகளுக்கும் பாடம் எடுக்கும் வாய்ப்பை வழங்கினார். அன்று முதல் இன்று வரை பல்வேறு ஊர்களுக்கும் சென்று நீதிபதிகளுக் கும், வழக்கறிஞர்களுக்கும் பல் வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்து வகுப்பு எடுத்து வருகிறேன். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக பதவி வகித்தபோது தொடங்கிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு தற்போது இங்கு வந்து பணிபுரிகிறேன்” எனக்கூறும் பேராசிரியர் ஏழுமலையின் சொந்த ஊர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடிஅண்ணா மலை.

பேராசிரியர் ஏழுமலையின் தந்தை சர்க்கரை, தாயார் லட்சுமி விவசாயிகள். 3 வயதாக இருக் கும்போது மூளைக்காய்ச்சலால் பார்வையை பறிகொடுத்த ஏழு மலை, தனது விடாமுயற்சியால் இன்று சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமின்றி டெல்லி மற்றும் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரிகளின் கவுரவ ஆசிரியராக உள்ளார். தேசிய உயிரி பல்வகைத் தன்மை (பயோ-டைவர்சிட்டி) ஆணையத்தின் நிபுணர்குழு உறுப்பினர், மாநில வாரிய உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். ஐநா சபை உடன்படிக்கைகளுக்கும் சட்டநிபுணராக திகழ்ந்து வருகிறார்.
இதுதொடர்பாக பேராசிரியர் எஸ்.ஏழுமலை ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
முனைவர் பட்டத்தை அப்துல் கலாமின் கையால் பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். பார்வை உள்ள படித்த பலருக்கும்கூட சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. விவசாயிகள் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். மஞ்சள், கிராம்பு, கீழாநெல்லி போன்ற பாரம்பரிய மூலிகைகளையும், பண்டைய தமிழர்களின் கண்டு பிடிப்புகளையும் திருடும் மேலை நாட்டு கும்பல்களிடமிருந்து அவற்றைப் பாதுகாத்து தமிழர் களின் உரிமைகளை அறிவுப்பூர்வ மாக நிலைநாட்ட பாடுபட்டு வரு கிறேன்.

இதுவரை சிங்கப்பூர் நிறுவன விருது, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவிடம் விருது, மத்திய வேளாண் துறை விருது என பல விருதுகள் கிடைத்துள்ளன. விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இன்று பல விஞ்ஞானி களுக்கும், மருத்துவர்களுக்கும் சட்டரீதியாக ஆலோசனை வழங்கும் இடத்தில் உள்ளேன். சட்டத்தில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் போதும், வழக்கறிஞராக நீதிமன்றத்துக்குப் போய் வழக்காடி தான் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சர்வதேச நாடு களுக்கு சட்டப்பணியாற்றி மனநிறைவாகவே சம்பாதிக்கலாம். இதற்கு ஆண், பெண் என்ற எந்த பேதமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.பார்வையற்றவர்களுக்கு உதவும் டாக்-பேக்!

பேராசிரியர் ஏழுமலையிடம் செல்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டபோது, ‘‘முன்பு பிரெய்லி மட்டும்தான் பார்வையற்றவர்களின் தோழனாக இருக்கும். ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லோருடைய செல்போனிலும் ‘டாக்-பேக்’ என்ற வசதி உள்ளது. செல்போனுக்கு அழைப்பு விடுத்தது யார்? எப்போது அழைத்தார்? மின்-சட்டப் புத்தகத்தில் என்னென்ன பகுதிகள் உள்ளது என அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் கூறும் அந்த வசதியை பார்வையற்ற நாங்கள் எளிதாகப் பயன்படுத்துகிறோம். மற்றவர்கள் பயன்படுத்துவதில்லை. தமிழில் மொழிபெயர்த்து கூறுவதற்கும் தற்போது இ-ஸ்பீக் என்ற வசதி அறிமுகமாகியுள்ளது. கூகுளை ஆளத் தெரிந்தால் இந்த உலகை எளிதாக ஆளலாம்’’ என்றார்.