தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)
----------------------------------------
சமூக ஊடகக் குழுக்கூட்டம்
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டசமூக ஊடகக் குழு கூட்டம் (01.05.2023 ) பிற்பகல் 12.30 மணிக்குபரமத்தி-வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வலைத்தளத்தின் (blogspot) பொறுப்பாளர்களாக மாவட்டத் துணைச்செயலாளர் திரு. வெ.வடிவேல், ஒன்றியச் செயலாளர்கள் திரு.இர.மணிகண்டன் (கபிலர்மலை),திரு.க.சேகர்(பரமத்தி) ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது .
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த புலனக்குழுக்களின்(Whatsup groups) பொறுப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.கோ.தியாகராசன் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
3.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த முகநூல் (Facebook) பக்கங்களின் பொறுப்பாளர்களாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் திரு.த.தண்டபாணி ,தகவல் தொழில் நுட்ப அணியின் துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
4.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வலையொளி தளத்தின் (YouTube)பொறுப்பாளராக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.தண்டபாணி ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார், மாவட்டத் துணைச்செயலாளர் திரு.சி.செயவேலு ,நாமக்கல் ஒன்றியப் பொருளாளர் திரு.மு.சசிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றுகிறது.
5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்தின் கீச்சகம் (Twitter)பொறுப்பாளராக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.
6.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் பள்ளி மற்றும் கல்வித்தகவல் வலைத்தளம் மற்றும் மின்னணு செயலி சார் பயிலரங்கு 14.05.2023 அன்று நடத்துவது என்று இக்குழு முடிவாற்றியது.
//உண்மை நகல்//
-மெ.சங்கர்
மாவட்டச்செயலாளர்