திங்கள், 29 ஜூன், 2020
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதாம்! ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கொரோனா பரவுமாம்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் , பரமத்தி ஒன்றியக்கிளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு! மாற்றுவடிவில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து ஒன்றியச் செயற்குழு கூடி முடிவாற்றும்! விதிகளில்- பணிகளில் தெளிவற்றோருக்கு பாடம் புகட்டுவோம்!
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதாம்!
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கொரோனா பரவுமாம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
பரமத்தி ஒன்றியக்கிளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
மாற்றுவடிவில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து ஒன்றியச்
செயற்குழு கூடி முடிவாற்றும்!
விதிகளில்-
பணிகளில் தெளிவற்றோருக்கு பாடம் புகட்டுவோம்!

குழந்தைகள் மகிழ்ச்சி அடைய பறவைகளை கூப்பிடுங்க
இங்குள்ள பறவைகளை தொடுங்கள் உங்களுடன் அதன் ஒலியில் பேசும்
https://coneixelriu.museudelter.cat/ocells.php

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.*
ஜூன் 29, வரலாற்றில் இன்று.
பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.
திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1931).இவரது முழுப்பெயர், பத்ம நாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார். பள்ளிக் கல்வி முடித்ததும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1963-ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலைய அணுசக்தித் துறையில் இளநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாகத் தன் தொழில்வாழ்வைத் தொடங்கினார். நியூட்ரான் சிதறல் தொடர்பான பல்வேறு விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1954-ல் தொடங்கப்பட்டு, பிறகு ‘பாபா அணு ஆராய்ச்சி மையம்’ என பெயரிடப்பட்ட அணுசக்தி அமைப்பில் சேர்ந்தார்.
நோபல் பரிசு பெற்ற நெவில்லி புரோக்ஹவுஸ் என்ற விஞ்ஞானியின் வழிகாட்டுதலில் 1956-ல் கனடாவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவாறே பயிற்சியும் பெற்றார். அப்போது ஜெர்மனியத்தில் (germanium) லாட்டிஸ் இயக்கவியல் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.
அணுசக்தித் துறை ஆராய்ச்சிக் குழுவுக்குத் தலைமையேற்று, அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். பாபா அணுசக்தி நிலையத்தில் அணு உலை தயாரிப் பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
1960-ல் உள்நாட்டிலேயே பூர்ணிமா அணு உலையை வடிவமைத் தார். உத்தரபிரதேசத்தின் நாரோராவிலும் குஜராத்தின் கக்ராபாராவிலும் அணு உலைகளைத் தொடங்கினார். 1972-ல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் பொறுப்பை ராஜா ராமண்ணா ஏற்றபோது, இயற்பியல் குழுவின் இயக்குநர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
ராஜா ராமண்ணா தலைமையில் 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ என்ற அணுகுண்டு வெடிப்பு சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் இவரது பங்களிப்புக்காக 1975-ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
1985-ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஒரு இயக்குநராக முதன்முதலில் துருவா ரியாக்டரை கட்டமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நிறைவேற்றினார். மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தொழில்துறையில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வழிவகுத்தார்.
இதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ‘டெக்னாலஜி டிரான்ஸ்பர் செல்’ என்ற பிரிவை ஆரம்பித்தார். 1990-ல் இந்திய அணுசக்திப் பேரவையின் குழுமத் தலைவராகவும் அணுசக்தித் துறையின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவராகவும் செயல்பட்டார்.
இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளிலும் (cold fusion experiments) முக்கியப் பங்கு வகித்தார். பதவி ஓய்வுக்குப் பிறகும் கேரள அரசின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டார். அகஸ்தியா சர்வதேச அறக் கட்டளையை நிறுவி, கிராமப்புறக் குழந்தைகளிடம் படைப்புத் திறன் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டார்.
இவரது அறிவியல் பங்களிப்புகளுக்காக பட்நாகர் விருது, இந்திய அறிவியல் அகாடமி விருது மற்றும் தேசிய அறிவியல் அமைப்பின் சோதனை இயற்பியலுக்கான பாபா பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பி.கே.அய்யங்கார், 2011ஆம் ஆண்டு 80ஆவது வயதில் காலமானார்.

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று.*
ஜூன் 29, வரலாற்றில் இன்று.
தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று.
இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நல்ல தகுதியுடைய, நீதி, நேர்மையோடு பணிசெய்த எவரையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இன்று நீதி, நேர்மை செத்துப்போய் விட்டது.
வ.ஐ.சுப்ரமணியம் தன் பதவிகாலத்தில் எந்த அரசியல்வாதிகளையும் பல்கலைக்கழக வளாகத்தில் மூக்குநுழைக்க அனுமதிக்க வில்லை. மேலும் அவர் பணியிலிருந்த காலத்தில் தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை தன் மேஜையின் மீது வைத்திருந்தவர்.
தன் மரணத்திற்கு பின் தன் அஸ்தியை பல்கலைகழக வளாகத்தில் தூவவேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர்.
அப்படியென்றால் தான் பணிசெய்த பல்கலை கழகத்தின் மீது எவ்வளவு பெரிய அன்பும் ஈடுபாடும் இருந்ததை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்?
கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் குப்பம் என்கிற பகுதியில் "திராவிடியன் யூனிவேர்சிட்டி" என்கிற பெயரில் பல்கலைகழகத்தை உருவாக்கி, பிற்பாடு கேரள அரசிடமே ஒப்படைத்து விட்டார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதரை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்த தினம் இன்று(1925)*
ஜூன் 29, வரலாற்றில் இன்று.
தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்த தினம் இன்று(1925).
நாமக்கல்லில் பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81ஆவது வயதில் (2006) காலமானார்.

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.*
ஜூன் 29, வரலாற்றில் இன்று.
இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.
இவர் 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவர் பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நண்பர் ஆவார். புள்ளியியல் மீதான ஆர்வமும் இவருக்கு அதிகம்.
கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். மகலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.
அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகலனோபிஸ் 79வது வயதில் (1972) மறைந்தார்.

*ஜூன் 29, வரலாற்றில் இன்று:சர்வதேச புலிகள் தினம் இன்று.*
ஜூன் 29, வரலாற்றில் இன்று.
சர்வதேச புலிகள் தினம் இன்று.
புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. புலிகள் இருந்தால் தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாத போது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன.

ஞாயிறு, 28 ஜூன், 2020
TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

Retired judge Justice K Chandru made this statement with regard to the case of the father-son duo (Jayaraj and Emmanuel Benicks) who died in police custody in Thoothukudi

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)