வியாழன், 29 நவம்பர், 2018
கல்வி உதவித்தொகை வழங்குவதில்மெதுவாக செயல்பட்ட அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகை
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்காததை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் கவரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ₹6 ஆயிரம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கல்வித்தொகை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஏராளமான மாணவர்கள் பள்ளி நுழைவாயிலில் திரண்டனர். திடீரென உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத கல்வித்துறையை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்ததும் கவரைபேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாணவர்களிடம் 15 நாட்களுக்குள் கல்வி உதவித்தொகை கிடைக்க உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதை பற்றி மாணவர்கள் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை வழங்குவதில் அலட்சியம் காட்டினால் மற்ற மாணவர்களுடன் இணைந்து பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு உத்தரவால் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு -சமக்ரசிக்ஷா
எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு
தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இயங்கி வந்த அனைவருக்கும் கல்வி இயக்கம், மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு மத்திய அரசின் திட்டங்களை ஒன்றாக இணைத்து தற்போது சமக்ரசிக்ஷா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டில் தொடக்க கல்விக்காக பராமரிப்பு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புவாரியாக எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதன்பேரில் தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் மாநில திட்ட இயக்குநர் அளிக்கும் புள்ளி விவரங்களை பெற்றுக் கொண்டு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கி வந்தது. நடப்பு ஆண்டுக்கான பராமரிப்பு மானியம் கடந்த செப்டம்பர் மாதம் கிடைத்தது.
இதற்காக மத்திய அரசுக்கு, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய பட்டியலின்படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து 1 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் கொண்ட 3003 பள்ளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான பராமரிப்பு நிதி பெறுவதற்கான கணக்கெடுப்பை மாநில திட்ட இயக்குநர் நடத்தினார். அதில், தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பணியில் உள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் அடாவடியால் நிலைகுலைந்துள்ள ஆசிரியர்கள்
காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை கையை 10ம் வகுப்பு மாணவன் பிடித்து முறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை ஆங்கிலப் பாடத்திற்கான சிறப்பு வகுப்பினை ஆசிரியை ஹேனா ஜீன் நடத்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் ஆசிரியை அனுமதி இல்லாமல் வகுப்பை விட்டு வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, உள்ளே போ, என கையை நீட்டிக் கூறியுள்ளார். உடனே, ஆசிரியையை நோக்கி வந்த மாணவன் ஆசிரியை ஹேனாஜீன் வலதுகையை பிடித்து முறுக்கி தள்ளிவிட்டு வெளியில் சென்றுள்ளான்.
இதே வகுப்பில் கடந்த வாரம் ஆசிரியர் அமர்வதற்காக கால் உடைந்த சேரைப் போட்டு வைத்தி ருந்ததை கவனிக்காமல் அதில் அமர்ந்து கீழே விழுந்த ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களின் டூவீலர் வாகன இருக்கையை கிழிப்பது, பிரேக் வயரை துண்டிப்பது, பெட்ரோல் டாங்கில் சர்க்கரை போடுவது , முட்டை வீசுவது, பிளாஸ்டிக் பாம்பை ஆசிரியர் மீது வீசி அலற வைப்பது, ஒருமையில் பேசுவது, வகுப்பு நடக்கும் போது கல் வீசுவது, படிக்கட்டில் இறங்கும் பொழுது ஆசிரியர் மீது பிடித்து தள்ளுவது, வகுப்பில் பட்டாசு வெடிப்பது, போதைப்பொருள்களை சாப்பிட்டு விட்டு வகுப்பில் படுத்து கிடப்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த மாதம் முதல் வாரத்தில் குறிப்பிட்ட சில மாணவர்களால் பள்ளியில் பிரச்சனைகள் நடந்து வருகிறது. பிரச்னையில் ஈடுபடும் 22 மாணவர்களை பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மேற்சொன்ன 22 மாணவர்களின் தவறான செயல்களால் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிய்வில்லை . இதனால் சுமார் 1300 மாணவ மாணவியர்கள் கல்வி பயில முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட 22 மாணவர்களை பள்ளியில் இருந்தது உடனடியாக இடைநீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்பியிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியை காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளார், மேலும் இதுகுறித்து மாணவன் மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட எஸ்பியிடம் கொடுத்த புகார் மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர், இப்பள்ளியில் இருபால் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் தவறு செய்யும் மாணவர்கள் மீதும் எதையும் கண்டு கொள்ளாமல் மாணவர்கள் பிரச்சினை வளர காரணமான தலைமை ஆசிரியரை மாற்றவும் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதன், 28 நவம்பர், 2018
நீட் தேர்வுக்கு புதிய செயலி பள்ளி மாணவி கண்டுபிடிப்பு
நீட் தேர்வுக்கு புதிய செயலி!
இன்றைய கல்வி யுகத்தில் பள்ளிப் படிப்பை மாணவர்கள் பலரும் சுமையாகவும், கடினமானதாகவும் நினைக்கும் மனப்போக்கு உள்ளது. அதிலும் 12-ஆம் வகுப்புக்கு வந்துவிட்டால் மருத்துவம், ஐஐடி, ஐஐஎம், சட்டம் போன்ற உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அழுத்தமும் மாணவர்களைத் தொற்றிக் கொண்டுவிடுகிறது. இதற்காக தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்வது முதல் செயலி மூலம் படிப்பது வரை, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஒருபுறம் பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு, மறுபுறம் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக நீட் தேர்வு பயிற்சிக்கான செல்லிடப்பேசி செயலியையும் உருவாக்கியிருக்கிறார் ஒரு மாணவி. அவர் இனியாள் கண்ணன்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தில்லி காவல் துறையின் போலீஸ் பயிற்சிப் பிரிவின் இணை ஆணையருமான கண்ணன் ஜெகதீசனின் மூத்த மகள்தான் இனியாள் கண்ணன்.
கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவையும், "நீட்'டையும் இணைக்கும் வகையில் "அனீடா' (ANEETA) என்ற பெயரில் ஒரு செயலியை இனியாள் உருவாக்கி இருக்கிறார். தில்லியில் சன்ஸ்கிருதி பள்ளியில் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் இம்மாணவி, இச்செயலியை உருவாக்கி இருப்பதைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:
"தந்தையின் பணியிட மாற்றல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் புதுச்சேரியில் இருந்து தில்லி வந்தோம். அப்போது, மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளித்தது.
மாணவி அனிதா பிளஸ் டூவில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்பது மிகவும் வேதனையை அளித்தது. அப்போதுதான், நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
தற்போது செல்லிடப்பேசிகள் அனைவரிடமும் இருப்பதால், அந்த செயலி மூலம் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பயனடைய முடியும் என எண்ணினேன். இதையடுத்து, செயலியை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதற்கு ஆறு மாதங்கள் ஆகின.
இந்த செயலியில் சில ஆண்டுகளுக்கான 180 கேள்வித்தாள்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இதை நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி செய்தால் தேர்வு குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். கேள்விக்கான விடையை அளித்து நாம் நம்மையே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
அனாலிசிஸ் கிராஃப் மூலம் எந்த பாடத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இது முற்றிலும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் இல்லாத இந்த செயலி, ஒரு மாதம் முன்புதான் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்குள் 5 ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தற்போது வரை இந்த செயலியை நான் மட்டுமே நிர்வகித்து வருகிறேன். பள்ளி இறுதித் தேர்வில் கவனம் செலுத்தி வருவதால், யாராவது தானாக முன்வந்து உதவ விரும்பினால், அவர்களும் இந்தச் செயலியில் நீட் தொடர்பான கேள்விகள், பதில்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள்ஆகியோருக்கு என்னைவிட அதிகமாகவே தெரியும் என்பதால் அவர்களும் பங்களிப்புச் செய்ய முன்வரலாம். ஒருவர் பதிவேற்றம் செய்தால் அது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிக்க முடியும் என்பதை இச்செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் உணர்கிறேன். நூலகத்தில் கூட நீட் தேர்வு போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் இருக்காது. இதனால், செயலி மூலம் இக்குறையைப் போக்க முயற்சி செய்துள்ளேன்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு கணினி பொறியாளராக எண்ணி உள்ளேன். இந்த செயலிக்கு முன்பு ஸொட்டீரியா (SOTERIA) எனும் பெண்கள் பாதுகாப்பு செயலியையும் உருவாக்கி உள்ளேன்.
நார்மலாக பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய செயலிகளில் ஆபத்து காலங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசிகளுக்கும், காவல் அதிகாரிகளுக்கு மட்டுமே அலர்ட் போகும்.
நான் உருவாக்கிய செயலியில் ஆபத்தில் உள்ள ஒருவர் அலர்ட் அனுப்பியவுடன், இதே செயலியைப் பயன்படுத்தும் அருகில் உள்ள பிறருக்கும் அலர்ட் சென்றுவிடும். காரணம், ஆபத்து வரும்போது அருகில் உள்ளவர்கள்தான் உடனடியாக உதவ முடியும்.
இதுபோன்று செயலியை உருவாக்கும் பணியை எனது பாடப் படிப்புடன் சேர்ந்து ஆர்வமாகச் செய்து வருகிறேன். சொல்லப்போனால் இதன் மூலம் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த "அனீடா' செயலியை உருவாக்க தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் ஊக்குவிப்பாக இருந்தனர். நீட் தொடர்பான கேள்விகளை எளிது, நடுத்தரம், கடினமானது என வகைப்படுத்துவதற்கு நிறைய ஆலோசனை அளித்தனர்.
எனது தந்தை கண்ணன்ஜெகதீசன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். அவரது குடும்பத்திலேயே முதல் தலைமுறை பட்டதாரி அவர்தான் என்பதால், கல்வியின் மூலம் எத்தகைய மாற்றத்தையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் என்பதை நன்கு தெரிந்தவர். இதனால், என்னையும், எனது சகோதரி ஓவியாளையும் கல்வியுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் விஷயங்களிலும் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்'' என்று முகமலர்ச்சியுடன் கூறுகிறார் இனியாள் கண்ணன்.
-வே.சுந்தரேஸ்வரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)