ஞாயிறு, 28 ஜூன், 2020
*🎬ஜூன் 28, வரலாற்றில் இன்று:புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்* *பிரபல திரைப்பட தயாரிப்பாளர்* *சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று(1915)*
ஜூன் 28, வரலாற்றில் இன்று.
புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
சாண்டோ சின்னப்பா தேவர்
பிறந்த தினம் இன்று(1915).
விலங்குகளை வைத்து திரைப்படமெடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பலவெற்றிப்படங்களை கொடுத்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து சுமார் 17 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.
ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜேஷ் கன்னாவை அமர்த்தி "ஹாத்தி மேரா சாத்தி"(1971) என்ற ஹிந்திப் படத்தை முதன் முதலாகத் தயாரித்தார் தேவர்.
ராஜேஷ் கன்னா குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார். தாமதமாக வந்துவிட்டு சீக்கிரமே போய்விடுவாராம்.
ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள தேவருக்கு, இதெல்லாம் பிடிக்காமல், அவ்வப்பொழுது ராஜேஷ் கன்னாவை "அசைவ" வார்தைகளால் அர்ச்சனை செய்வாராம் தேவர். படப்பிடிப்பு தளத்திலேயே பலருக்கும் முன்னால் தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார் என்பது ராஜேஷ் கன்னாவுக்கு தெரிந்து விட்டது.
ஒரு நாள்..(இதைத் தேவர் ஆரூர்தாசிடம் சொன்னது.. அவரின் அசைவச் சொற்கள் நீங்கலாக)
""ராஜேஷ் கன்னா, அவனோட மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டான். சரி என்னமோ ஒண்ணு நடக்கப் போறது, அவன் கையை நீட்டுனான்னா, நாம காலை நீட்டிட வேண்டியது தான். இன்னைக்கு ஒண்ணு நானாச்சு இல்ல அவனாச்சின்னு முடிவு பண்ணிக்
கிட்டுப் போனேன்.
மேக்கப் ரூமுக்குள்ள நுழைஞ்சதும், கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். நான் என் வேஷ்டியை இருக்கிக் கட்டிக் கிட்டேன். குனிஞ்சு அவன் போட்டிருந்த செருப்பைக் கழட்டுனான்.
நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, கழட்டுன செருப்பை என் கையில் கொடுத்தான். ஏன் கொடுத்தான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே, அவனே
இங்கலீசுல பேசுனான். நான் புரிஞ்சிகிட்டேன்.
"மிஸ்டர் தேவர் ! தப்பு என்னுது தான்..அதுக்காக இங்கே தனியா எத்தனை அடி வேணுமின்னாலும்
இந்தச் செருப்பால அடிங்க. ஆனா
அங்கே அத்தனை பேருக்கு முன்னால் கெட்ட வார்தையால
கண்டபடி திட்டாதீங்க. இங்கே உங்களுக்கு நான் சாதாரண நடிகனா இருக்கலாம்.ஆனா பம்பாய் பட உலகமே இன்னைக்கி என் கையில தான் இருக்கு. அவுங்க என்னைக் கேவலமா நினைப்பாங்க. தயவுசெய்து என்ன அவமானப் படுத்தாதீங்க..ப்ளீஸ் "
இதைச் சொன்ன ராஜேஷ் கன்னா, குனிஞ்சு என் காலைத்தொட , நான் உணர்ச்சி வசப்பட்டு,
அவனைக் கட்டி அணைச்சு, கண் கலங்கி சொன்னேன், "மன்னிச்சிக்க முருகா ! இனிமே உன்ன, எப்பவும் நான் திட்ட மாட்டேன்" னு.
"நானும் இனிமே ஷூட்டிங்குக்கு
லேட்டா வரமாட்டேன்.கரெக்ட் டயத்துக்கு செட்ல இருப்பேன்" ன்னு சொன்னான்.""
நடந்த மறுநாள் காலை 8 மணிக்கு வாகினி ஸ்டுடியோவில்,
6 வது தளத்தில் ஷீட்டிங் தொடங்கி விட்டது என்பதற்கான கிளாப் கட்டை அடிக்கும் ஒலி கேட்டது. அந்தப் பக்கம் வந்த நாகிரெட்டியார், "உள்ளே நடிச்சுகிட்டிருப்பது யார் ? " என்று கேட்க, "ராஜேஷ் கன்னா" என்று யாரோ பதில் சொல்ல, புருவத்தை உயர்த்திக் கொண்டு நாகிரெட்டி
சொன்னாராம், "சின்னப்பா தேவரா...கொக்கா...!"

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.*
ஜூன் 28, வரலாற்றில் இன்று.
ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.
பேராசிரியர் முகமது யூனுஸ் (பிறப்பு – ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்) வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார்.
ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் ‘Banker to the Poor’ எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.*
ஜூன் 28, வரலாற்றில் இன்று.
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.
பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.
✍ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன், 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
✍1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.*
ஜூன் 28, வரலாற்றில் இன்று.
முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.
1914 ஜூன் 28 ஆம் தேதி ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியாவின் மீது போர் தொடுத்தது.இந்தப் போர் தான் முதல் உலகப் போராக மாறியது. இப்போரில் ஈடுபட்ட நாடுகள் 20 ஆயிரம் கோடி டாலர்களை செலவிட்டன. 30 நாடுகளைச் சேர்ந்த ஆறரை கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ ஒரு கோடி என்கிற அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டது. நேச நாட்டு சக்திகள் தரப்பில் 60 லட்சம் வீரர்களும் மைய சக்திகள் தரப்பில் 40 லட்சம் வீரர்களும் இறந்தனர். முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்தான் அதிக இழப்பு. ஜெர்மனி 19 லட்சம் உயிர்களையும், ரஷ்யா 17 லட்சம் உயிர்களையும் இழந்தது. இந்தப் போரில் 11 லட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை.

சனி, 27 ஜூன், 2020
*🥇ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).*
ஜூன் 27,
வரலாற்றில் இன்று.
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).
அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். விடியற்காலையில் அம்மாவுடன் கொஞ்ச நேரம் வயல் வேலைகள் பார்க்கும் அவள், 25 கிலோமீட்டர் தூரத்தையும் ஓடியே பள்ளிக்குப் போய்விடுவாள். அவளது பெயர், உஷா.
மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இடையே சிறார்களைத் தேர்வுசெய்து, பந்தயங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மைதானம் ஒன்று, உஷா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருந்தது. ஒருநாள், அங்கே ஒரு கூட்டத்தைக் கண்டாள். அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்கள், கால் சராயும் ஷூவும் அணிந்திருந்தார்கள். கூட்டமாக ஓடி பயிற்சி செய்தார்கள்.
மறுநாள், தனது ஊரில் இருந்து பள்ளிக்கு ஓடும்போது, அவர்களைப் போலவே பாவனை செய்துகொண்டு ஓடினாள். 'நானும் ஒருநாள், அவர்களைப் போல பயிற்சிபெறும் மாணவி ஆவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டபோது, உஷாவின் வயது ஆறு.
நாட்கள் ஓடின. ஒருநாள், அந்த மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடப்பதைக் கண்டாள். பள்ளிக்குப் போக வேண்டும் என்றது கடமை. ஓட்டப்பந்தயம் பார்க்க வேண்டும் என்றது ஆர்வம். இந்த மனப் போராட்டத்தில் ஓட்டப்பந்தயமே ஜெயித்தது. அவள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாள். பிறகு, அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. திடீரென, 'யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’ என்றார்கள். ஏழு வயது சிறுமியான உஷா, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, மற்ற மாணவிகளைவிட வேகமாக ஓடி, முதல் இடம் பிடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள்.
உஷா நினைத்தது நிறைவேறியது. 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்துகொண்டாள். பிறகு, அவளது அப்பா, உஷாவை அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.
காலில் ரப்பர் ஷூவுடன் தனது கனவு வாழ்க்கையை நோக்கி ஓடத் தொடங்கினாள். வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், விளையாட்டுத் திறன் மிகுந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த, கேரள அரசு 250 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவந்தது. அதைப் பெற்றபோது, உஷாவின் வயது எட்டு.
மாவட்டம், மாநிலம் என, சப் ஜுனியர் பந்தயங்களில் அவளுக்கே முதல் இடம். மாநிலத்தில் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி, கண்ணூர் எனும் நகரில் இருந்தது. அங்கே, பயிற்சியோடு கல்வியும் பெறத் தேர்வு பெற்றாள் உஷா.
அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையில் ஒவ்வொரு வருடமும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸ் நடக்கும். 1979இல், தனது 13ஆவது வயதில் அதில் கலந்துகொண்டாள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்ற அவளை, உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார், தனது கனவுகளின் ஆதர்ச மாணவியாகப் பெற்றார்.
ஒரே வருடம்தான். மிகக் கடுமையான பயிற்சியில், மிகச் சிறப்பாக உயர்ந்த அவளது அதிவேக ஓட்டத்தை வியக்காதவரே இல்லை. 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசிய சாதனை. 1982இல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் 102 பதக்கங்களை வென்று, இந்தியாவின் தங்கத் தாரகையாக மிளிர்ந்தார் பி.டி. உஷா. 'பையோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்.
''நான், பையோலியில் இருந்து என் பள்ளிக்கு ரயிலைவிட வேகமாக ஓடி, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்'' என்று சொல்லும் தங்கத் தாரகை பி.டி. உஷா, நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும் சுட்டி நாயகியே.

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:ஜெர்மன் கருவியலாளர்,நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான் பிறந்த தினம் இன்று(1869).*
ஜூன் 27,
வரலாற்றில் இன்று.
ஜெர்மன் கருவியலாளர், நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான்
(Hans Spemann) பிறந்த தினம் இன்று(1869).
ஹன்ஸ் ஸ்பெமான் 1888 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டுச் சென்றபின், தனது தந்தையின் வணிகத்தில் ஒரு வருடம் செலவிட்டார்,
1889-1890 ஆம் ஆண்டுகளில் காஸல் ஹுஸார்ஸில் இராணுவ சேவை, ஹம்பர்கில் புத்தக விற்பனையாளராக சிறிது காலம் கழித்தார்.
1891 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார், அங்கு மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டார்,
1893 இல் தனது ஆரம்ப பரிசோதனையை மேற்கொண்டார். அங்கே உயிரியல் நிபுணரும் உளவியலாளருமான கஸ்டவ் வுல்ப் சந்தித்தார், புதிதாக உருவாக்கப்பட்ட கருவியல் வளர்ச்சிகளில் பரிசோதனைகளை ஆரம்பித்த அவர், கண் அகற்றப்பட்டு, மீண்டும் மீண்டும் வருகிறது என்றார்.
1893-1894-ல் அவர் மருத்துவ பயிற்சிக்காக முனிச் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், ஆனால் 1908 ஆம் ஆண்டு வரை விரிவுரையாளராக இருந்த வூர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் ஜுலோகிக்கல் இன்ஸ்டிட்யூட்டிற்கு மாற்றுவதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக மாறினார்.
அவரது Ph.D. புவேரியின் மேற்பார்வையில், ஸ்பேமன் தனது போதனை டிப்ளமோ படிப்பிற்காக, தவளை நடுத்தர காதுகளின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்தார்.
ஆய்வுகள்:-
ஒட்டுண்ணி புழுக்களின் வளர்ச்சி நிலைகளில் அவரது ஆய்வு முடிந்தபின், ஸ்பேமன் ஆராய்ச்சியின் பிரதான பகுதி என உயிரினங்களின் (புதியவை) கருவியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தார்.
பின்னர் புதிய கருச்சிதைவு நடைமுறைகளை அவற்றின் கரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
இந்த தலைப்பில் அவரது முதல் பரிசோதனை, அவரது "முடி இரட்டை" (1901), அவரை பரந்த அங்கீகாரம் பெற்றார்.
ஒரு கருவைச் சுற்றியுள்ள குழந்தையின் தலைமுடியைப் பிடுங்குவதன் மூலம், ஸ்பேம் ஒரு ஒற்றை அணுவிலிருந்து இரண்டு சிறிய ஆனால் முழு லார்வாக்களை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றார்.
1921 ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட மாணவர் ஹில்டி மாகோல்ட் உடன் நடத்தப்பட்ட பல பரிசோதனையங்களில் அவர் கண்டறிந்தார், ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள திசுக்களின் ஒரு சிறிய பகுதி திசுக்களின் எதிர்காலப் பகுதியிலிருந்தே இரண்டாம் நிலை புதைபொருள் ப்ரிடார்டியாவின் தலைமுறையை "ஒழுங்கமைக்க" முடியும் என்றார்.
விருதுகள்:-
உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு (1935)
செப்டம்பர்-9, 1941இல் தனது 72ஆவது வயதில் ஜெர்மனியில் காலமானார்.

*🌐ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் இன்று.*
ஜூன் 27,
வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் இன்று.
நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும், தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம் ஆகும்.
பள்ளிப் பருவத்தில் 'சக்தி வாலிபர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். அதன்பின் இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். முதல் நாவல் 'மங்கிய நிலவு" 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார்.
'வேங்கையின் மைந்தன்" நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் 'சித்திரப்பாவை" 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அகிலன் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலமானார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)