திங்கள், 26 நவம்பர், 2018

டிசம்பர் மாதம் நாள்காட்டி- 2018



✍✍✍ ✍ கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் ஆட்குறைப்பு அரசாணையை இரத்து செய்க! _ ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..


கல்வியே அழியாச் செல்வம்! அழியாப்புகழை கொடுக்கும்!




கல்வியின் தற்போதைய நிலை:


கல்வி தற்போதைய  சமூகத்தின் வாழ்வாதாரமாகவே இப்போது மாறிவிட்டது போலும் மாப்பிள்ளை என்ன படித்துள்ளார் என்று கேட்டு விட்டுத்தான் பெண்வீட்டார் தம் பெண்ணைக் கொடுப்பது என்பது ஒரு கௌரவ நிலையாகவே வந்துவிட்டது.



கல்வியால் பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனா். ஆண்களுக்குப் போட்டியாளராகவும் தற்போது எல்லா துறைகளிலும்  பெண்களின் ஆளுமையைக் கண்ணாரக் காண முடிகிறது இது சமூகத்தில் பெண்களின் வளா்ச்சியைப் படம் பிடித்துக்காட்டுகிறது. கல்வியில்லாத சமூதாயத்தை நம்மால் கற்பனையால் கூடநினைத்துப்  பார்க்க முடியாது .


தனி ராஜ்ஜியம்


சாக்ரடீசின்  மாணவா் பிளேட்டோ  கிரேக்கத்தில் தொடங்கி வைத்த  அகாடமி இன்று வோ் விட்டு உலகம் தனில் தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறது. அரிஸ்டாட்டலின் மாணவா்  அலெக்சாண்டா் அக்காலத்தைய யுரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா கண்டத்தை வென்று தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு பெருமை சோ்த்தார் என்பது வரலாறு. நவீன காலத்தில் யாரும் நாடு பிடிக்கப் போர் குதிரைகளைக் கொண்டு வரிந்து கட்டி நிற்கத் தேவையில்லை எல்லாம் தொழில்நுட்பத்தினால் சாத்தியமான ஏவுகணையைக் கொண்டு ஒரு சில நிமிடங்களில்  எந்த  ஒரு நாட்டையும்  வீழ்த்தி அழித்து விடமுடியும் என்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் கல்வியினாலும் அந்தக் கல்விக்குரிய தேடுதல்களினாலும் கிடைத்தது.



முதலில் வளா்ச்சிக்காகப் பயன்பட்ட அந்த சாதனங்கள் பின் உலகப் பெரும் யுத்தத்தில் மனிதா்களைக் கொல்வதற்கும் அடுத்த தேசத்தை அபகரிப்பதற்கும்  பயன்படுத்தப்பட்டது என்பது வருந்தத்தக்கதான ஒன்றாகும். எனினும் உலகில் இன்று கல்வி எனும் கருவியில்லாமல் மாணவா்க்கும் மக்களுக்கும் முன்னேற்றமில்லை எனும் போது அந்த கல்வியின் செயல்பாட்டால்தான்  உலகமும் கூட முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதீத பங்களிப்பு


அத்தகைய கல்வியெனும் அரிய ஆயுத்தைக் கொண்டு படைக்கும் படைப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் தவறான வழியில் கொண்டு செல்லாமல் சமூதாயத்திற்கு பயன்விளைவிக்கக்கூடிய ஆக்கப்புா்வமான வழிகளில் செலவிட்டால் நாடு சிறப்பான விதத்தில் வளா்சியடையும். அதற்கு படிக்கின்ற மாணவா்களின் ஒத்துழைப்பும் அறிவியல் ஆராய்ச்சியாளா்களின் அதீத பங்களிப்பும் இன்றிமையாத ஒன்றாகும்.


அழியாப்புகழ்


கல்வி அழியாச் செல்வம் என்றால் அதனைக் கற்றோரும் அழியா புகழுடையவராவார். அவா்தம் கண்டுபிடிப்புகளும் அத்தகைய சிறப்புடையதேயாகும். கல்வியானது மாற்றத்தை ஏற்படுத்தும் உலகினை அறிமுகம் செய்யும் பன்முகத் தன்மையுடையதென்று உணா்ந்தறிவோம்.

சோழர் கால வரலாற்று கல்வெட்டு வாணியம்பாடியில் கண்டெடுப்பு - வரலாற்று செய்தி


வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் சிவன் கோயிலில் சோழர், பல்லவர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வ.மதன்குமார், காணிநிலம் மு.முனிசாமி, தொலைதூரக் கல்வியின் முன்னாள் துணை இயக்குநர் ஜமுனா தியாகராசன், தொல்லியல் அறிஞர்கள் ர.பூங்குன்றன், ம.காந்தி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் இந்த கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
வாணியம்பாடி வட்டம், அம்பலூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலை அண்ணாமலையார் கோயில் என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். இக்கோயில் விளைநிலங்களுக்கு நடுவே உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இந்தக் கோயிலை முதன் முதலில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டியதற்கான அடையாளமாக, சோழர் காலத்து கல்வெட்டு கோயிலின் வலது பக்கம் காணப்படுகிறது. இந்த எழுத்துகள் கோயில் புனரமைப்பின் போது சிதிலமடைந்ததால் சரியாகப் படிக்க இயலவில்லை. இதன்மூலம் கி.பி .10, 11-ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலச் சோழர் ஆட்சியில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. சோழ மன்னர்களுக்கு பிறகு கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு இப்பகுதியை ஆண்டுள்ளது. இதற்கு சான்றாக கோயில் பிரகாரத்தைச் சுற்றி அரை அடி அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு எழுத்துகள் தமிழும், வடமொழி கலந்தும் எழுதப்பட்டுள்ளது.
பெரிய மண்டலத்தை ஆட்சி புரிந்த அதிகராயன் என்ற பெரிய தலைவன். சொன்ன சொல்லை மீறாத, சத்தியம் குணம் கொண்டவன். மூவரை வென்றவன்.உலகையே ஆண்டவன்.விஜயநகர அரசர்களில் உள்ள மூன்று குடிகளில் சாளுவ குடியைச் சேர்ந்த நரசிங்கராய மகாராயரின் குமாரன் திம்மராயர் ஆட்சி செய்த 1410-ஆம் ஆண்டு, மாசி மாதம், ஞாயிற்றுக்கிழமை அருணை நாயகன் பெருமான் கோயில் கொண்டுள்ள நல்லூரில் என்று மெய்க்கீர்த்திபோல் அமைந்துள்ளது.
கண்டன் என்று கல்வெட்டில் வருவது ஆயிரம் பேரைக் கொன்ற மன்னர்களுக்கு வழங்கப்படும் பெயராகும். அருணை நாயகன் என்பது சிவந்த நெருப்பின் உருவம் கொண்ட சிவபெருமான் கோயில் கொண்ட ஊர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. திருவண்ணாமலைக்கு நெருப்புடன் தொடர்பு கொண்ட ஈசன் அடிமுடி காண முடியாமல் தீப்பிழம்பாக நின்றது போல், இவ்வூருக்கும் நெருப்போடு தொடர்பு கொண்ட ஒரு கதை இருந்திருக்க வேண்டும். தமிழக வரலாற்றில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

அரசியலமைப்பு சட்ட தினம் ~26.11.2018~ உறுதி மொழி…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக் குழுக் கூட்டம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக்குழுக் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் 25.11.18 (ஞாயிறு)பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு 
மன்ற இணையக்குழு அமைப்பாளரும்,
மாவட்டத்துணைச்
செயலாளருமான மெ.சங்கர் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் நிறைவுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்
பங்கேற்ற ஆசிரியர் மன்ற 
சமூகவலைதள
செயற்பாட்டாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் தொழில் நுட்பங்களைக் கையாண்டு ஆசிரியருக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது,தகவல்களை
பரிமாற்றம் செய்துகொள்வது  என்று முடிவாற்றப்பட்டது. மேலும்
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு  
கல்வி சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள் மேற்கொள்வது என்றும் , ஆசிரியர்மன்றப் பணிகள் 
மேற்கொள்வது என்றும் முடிவாற்றப்பட்டது. கூட்ட முடிவில் சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் கா.செல்வம் நன்றி கூறினார்.

🌷🌷🌷Prevention and control of Diphtheria -certain instructions issued by the Director of published health and preventive medicine, Chennai -regarding


ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.



அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக் தினமும் கொண்டு செல்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர். இதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்தும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மேலும் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் இந்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதன்படி  ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

என்சிஆர்டி தெரிவித்துள்ளபடி மொழிப்பாடங்களை தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒரு போதும் நடத்துதல் கூடாது. அதேபோன்று கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்துதல் கூடாது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருத்தல் கூடாது. 3,5 வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ வரையிலும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல் கூடாது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிகளை ஏற்று லட்சத்தீவுகள் அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கு கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

பள்ளி மாணவர்களிடம் அதிகம் பேசுங்கள் -- அவர்கள் அறிவுதிறன் கூடும்

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் ஆசிரியரா? பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

குட்டித் தூக்கத்தால் மூளை ஸ்மார்ட்
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.

தாய்மொழியில் குழந்தைகளை படிக்க வைப்பதால்  கற்பனைதிறன், கலைநயம்,சிந்தனைவளம் போன்றவை கிடைக்கின்றன.

தாத்தா பாட்டிகள் கதைகளை கூறக்கேட்ட குழந்தைகள் தனிதிறனுடன் இருப்பதை காணலாம். இதில் தாய்மொழியும்,குழந்தைகளுடன் கலந்துபேசுதல்களும் ஏற்படுவதால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

📱தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்டம்~Mobile App...