தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் மூன்று அம்சக்கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையின் மீது செயல்முறைகள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும்! தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியமும் விரைந்து வழங்கப்படல் வேண்டும்!
வியாழன், 16 ஜூலை, 2020
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் மூன்று அம்சக்கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையின் மீது செயல்முறைகள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும்! தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியமும் விரைந்து வழங்கப்படல் வேண்டும்!*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் மூன்று அம்சக்கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையின் மீது செயல்முறைகள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும்! தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியமும் விரைந்து வழங்கப்படல் வேண்டும்!
*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்*
*தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.*
+2 results:
முதலில் நீங்கள் கீழ்கண்ட லின்ங் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க
http://tnresults.nic.in/
http://dge2.tn.nic.in/
http://tnresults.nic.in/
http://www.dge.tn.gov.in/index.html
அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2020 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க
அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்
அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்
இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்
மேலும் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020 தற்காலிகமானது என்பதால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து அசல் மதிப்பெண் தாளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்களின் Mobile எண்ணுக்கு SMS மூலமும் வெளியிடப்பட உள்ளது.
*_12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது._
*மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி*

*🌐ஜூலை 16,* *வரலாற்றில் இன்று:கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்* *94 குழந்தைகள் கருகிய தினம் இன்று (2004).*
ஜூலை 16, வரலாற்றில் இன்று.
மறக்க முடியாத சோக தினம் இன்று.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்
94 குழந்தைகள் கருகிய தினம் இன்று (2004).
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி இந்தக் குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்படுகிறது.
பள்ளியின் முன்பாக 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து வைத்து, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அனைத்துப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவத்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று மவுன அஞ்சலி செலுத்துவார்கள். இதனைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் மவுன ஊர்வலமாக மகாமகம் குளத்துக்குச் சென்று, தீவிபத்தில் இறந்த குழந்தைகள் 94 பேரின் நினைவாக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர்

*🌐ஜூலை 16, வரலாற்றில் இன்று:சர்வதேச பாம்புகள் தினம்.*
ஜூலை 16, வரலாற்றில் இன்று.
சர்வதேச பாம்புகள் தினம் இன்று.
உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ.
ஆனாலும் அவற்றில் உலகம் முழுவதிலும் வெறும் 600 வகைப்பாம்புகளே நஞ்சுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றிலும் வெறும் 200 வகைப்பாம்புகளே மனிதனைக் கொல்லும் அளவு விஷம் உடையவை.
மற்றவையெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. மனிதனின் இடையூறு இல்லாமல் எந்தப் பாம்பு வகைகளும் மனிதனைச் சீண்டுவதே இல்லை.
பாம்புகள் சுமார் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மூதாதையர் இனத்திலிருந்து பரிணமித்து உருவானவை. ஆனால் மனிதன் வெறும் இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் ஆடையின்றித் தோன்றியவன்.
பாம்புகள் பற்றிய பழமொழியால் அவற்றின் மீது தீரா வெறுப்பிலுள்ள நமக்கு அவற்றின் படைப்பின் காரணத்தை உணர்ந்தால் பாம்பின்மீது மரியாதையே வரும்.
"பாம்பு என்றால் படையும் நடுங்கும்"
"காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது"
"பாம்பைக் குட்டியிலேயே கொன்றுவிடு"
இதுவெல்லாம் பாம்பினைப் பற்றிய தமிழ் பழமொழிகள்.
அப்படி என்னதான் பயம் எனத் தெரியவில்லை. ஆனால் அதன்மீதான பயம் மனிதனுக்கு இன்றுவரை நீங்கவில்லை.
பயத்தின் இன்னொரு வடிவம் சரணாகதி அதன்விளைவுதான் பாம்பு வழிபாடு.
பாம்பை வழிபடுகிறோம.் அதுவே நேரில் வந்தால் கல்லையும் கம்பையும் தூக்குகிறோம்.
ஒருபோதும் பாம்புகள் மனிதனைத் தேடித்தேடி, துரத்தித்துரத்தி எல்லாம் இதுவரை கடித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மனிதனைக் கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் விஷப்பாம்புகளின்
இரை பட்டியலில் மனிதன் ஒருபோதும் இல்லை.
மனிதனைக் கடிப்பதென்றால் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே கடிக்க முயலும். அதுவும் நாம் அதை எந்தவித்த்திலாவது தாக்க முயன்றால் தான். முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது.
கடிக்கிற எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. உலகம் முழுவதும் 2,968 வகையான பாம்புகள் இருக்கிறது.இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை.
அவைகள்
நாகபாம்பு(நல்லபாம்பு)
கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.
இவைகளில் நாகப்பாம்பானது,
பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நாகபாம்பு தமது தலையை உயர்த்தி படம் எடுக்கும்.ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வளரும். நாகப்பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இவை எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும்.
விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது மிகத்தவறான கருத்தாகும். பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனுக்கு சாவைக்கொண்டு வந்துவிடுகிறது.
பாம்புகள் பற்றிய மக்களின் தவறான கருத்துகள் உலவுகிறது அவை.
நாகப்பாம்பு மகுடியின் இசைக்கு தக்கபடி படம் எடுத்து ஆடும்.
நாகப்பாம்பும் சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பாம்புகள்.
நாகப்பாம்பு நீண்டநாள் யாரையும் தீண்டாமல் இருந்தால் தலையில் நாகமாணிக்கம் உருவாகும்,அதன் ஒளியில் இரவில் இரைதேடும்.
நாகப்பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவரை பழி வாங்கும் வரை காத்திருக்கும்(இந்த அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு நன்றி)
பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.
மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் வெண்குஷ்டம் வரும்.
பச்சைப் பாம்பு கண்களை குறிபார்த்து கொத்தும்.
கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும்.
இவ்வாறு நம்பப்படுகிற எதுவுமே உண்மையல்ல..
அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது.
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் சுமார் முப்பதாயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் சுமார் நாற்பதாயிரத்திற்கு மேல் சுருட்டை விரியன் விஷம் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்.

புதன், 15 ஜூலை, 2020
*🌐ஜூலை 15, வரலாற்றில் இன்று:தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று.*
ஜூலை 15, வரலாற்றில் இன்று.
தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று.
நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் (ஜூலை 15, 1876) பிறந்தார். நாகப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறந்த மாணவராக விளங்கினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால், கல்வி தடைபட்டது. தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றார்.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங்களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் கற்றார். மாதந்தோறும் ரூ.50-க்கு புதிய நூல்கள் வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.
தமிழ்ப் பற்றால், ‘வேதாச்சலம்’ என்ற தனது பெயரை ‘மறைமலை’ என்று மாற்றிக்கொண்டார். சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, அதன் பெயரை பொதுநிலைக் கழகம் என மாற்றினார்.
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருக்குறளாராய்ச்சி, தமிழர்மதம், வேதாந்த மதவிசாரம் என பல நூல்களைப் படைத்தார். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரது பேச்சு பேச்சாளர்களை உருவாக்கியது; எழுத்து படைப்பாளிகளை ஈன்றது. ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்துகொள்ள ‘மிஸ்டிக் மைனா’, ‘தி ஓரியன்டல் விஸ்டம்’ ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்தார்.
கோயில்கள், பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
வடமொழியை எதிர்க்காமல் வடமொழிக் கலப்பை மட்டுமே எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் மூடத்தனமான சடங்குகளை மட்டுமே எதிர்த்து நடுநிலை தவறாமல் வாழ்ந்த பண்பாளர். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 74 வயதில் (1950) மறைந்தார்.

*✈️ஜூலை 15, வரலாற்றில் இன்று:போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.*
ஜூலை 15, வரலாற்றில் இன்று.
போயிங் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.
போயிங் நிறுவனம் ஜூலை 15, 1916-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் வில்லியம் எட்வர்ட் போயிங் என்பவரால் 'பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ' என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் கடல் வானூர்திகளே. 1917-ம் ஆண்டு மே மாதம் 'போயிங் வானூர்தி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.
1927-ம் ஆண்டு போயிங் நிறுவனம் போயிங் வான் போக்குவரத்து கழகம் என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை பசிபிக் வான் போக்குவரத்து மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் யுனைடட் வானூர்தி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான 'போயிங் 247' 1933-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக பார்க்கப்படுகிறது. இரண்டு என்ஜீன பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது.

*🌷ஜூலை 15,* *வரலாற்றில் இன்று:கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.*
ஜூலை 15,
வரலாற்றில் இன்று.
கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.
காமராஜர் பிறந்த நாள். இதையொட்டி, விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து ஒரு பகிர்வு இது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் எழுதிய இக்கட்டுரை விகடனில் 11.09.1966 இதழில் வெளியானது.
---------------------------------------------------------------------
காந்தி வழியில் காமராஜ்!
காமராஜரிடம் பெருமதிப்புக் கொண்டவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். விகடனில் காமராஜ் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். குறிப்பாக, காமராஜர் 1966-ல் முதன்முறையாக அந்நிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது, அது பற்றி, 'சோஷலிச நாடுகளில் மக்கள் தலைவர்' என்னும் தலைப்பில் விகடனில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையின் முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு துளி இங்கே...
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டின் சுதந்திர நாள், தமிழ்நாட்டின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய திருநாள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், அதுநாள் வரை கண்டிராத மக்கள் கூட்டத்தை அன்றுதான் கண்டது. சென்னை நகர வீதிகளுக்கு எண்ணிலடங்கா வாகனங்களைச் சுமக்கும் வாய்ப்பு, அன்றுதான் கிட்டியது. கண் ணுக்கெட்டிய தூரம் வரை சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், கார் களும், குதிரைகளுமே காட்சி அளித்தன.
இத்தனையும் எதற்காக?
முதன்முறையாக அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டுச் சென்னை திரும்பிய, இந்தியாவின் இணையில்லாத் தலைவர் காமராஜ் அவர்களை வரவேற்கத்தான்! சோஷலிச நாடுகளுக்குச் சென்று திரும்பிய மக்கள் தலைவர் காமராஜ் அவர்களுக்குச் சென்னை மாநில மக்கள் மகத்தான வரவேற்பளித்தார்கள். விண் அதிர 'வாழ்க கோஷம்' ஒலிக்க, வானிலிருந்து மலர் மாரி பொழிய, சென்னை நகர வீதிகளிலே பவனி வந்தார் பாரதத் தலைவர்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலே நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசும் போது தலைவர் காமராஜ் சொன்னார்: "சோவியத் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, யூகோஸ்லேவியா போன்ற நாடுகளுக்கும் நான் சென்று வந்தேன். அந்த நாடுகளுக்கெல்லாம் வேடிக்கை பார்க்க, ஊர் சுற்றிப் பார்க்க நான் போகவில்லை. அங்கெல்லாம் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்னென்ன வசதிகளை மக்கள் தேடிக்கொள்கிறார்கள், என்னென்ன வசதிகளை அரசாங்கம் தேடிக் கொடுத்துள்ளது என்று பார்க்கவே போனேன்."
ஆமாம்! காமராஜ் அவர்கள், ஏதோ பொழுதுபோக்குக்காகவோ, உல்லாசப் பிரயாணம் செய்யவேண்டும் என்றோ அந்நிய நாடுகளுக்குப் போகவில்லை. அந்நாடுகளைக் கண்டு, அந்நாட்டு மக்களிடம் பேசி, அதன் மூலம் நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று அறியவே சென்றார்.
காமராஜ் அவர்களின் அந்நிய நாட்டு விஜயத்தில் எழுந்த முதல் பிரச்னை, அவருடைய உடைப் பிரச்னைதான். காமராஜ் அவர்கள் எந்த உடையில் செல்வது என்பதுதான் எல்லோருக்கும் பெரும் பிரச்னையாக இருந்தது.
"ரஷ்யாவில் குளிர் மிகவும் அதிகம். எனவே கோட்டும் பான்ட்டும் போட்டுக்கொண்டு தான் செல்லவேண்டும்."
"ஓவர் கோட் இல்லாமல் அங்கு போவதா? அது எப்படிச் சாத்தியம்?"
"கம்பளித் துணிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்!"
இப்படி, நண்பர்கள் எல்லோ ரும் பலவித ஆலோசனைகள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால், இந்த உடை விஷயம் காமராஜ் அவர்களைப் பொறுத்த வரை ஒரு பிரச்னையாகவே இருக்கவில்லை. தாம் வழக்கமாக அணியும் அதே வேஷ்டி சட்டையுடன்தான் போவது என்று தீர்மானித்துவிட்டார். இது பலருக்குப் பெரிய அதிசயமாக இருந்தது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அவரை நன்கு அறிந்தவர்களுக்கு, இதில் வியப்புக்கு இடமில்லைதான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர், தமிழக முதல் அமைச்சரானபோது பலர் அவரிடம் மாறுதல்களை எதிர்பார்த்தார்கள்.
'இனி, காமராஜ் சர்க்கார் மாளிகைக்குப் போய்விடுவார்; புதிய கார் வைத்துக்கொள்வார்; உடையில்கூட ஏதாவது மாறுதல் இருக்கும்' என்று அநேகர் நினைத்தார்கள். ஆனால், அவர் எதையும் மாற்றவில்லை. முதலமைச்சரான பிறகும், வழக்கமாகத் தாம் வசிக்கும் திருமலைப் பிள்ளை வீதியில் உள்ள வீட்டிலேயேதான் இருந்தார். அதற்கு முன்பு தாம் வைத்திருந்த அதே வண்டியைத்தான் உபயோகப்படுத்தினார். சட்டை மாறவில்லை; வேஷ்டி மாறவில்லை; துண்டும்கூட மாறவில்லை.
காமராஜ் அவர்கள் தமது தோற்றத்திலே எந்தவிதமான மாற்றத்தையும் விரும்பியதில்லை. அவர் விருப்பமெல்லாம், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதுதான்.
வழக்கமாகத் தாம் அணியும் ஆடையிலேயே வட்ட மேஜை மகாநாட்டிற்குக் காந்திஜி சென்றார். அதன் பின்னர், அந்த முறையில் அந்நிய நாட்டுக்குச் சென்ற தலைவர், காமராஜ் அவர்கள்தான்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)