ஜூலை 20,
வரலாற்றில் இன்று.
தற்காப்புக்கலை வல்லுநர் & ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ நினைவு தினம் இன்று.
1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்
கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது Chinese community அதை எதிர்த்தது. சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக் கலையை கற்பிக்க வேண்டாம் என்று அறிவித்தது. இதைத் தவிர்த்தால் லீ Wong Jack Man னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது. லீ இதை ஏற்றுக் கொண்டார்.
ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபலமான martial arts வீரராக இருந்தவர். லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலை மூடிவிடவேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இருவரும் மோதிக்
கொண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடையே நடை பெற்ற கடுமையான இந்த மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப் பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.
இந்த மோதலுக்கு முன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்கள் ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்கள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி.
25 வயதுவரை ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் லீ ஹோய்-சுவென் என்ற நடிகருக்கு 1940ஆம் ஆண்டு புரூஸ்லீ பிறந்தார். இயற் பெயர் லீ ஜுன்பேன். பின்னர் இவரது குடும்பம் சீனா திரும்பியதும், பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18ஆவது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலீஸ் பிரச்சனை ஏற்படவே, பெற்றோர் அவரை
சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.
அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லி, வாஷிங்டன் பல்கலை கழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே, தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும்
‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன் னார் லீ.
1971இல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலகெங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர்
வெளியான ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ என அவர் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனார் புரூஸ்லீ. ‘‘அவர் எடுத்துக்கொண்ட
வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள்
சொன்னாலும், 33ஆவது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடவே இல்லை.
வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகளை
உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!
வேகம் என்பதன் அர்த்தம் தேடிப்பார்த்தால் அதில் புரூஸ் லீ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும், இவரது வேகத்தை கேமராவுக்குள் கொண்டு வரமுடியாமல் 24 என இருந்த பிரேமின் அளவை 34ஆக மாற்றிய ஹாலிவூட் வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றன,
புரூஸ்லீ ஒரு அதிசயப் பிறவி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவரது மிகத்துல்லியமான சண்டையிடும் முறைதான் காரணம் என்பதும் யாவரும் அறிந்ததே,
ஒரு நெஞ்சாக்கில்
தீப்பற்றவைக்கும் காகிதம் ஒட்டப்படுகின்றது பின் அவரது அதிவேக நெஞ்சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக்கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறியப்படும் தீப்பற்றாத தீக்குச்சிகளை தனது கவனம் சிதறாத நெஞ்சாக் சுற்றுகை யின் மூலம் பற்ற வைக்கின்றார்,
இது யாரால் முடியும், நிச்சயமாக அவர் ஒரு அதிசயப் பிறவிதான்!!! கொஞ்சங்காலம் தான் வாழ்ந்தாலும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்து விட்டார் மாஸ்டர் புரூஸ் லீ.